பேச்சு:கச்சத்தீவு ஒப்பந்தம்
ஒரு பக்கச் சார்பாக எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. இது பற்றிய கருத்து முரண்பாடு பேச்சு:கச்சத்தீவு பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 05:43, 15 செப்டம்பர் 2015 (UTC)
தலைப்பு
தொகுஅலுவலக ரீதியாக கச்சத்தீவு ஒப்பந்தம் என்ற ஒன்று இருத்ததாககத் தெரியாது. இந்திய-இலங்கை அரசுகளின் கடல் எல்லை ஒப்பந்தங்கள் 4 இடம்பெற்றுள்ளன. அவற்றில் கச்சத்தீவு பற்றிய குறிப்பு வருகின்றது. தனியான ஒப்பந்தம் இருந்ததா? இத்தலைப்பு ஊடகங்களின் வசதிக்காக அமைத்த சொல்லாகவே படுகிறது. மேலும், உசாத்துணைகள் ஊடகங்களை மேற்கோளாகக் கொண்டுள்ளன. அரசுடன் தொடர்புபட்ட எவற்றையும் காணவில்லை. குறுங்கட்டுரையாக en:India–Sri Lanka maritime boundary agreements என்பதை உருவாக்கியுள்ளேன், நேரம் கிடைக்கும் போது விரிவாக்குவேன். இதில் உள்ள உசாத்துணை இணைப்பு அலுவலக ரீதியான தகவலைக் கொண்டுள்ளது. CC: @Kanags:, @Fahimrazick: --AntanO 04:58, 25 செப்டம்பர் 2015 (UTC)
ஆம். கச்சதீவு ஒப்பந்தம் என்ற பெயரில் எதுவும் இடம் பெறவில்லை. வெறுமனே இந்திய ஊடகங்கள் தம் பக்கச் சார்பாக எழுதியவற்றின் ஒரு தொகுப்பே இது. நான் இதைப் பற்றிய ஆதாரபூர்வமான சில விடயங்களை பேச்சு:கச்சத்தீவு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவற்றையும் நீங்கள் எடுத்தாளலாம்.--பாஹிம் (பேச்சு) 10:36, 25 செப்டம்பர் 2015 (UTC)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)
நடுநிலைமை மீறல்
தொகுகட்டுரை வேண்டுமென்றே பக்கச் சார்பாகவும் மக்களைத் தவறாக வழி நடத்துவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்துக்கும் கச்சதீவுக்கும் இடையிலான தூரம் அண்ணளவாக இருபத்திரண்டரை கிலோமீற்றர். அதே நேரம், இலங்கையின் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையிலான தூரம் பத்தொன்பது கிலோமீற்றர்.--பாஹிம் (பேச்சு) 03:41, 29 நவம்பர் 2018 (UTC)