பேச்சு:போதி தருமன்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic போதிதருமர் கால பல்லவநாடு

விக்கிப்பீடியாவில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம். அதற்கான இடம் இதுவல்ல. காண்க - விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும். இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:27, 20 சூலை 2011 (UTC)Reply

குங்ஃபூ, கராத்தே போன்றவை தமிழகத்தில் உருவாகி சீன சென்றன என்பது ஒரு ஊகமே, நிறுவப்பட்ட உண்மையல்ல. எனவே அவற்றின் பெயரை இங்கு பயன்படுத்தக் கூடாது. தமிழரிடம் இருந்த பழம் தற்காப்புப் கலைகள் பற்றிய “தகவல்”களை மட்டும் சேர்க்க வேண்டுமெனில் தமிழர் தற்காப்புக் கலைகள் என்ற கட்டுரையில் “வரலாறு” எனற தலைப்பிட்டு சேர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:52, 20 சூலை 2011 (UTC)Reply

Sodabottle , this is not an original research. in shoalin temple there was a rockcut. and now also chinese and japanese martial arts teachers come to buddha kanchi temple and see that sculptures. i can't see that shoalin rockcut. but when i was studying in kanchi i saw chinese and japanese martial arts teachers. and also in this linkவிக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும், they said that participants can use their practical knowledge. when i was studying karate i hear this from my karate teacher. and chinese rockcut is one of the proof. in what basic you say it is research? and i'll extend this essay. i request you to hold your removing essay request. and again, this is not the research. தென்காசி சுப்பிரமணியன்

சுப்பிரமணியன், “practical knowledge" பயன்படுத்தலாம் என்பது ஆய்வு முடிவுகளுக்கானதல்ல. இது போன்ற வரலாற்று முடிவுகளை நாம் விக்கிப்பீடியாவில் செய்ய இயலாது. சிற்பங்கள் இருக்கலாம். ஆனால் அவை இத்தொடர்பை தான் சொல்கின்றன என்ப்தை வரலாற்றாளர்கள் சொல்ல வேண்டும். chinese rockcut உள்ளது தகவல், அதனால் குஃங்பூ இங்கிருந்து அங்கு போனது என்று சொல்வது research. நீங்களே சொல்வதென்றால் விக்கி நூல்கள் திட்டத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையாக எழுதுங்கள். விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலை தரவு தளம். பிற ஊடகங்களில் உள்ளதை இங்கு தொகுத்து தருவது. எனவே இது போன்ற உங்கள் முடிவுகளை ஆய்வுக் கட்டுரையாக்கி விக்கி நூல்களில் இணைப்பதே பொருத்தமானது.--சோடாபாட்டில்உரையாடுக 08:02, 20 சூலை 2011 (UTC)Reply
நான் உங்கள் முடிவினையும், தகவல்களையும் கேள்விக்குள்ளாக்கவில்லை. விக்கிப்பீடியா இதற்கு தளமல்ல சகோதரத் திட்டமன விக்கி நூல்களே பொருத்தமான இடம் என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 08:09, 20 சூலை 2011 (UTC)Reply

விக்கி நூல்கள் , ஆய்வுக் கட்டுரை எழுதப்படும். ஆனால் ஓன்றில் மட்டும் ஐயம்.

"chinese rockcut உள்ளது தகவல், அதனால் குஃங்பூ இங்கிருந்து அங்கு போனது என்று சொல்வது research." என்றுள்ளீர்.

ஆனால் சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

இதை தகவலென்பதை விட ஆதாரமென்பதே சரி. then what basic you say it is research? தென்காசி சுப்பிரமணியன்

