பேச்சு:கசினியின் மகுமூது

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Krishnamoorthy1952 in topic தலைப்பு

தலைப்பு தொகு

இவர் கசினி என்னுமிடத்திலிருந்து ஆட்சி செய்த மகுமூது என்பவராவார். எனவே, கசினியின் மகுமூது என்றோ கசினி மகுமூது என்றோ இருப்பதே பொருத்தம். இவரது பெயர் முகம்மது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.--பாஹிம் (பேச்சு) 05:32, 7 நவம்பர் 2014 (UTC)Reply

தமிழகத்து பாடசாலை புத்தகங்களில் கஜினி முகமது என்றே படித்திருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:19, 7 நவம்பர் 2014 (UTC)Reply
தமிழகத்துப் பாடசாலைப் புத்தகங்களில் பிழையாக எழுதியிருக்கிறார்கள். மாறாக, இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பெதுவும் இவரது பெயரை முகம்மது எனக் குறிப்பிடுவதில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட சில புத்தகங்களிலேயே (கீழக்கரையைச் சேர்ந்த மாப்பிள்ளை ஆலிம் அவர்களின் புத்தகங்களில் என்பதாக ஞாபகம்) மகுமூது கஸ்னவீ என்று இவருடைய பெயரைக் குறித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதைத்தான் பிழையான தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. கசினி முகமது என்ற பெயரில் ஒரு மன்னர் இருக்கவே இல்லை. இவர் ஆட்சி செய்த இடத்தின் பெயரே கஸ்னி (Gazni) எனப்படுவது. அவ்விடம் கஸ்னா (Gazna) என்றும் அழைக்கப்படுகிறது. இவரது ஆட்சிப் பகுதியின் பெயர் கஸ்னிப் பேரரசு என்பது. இதனாற்றான், கசினியின் மகுமூது என்று மாற்ற வேண்டுமெனப் பரிந்துரைத்தேன்.--பாஹிம் (பேச்சு) 18:02, 7 நவம்பர் 2014 (UTC)Reply
ஆங்கில கட்டுரையில் Mahmud of Ghazni என்றே உள்ளதால் கசினி முகமது என்ற தலைப்பு சரியாக இருக்கும்.எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 13:09, 29 சனவரி 2015 (UTC)Reply

Mahmud of Ghazni என்பது எப்படி கசினி முகமது ஆகும்? கசினியின் மகுமூது என்று வேண்டுமானால் எழுதலாம்.--பாஹிம் (பேச்சு) 02:00, 5 மார்ச் 2015 (UTC)

Return to "கசினியின் மகுமூது" page.