பேச்சு:ஒசூர் ஊராட்சி ஒன்றியம்
ஒசூர் என்பதை 'ஓசூர்' என மாற்றுதல் சம்பந்தமாக.
தொகு- 'ஓசூர்' என்பதே மிகவும் சரியானது.
தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம்.
- பத்திரிக்கை செய்திகள், மற்ற செய்தி ஊடகங்கள், கூகுள் தேடல்களில், விக்கிப்பீடியா கட்டுரைத் தலைப்பைத் தவிர்த்து விக்கிப்பீடியா கட்டுரை உள்ளடக்கங்களில், 'ஓசூர்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஊராட்சி ஒன்றியம் தவிர்த்து, மற்ற அனைத்து அமைப்புகளும் 'ஓசூர்' என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
நன்றி!Helppublic (பேச்சு) 06:29, 22 சூலை 2020 (UTC)
Helppublic ஹொசூர் என்ற கன்னடப் பெயரின் தமிழ் வடிவமே ஒசூர் என்ற பெயராகும். இதை தவறுதலாக ஊடகங்களும் வெளியூர் மக்களும் ஓசூர் என்று அழைக்கின்றனர். என் சொந்த ஊர் ஒசூர் என்பதால் எனக்கு நன்கு தெரியும்--அருளரசன் (பேச்சு) 12:46, 22 சூலை 2020 (UTC)
உங்கள் கருத்தை மதிக்கிறேன். ஆனால், ஓசூர் மாநகராட்சி, ஓசூர் வட்டம், ஓசூர் தேர்வுநிலைப் பேரூராட்சி என்று அனைத்துமே, 'ஓசூர்' பெயர் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் Hosur என்றும், தமிழில் 'ஓசூர்' என்று மருவி அழைக்கப்படுகிறது என்பதாலும், 'ஓசூர் ஊராட்சி ஒன்றியம்' என்பது சரியே.
உதாரணமாக, மருத மரங்கள் நிறைந்த பகுதி 'மருதை' என்பது மருவி, 'மதுரை' என்று அழைக்கப்படுவதும் தாங்கள் அறிந்ததே.நன்றி!Helppublic (பேச்சு) 17:36, 22 சூலை 2020 (UTC)