இந்தத் தகவலை வரலாற்று நூல்களில் பதிவு செய்துள்ளார்களா? பிற ஆய்வாளர்கள்/வரலாற்றாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்களா? என்பது கேள்வி. முதல் வெளியீடு இங்கிருக்க முடியாது. கல்வெட்டு X சொல்கிறது, அது இதனைக் குறிக்கிறது என்று "நானோ நீங்களோ” சொல்வதே ஆய்வு. (கல்வெட்டு ஆய்வு) கல்வெட்டில் உள்ளதை interpret செய்வது research. கல்வெட்டு சொல்வதை பல்லவனோடு இணைப்பது வரலாற்று ஆய்வு. இதனை வேறு யாராவது செய்து, ஆய்விதழ்களில் நூலகளில் இட்டிருக்க வேண்டும். நாம் செய்ய இயலாது. விக்கிப்பீடியாவில் என்ன சொல்லலாம் - “இந்தக் கல்வெட்டில் இப்படி உள்ளது” என்று மட்டும் குறிப்பிடலாம் (தமிழர் தற்காப்புக் கலைகள் கட்டுரையில் இதனை மட்டும் தாராளமாகக் குறிப்பிடலாம். ஆனால் நூலாதாரங்களுடன் குறிப்பிடவேண்டும்). இது தகவல், பிற அனைத்தும் ஆய்வும் முடிவும். இந்த வரையறை நமக்கென்று இல்லை, ஒரு புகழ்பெற்ற வரலாற்றாளர் வந்து வேறெங்கும் வெளியாகாத முதல் முடிவினை விக்கிப்பீடியாவில் எழுத முற்பட்டாலும் இதே வரையறையால் தடுக்கப்படுவார் --சோடாபாட்டில்உரையாடுக 09:12, 20 சூலை 2011 (UTC)Reply

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இக்கட்டுரையை நீக்கத் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனை நீக்குகிறேன். பேச்சுப் பக்கத்தை பயனரின் மேலதிக உரையாடலுக்காக இப்பக்கத்தை விட்டுவைக்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:04, 20 சூலை 2011 (UTC)Reply

surya prakash, குங்ஃபூவை உருவாக்கிய பல்லவனின் உட்தொகுப்பு சேர்க்க படும் முன்பே கட்டுரை விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்களுக்குட்பட்டுவிட்டது. அதுவே என் கேள்வி. that's why i told sodabottle to don't remove the essayதென்காசி சுப்பிரமணியன்

சுப்பிரமணியன், நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை கீளே தந்துள்ளேன் (விக்கி நூல்களில் இட பயன்படுத்திக் கொள்ளுங்கள்). இது எப்படி புத்தாக்க வகையில் வருமென்பதற்கான விளக்கத்தையும், அதனால் ஏன் இதனை இங்கு இட முடியாதென்பதையும் மேலே விளக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:15, 20 சூலை 2011 (UTC)Reply
சுப்பிரமணியன்; ஒன்றும் சிக்கலில்லை. நீங்கள் இக்கட்டுரையை இங்கேயே தகுந்த ஆதாரங்களோடு எழுதுங்கள். பொறுத்தமாக இருப்பின் கட்டுரையாக மாற்றிவிடலாம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:21, 20 சூலை 2011 (UTC)Reply
ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Bodhidharma கட்டுரையைக் காணுங்கள். அங்கு இதே விசயம் பற்றி எப்படி கையாளப்பட்டுள்ளது என்று பாருங்கள். போதி தருமன் இங்கிருந்து சீனா சென்று ஷாலின் துறவிகளுக்கு தற்காப்புக் கலையினைக் கற்றுத் தந்தார் என்று மரபு உள்ளது. ஆனால் போதி தருமன் பல்லவரா, அவர் தான் ஷாலின் குங்ஃபூ (அனைத்து குங்ஃபூ அல்ல, இவ்வகை மட்டும்) கற்றுத் தந்தாரா என்பது குறித்து ஆய்வாளர்களிடையே நிகழும் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவெ இது போலவே தமிழ் விக்கியில் உள்ள போதி தருமன் கட்டுரையிலும் பதிவு செய்யுங்கள். மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால் அவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 10:41, 20 சூலை 2011 (UTC)Reply

விக்கிநூல்கள், பொதுவாக பாடநூல்கள் போன்றவற்றை எழுதுவதற்கே உகந்த தளமாக இருக்கும். புத்தாய்வுகளை அங்கே இடுவதும் பொருத்தமாக இருக்காது. விக்கி என்றாலே ஒரு நம்பகத்தன்மை உள்ளது. எனவே, எல்லா விக்கித்திட்டங்களிலும் நிறுவபட்ட விசயங்களை மட்டும் எழுதுவது நன்று--இரவி 10:48, 20 சூலை 2011 (UTC)Reply


நீக்கப்பட்ட உள்ளடக்கம்

தொகு

தற்காப்புக்கலைகளின் பெயர்க்காரணம்

தொகு

1.குங்ஃபூ (குங் + ஃபூ)

குங்-கை, ஃபூ-வெற்று.

