பேச்சு:ஒற்றி (யாழ்ப்பாணம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
தமிழகத்திலும் இந்த வழக்கம் உண்டு. என் ஊரான தஞ்சாவூரில் கேள்விப்பட்டிருக்கிறேன். பேச்சு வழக்கில் ஒத்திக்கு விடுதல் என்பார்கள். நிலத்தை தற்காலிகமாக கொடுத்து, என் தாய் ஒருவரிடம் கடன் பெற்றார். பணத்தை திருப்பிக் கொடுக்கும் போது, நிலத்தை மீட்போம். இது வீட்டுக்கும் பொருந்தும். மேற்கூறியது சரிதானே? ஒருவேளை இது யாழ்ப்பாணர் பழக்கமெனில், இலங்கையின் இந்தியத் தமிழர் வழி தமிழகத்திற்கு பரவியிருக்கலாம். -தமிழ்க்குரிசில்
- இல்லை. ஒற்றி யாழ்ப்பாணத்தார் வழக்கம் மட்டும் அல்ல. மிகவும் பழைய காலத்தில் இருந்தே தமிழ்நாட்டிலும் இது வழக்கில் இருந்துள்ளது. அடிப்படையில் இரு வழக்கங்களும் ஒன்றுதான். ஆனால், தேசவழமையில், ஒற்றி தொடர்பில் அக்கால யாழ்ப்பாணத்து நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன அவ்வளவே. ---மயூரநாதன் (பேச்சு) 15:51, 21 சூன் 2013 (UTC)
- குத்தகையும் ஒற்றியும் ஒன்றா ? குத்தகை என்பது தமது நிலங்களை வேறு ஒருவருக்கு உற்பத்தில் ஒரு பங்கு கோரி விடுதல் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 15:35, 23 சூன் 2013 (UTC)