2.கராத்தே (கரா + தே)

கரா-கை, தே-வெற்று.

குங்ஃபூ என்றால் வெற்றுக்கைகளை மட்டும் கொண்டு செய்யும் தற்காப்புக்கலை.


பல்லவர் வரலாறு

தொகு

முற்காலப் பல்லவர்கள்

1.சிம்ஹவர்மன்
2.கந்தவர்மன்
3.விஷ்ணுகோபன் ( கி.பி. 340இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்)
4.குமாரவிஷ்ணு I
5.கந்தவர்மன் II
6.வீரவர்மன்
7.கந்தவர்மன் III
8.சிம்ஹவர்மன் II
9.கந்தவர்மன் IV
10.நந்திவர்மன் I
11.குமாரவிஷ்ணு II
12.புத்தவர்மன்
13.குமாரவிஷ்ணு III
14.சிம்ஹவர்மன் III

பிற்காலப் பல்லவர்

1.சிம்மவிஷ்ணு (கிபி 555 - 590)

பதிவுகள்

தொகு

1.கல்வெட்டு

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

7. 28 குருமார் வரிசை

Śākyamuni Buddha
1.Mahākāśyapa Móhējiāyè 摩訶迦葉
2.Ānanda Ānántuó 阿難陀
3.Śāṇavāsa Shāngnàhéxiū 商那和修
4.Upagupta Yōupójúduō 優婆掬多
5.Dhṛṭaka Dīduōjiā 提多迦
6.Miccaka Mízhējiā 彌遮迦
7.Vasumitra Póxūmì 婆須密
8.Buddhānandi Fútuónándī 浮陀難提
9.Buddhamitra Fútuómìduō 浮陀密多
10.Pārśva Pólìshīpó 婆栗濕婆
11.Puṇyayaśas Fùnàyèshē 富那夜奢
12.Ānabodhi / Aśvaghoṣa Ānàpútí 阿那菩提
13.Kapimala Jiāpímóluó 迦毘摩羅
14.Nāgārjuna Lóngshù 龍樹
15.Kāṇadeva Jiānàtípó 迦那提婆
16.Rāhulata Luóhóuluóduō 羅睺羅多
17.Saṅghānandi Sēngqiénántí 僧伽難提
18.Saṅghayaśas Sēngqiéshèduō 僧伽舍多
19.Kumārata Jiūmóluóduō 鳩摩羅多
20.Śayata Shéyèduō 闍夜多
21.Vasubandhu Shìqīn 世親
22.Manorhita Mónáluó 摩拏羅
23.Haklenayaśas Hèlèyènàyèzhě 鶴勒夜那夜者
24.Siṃhabodhi Shīzǐpútí 師子菩提
25.Vasi-Asita Póshèsīduō 婆舍斯多
26.Puṇyamitra Bùrúmìduō 不如密多
27.Prajñātāra Bānruòduōluó 般若多羅
28.Bodhidharma Pútídámó 菩提達磨


8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது

மேலும் அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றென்னிவிடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதிதர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

குங்ஃபூ பல்லவனை நிறுவுவோர் வாதங்கள்

தொகு

1. மேலுள்ள (1-3) பதிவுகளை கொண்டு சோலின் குங்ஃபூவை உருவாக்கிய தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா காஞ்சியை ஆண்ட பல்லவப் பேரரசரின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது.

2. தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

3. மேலும் போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

4.கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா)

5.கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550)

மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது மிகப்பெறும் கால ஒற்றுமை.

மேலும் பார்க்க

தொகு
1.en:Bodhidharma
2.en:Gautama Buddha
3.போதி தருமன்

உசாத்துணை

தொகு
1.களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
2.பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
3.பல்லவர் வரலாறு.

7 aam arivu

தொகு

The Tamil film 7aam arivu made from this story.

tamil film

7 aam arivu

தொகு

The Tamil film 7aam arivu made from this story. T.Ramar.Kallakurichi

ஏழாம் அறிவு(தமிழர் நன்றி மறந்தவர் அல்ல)

தொகு

இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் தமிழர்கள் போதிதருமனை மறந்ததாக கூறுகின்றனர். அதற்கு மேல் யோசிப்பது இல்லை.

  1. ஒன்றை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதிதருமனின் காலத்தில் களப்பிரர் ஆட்சியின் இருண்ட காலம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆண்ட மூவேந்தர் வரலாறே தமிழகத்தில் மறைக்கப்பட்டது. இதில் புதியவர்களான பல்லவர் வரலாற்றை எங்கு பாதுகாப்பது.
  1. மேலும் போதிதருமனை போல் இங்கு பல பேர் தற்காப்புக்கலையிலும், மருத்துவத்திலும் சிறந்திருந்தனர். உதாரனத்திற்கு ஒருநாட்டினர் அனைவரும் தற்கப்புக்கலைகளில் சிறந்தவர்கள் என்றிருக்கையில் அங்கே ஒருவன் போய் நான் தற்காப்புக்கலைகளில் சிறந்தவன் மார்தட்ட முடியாதல்லவா.சீனாவில் மக்களுக்கு இவர் சோலின் முறை குங்ஃபூவை அறிமுகப்படுத்தியதால் அவரை அங்கே கொண்டடுகின்றனர். இங்கே அது களரி என்ற பெயரில் போதிதருமன் முந்திய கலம் தொட்டே இருந்து வருகிறது. அதனால் இங்கே அவரை நினைவில் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் பற்றிய கட்டுரையை விரிவுப்படுத்த உதவியது அனைத்தும் தமிழ் புத்தகங்களில் இருந்தே.

அதனால் தமிழர் போதிதருமனை மறந்ததாக தயவு செய்து எவரும் கருதவோ இக்கருத்தை பரப்பவோ வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:44, 31 அக்டோபர் 2011 (UTC)Reply

முருகதாசை வரலாற்று ஆசிரியராகக் கொண்டு, ஒரு வெகுஜனத் திரைப்படத்தை வரலாற்று மூலமாகக் கொண்டால் நடக்கும் அபத்தங்களில் இதுவும் ஒன்றே :-). --சோடாபாட்டில்உரையாடுக 05:48, 31 அக்டோபர் 2011 (UTC)Reply

இந்தக் கட்டுரையில் அபத்தமான ஆராய்ச்சி நடக்கிறது. எந்தவொரு முறையான வரலாற்று ஆவணமும் ஆதாரமாகச் சுட்டப்படவில்லை. போதி தர்மர் ஒரு தமிழரென்பதற்கு எந்தவொரு முறையான ஆதாரமும் இல்லை.--பாஹிம் 05:55, 5 நவம்பர் 2011 (UTC)Reply

கட்டுரையில் “தமிழர்” என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது?.

”தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது”

இதுவே கட்டுரையில் உள்ள வரி. மிகக் கவனமாக தமிழர் என்று ஊகிக்காமல், வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியதை மட்டும் மீண்டும் சொல்கிறது. அதுவும் அறுதியிட்டு உண்மையெனக் கூறாமல் “கருதப்படுகிறது” என்று சொல்கிறது. இக்கட்டுரையில் அறுதியிட்டு எதையும் சொல்லாமல் “கருதப்படுகிறது”, “நிறுவுவோர் வாதங்கள்” என்ற பயன்பாடுகளே உள்ளன. இது தான் உண்மை என்று எதுவும் தரப்படவில்லை. “அபத்தமான ஆராய்ச்சி” போன்ற சொற்பிரோயகங்களை பயன்படுத்துவதை அருள் கூர்ந்து தவிருங்கள். பின்வரும் சான்று நீங்கள் இட்டிருக்கும் சான்று தேவை வார்ப்புருக்களை நீக்கப்போதுமானது. எனினும் பல்லவர் “தமிழரா” இல்லையா என்பதில் கூட சர்ச்சை இருப்பதால், “பல்லவர்”, “காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்”, “பல்லவ அரசனின் மூன்றாவது மகன்” என மிகப் பெரும்பாலான மூன்றாம் நிலைத் தரவுகள் ஒப்புக் கொள்வதை மட்டும் “கருதுகிறார்கள்” என்ற தந்துள்ளோம். (அரசன் என்பதை இளவரசன் என்று மாற்றி விட்டேன்)

Very little contemporary biographical information on Bodhidharma is available, and subsequent accounts became layered with legend, but most accounts agree that he was South Indian Tamilian and was a Pallava prince from the kingdom of Kanchipuram, the third son of King Sugandha. Bodhidharma left the kingdom after becoming a Buddhist monk and travelled to Southern China.[1]"

--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 5 நவம்பர் 2011 (UTC)Reply

பாஹிம், இங்கே ஏழாம் அறிவு திரைப்படத்தை பர்த்துவிட்டு மக்கள் சில விசயங்களை தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே என் கருத்தை பேச்சு பக்கத்தில் மட்டும் தந்தேன். அதாவது இதை பார்த்தவுடன் தமிழர் நன்றி மறந்தவர் என இங்கு கூறிவருவதே பிரச்சனை.(பல்லவர் தமிழரா என்று இங்கு கூறவரவில்லை) தமிழர் நன்றி மறவாதவர் என்பதையே கூற வந்தேன்.

இதே போல் தமிழ் புத்தாண்டு, சேது பகுதி குறித்த கட்டுரைகளிலும் கட்டுரைப்பக்கத்திலேயே இருதரப்பு முக்கிய வாதங்கள், சான்றுகள் இருப்பதையும் காணலாம். இதை போல் நிறுவப்படாத கட்டுரைகளில் இப்போது உள்ள வாதங்களே நாளை ஆதாரங்களாகவும் மாறக்கூடும். அதனால் இதைப்போலுள்ள கட்டுரைகளில் இரு தரப்பின் முக்கிய வாதங்களையும் அதற்கு அவர்கள் காட்டும் சான்றுகளையும் நெட்டி முழக்காமல் குறுகியதாக தருவது இங்கு இன்றியமையாதது. இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது. நான் கூறியதில் தவறிருந்தால் பொருக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் 09:00, 5 நவம்பர் 2011 (UTC)Reply

ஒரு கேள்வி

தொகு

போதி தருமர் பாரசீகரென அவரது சமகாலத்தவரான யாங் சுவான்சீ கூறும் அதேவேளை அவர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அவரது மற்றொரு சமகாலத்தவரான தான்லின் கூறுகிறார். ஆங்கில விக்கிக் கட்டுரையில் போதி தருமரின் பிறப்பிடம் பற்றிப் பின்வரும் கூற்று உள்ளது: There have been many different versions about his place of birth, one being that he is from Kanchipuram in Tamil Nadu, India. பின் வந்த சிலர் அவரைப் பல்லவ மரபினர் என்கின்றனர். எனினும் இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. போதி தருமரின் காலத்தில் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதி பல்லவ ஆளுகையில் இருந்ததா?--பாஹிம் 13:24, 5 நவம்பர் 2011 (UTC)Reply

அவரைப் பல்லவ மரபினர் என்று வரலாற்றாளர்கள் கூறுவதற்கு தான்லினின் ”தென்னிந்தியர்” குறிப்பு மட்டும் காரணமல்ல. பிற்காலக் குறிப்புகள் அவர் காஞ்சியைச் சேர்ந்த இளவரசர் / காஞ்சி அரசனின் மூன்றாம் மகன் என்று கூறுவதும் காரணம். [1]. களப்பிரர் காலத்தின் நாட்டெல்லைகள் வரையறை என்பதும் எங்கும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை--சோடாபாட்டில்உரையாடுக 13:30, 5 நவம்பர் 2011 (UTC)Reply

பதில்கள்

தொகு
பதில்கள்

//போதி தருமரின் காலத்தில் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதி பல்லவ ஆளுகையில் இருந்ததா?//

ஆம். இதற்கான ஊக வரைபடம் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் புத்தகத்தில் உள்ளது. அதில் களப்பிரர் காலத்தில் மூவேந்தர் அவருக்கு கீழ் இருந்ததாகவும், பல்லவர் சுய ஆட்சி செய்ததாகவும் கூறி அந்த படத்தை வரைந்துள்ளார்.

//கடைமகனை தானமளித்தல்//

இதற்கான சான்று பண்டைத்தடயம் புத்தகத்தில் உள்ளது. அதாவது முதலில் பிறந்த மகனை நாடாள வைத்துவிட்டு கடைசியாக பிறந்தவனை புத்தமத போதனை செய்ய அனுப்பிவிடுவர்.

//முதற்பத்தி மற்றும் டான்லின் பதிவுகளில் கந்தவர்மனை இணைத்தவர்கள்//

டான்லின் பதிவுகளில் கந்தவர்மனை இணைத்தவர் thyagu pillai என்ற விக்கிப்பீடியர். இவரிடம் டான்லின் பதிவுகளில் கந்தவர்மன் பெயரிருந்ததா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறியிருந்தார்.

முதற்பத்தியில் கந்தவர்மனை இணைத்தவர் jayarathina madharasan என்ற விக்கிப்பீடியர். அவர் உரைதிருத்தம் செய்யும் போது இதை பற்றி அறியாமல் உள்ளே இருந்ததை முதற்பத்தியில் சேர்த்திருக்கலாம்.

சோலின் கல்வெட்டு

தொகு

இதைப்பற்றி நான் 7 மாதங்களுக்கு முன் ஒரு வார இதழில் படித்திருந்தேன். அப்படி ஒன்று இருப்பதாக இணையத்தில் இல்லை. சோடாபாட்டிலின் பேச்சுப்பக்கத்தை பார்த்த போது பாஹிம் அவரின் சீனாவில் பயின்ற சகோதரர் பற்றி கூறியிருந்தார். அவரிடம் இதை பற்றி கேட்க வேண்டுகிறேன். இதை எழுதிய போது விக்கிமுறைகளை அவ்வளவாக கற்கவில்லை. அப்படி ஒரு கல்வெட்டு இல்லையென தெரிய வந்தால் அதை நீக்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 17:37, 5 நவம்பர் 2011 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன், தான்லினின் பதிவை நான் கட்டுரையிற் சேர்த்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். மேலும், என்னுடைய தம்பி ஷாஒலின் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறான். குங்பூவில் பதக்கமும் பெற்றிருக்கிறான். கல்வெட்டு பற்றிக் கூறியதாக ஞாபகம் இல்லை. கேட்டுச் சொல்கிறேன்.--பாஹிம் 18:14, 5 நவம்பர் 2011 (UTC)Reply

போதிதருமர் கால பல்லவநாடு

தொகு
 
களப்பிரர் கால பல்லவ நாடு. (சிவப்பு நிறம்) பொ.பி. 3-5 நூற்றாண்டு

போதிதருமர் காலத்தில் பல்லவர் மேற்குப்பகுதியை ஆண்டனரா என்று பாஹிம் கேட்டதற்கு நான் ஆம் எனக்கூறி களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) என்னும் நூலை மேற்கோள் காட்டியிருந்தேன். ஆனால் அதில் தென்னிந்தியாவின் கிழக்குப்பகுதியையே பல்லவர் நாடு என்று கா. அப்பாத்துரை வரைந்திருந்தார். நான் மறந்து மேற்கு பகுதியை ஆண்டதாக தவறாகக் குறிப்பிட்டதால் அதை தற்போது கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:27, 2 சூலை 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:போதி_தருமன்&oldid=1692805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "போதி தருமன்" page.