பேச்சு:கட்டச்சங்கிலி
- @Dineshkumar Ponnusamy:தமிழில் ஒற்று எழுத்துடன் ஆரம்பிப்பது இலக்கணப் பிழையாகும்.--நந்தகுமார் (பேச்சு) 06:52, 2 நவம்பர் 2018 (UTC)
- ஆமா. ப்ளாக்செயின் என்பதை நான் Blackchain (பிளாக்செயின்) என்பதாகவே நினைத்தேன். ஆங்கில விக்கி இணைப்பைப் பார்த்தபோதே அது Blockchain (புளொக்செயின்) என அறிந்தேன்.--Kanags (பேச்சு) 11:38, 2 நவம்பர் 2018 (UTC)
- @Nan:, இது தமிழ் பெயரே இல்லை. வெறும் வழிமாற்று தான். அதுக்கே இப்படியா? இங்க கொஞ்சம் பாருங்க.. தேடுதலில் சிக்குவதற்காகவே இந்த தலைப்பு வழிமாற்று. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:23, 2 நவம்பர் 2018 (UTC)
- @Dineshkumar Ponnusamy: சில தமிழ் செய்திதாள்களில் தேவையில்லாமலே தமிழை கொலை செய்கிறார்கள். நாம் தவிர்க்கலாமே...சீனாவில் நீங்கள் அளித்துள்ள இந்த கூகிள் இணைப்பு இயங்காது. தேடுதலில் சிக்குவதைக் காட்டிலும் தமிழை சிதைக்காமல் எழுதுவதே சிறப்பானது என்பது எனது கருத்து. நீங்கள் அறியாதது அல்ல.--நந்தகுமார் (பேச்சு) 18:12, 2 நவம்பர் 2018 (UTC)
- கட்டுரையின் தலைப்பை தமிழில் தான் எழுதியுள்ளேன். பரவலாக அனைவரும் ப்ளாக்செயின் என்றே எழுதுகின்றனர். அதற்காகவே இவ்வாறு வழிமாற்று பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். 'ப்' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லில் எழுதியது, தமிழை சிதைக்கும் நோக்கமல்ல. 'ப்' என்ற எழுத்தினில் துவங்கும் பல கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. அவற்றை நீக்கினால் இப்பக்கத்தினையும் நீக்கலாம். நன்றி. கூகிள் தேடுதல் ஒரு எடுத்துக்காட்டே, சீனாவின் பிரபலமான இணையதளமான பைடுவிலும் ப்ளாக்செயின் என்று தேடலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:08, 3 நவம்பர் 2018 (UTC)
- சரி, ஆனால் கட்டுரையிலும் அவ்வாறே எழுதுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.--Kanags (பேச்சு) 03:27, 3 நவம்பர் 2018 (UTC)
- நான் தனியாத்தான எழுதினேன், எங்க உட்டாங்க, ஒவ்வொரு நாளும் ஒருத்தர் வழிமாற்று பக்கத்தை அழிச்சா என்ன செய்ய.. கட்டுரையை வேண்டாம்னா தலைப்போட சேர்த்து அழிச்சிடட்டும்னு தான் இங்க நகர்த்திட்டேன். வேற என்ன செய்ய? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:37, 3 நவம்பர் 2018 (UTC)
- @AntanO: வழிமாற்று இல்லை, இப்போ கட்டுரையே இங்கதான் இருக்கு. தொடரேடுனு தேடுனா மொத்தமா மூன்று பதில்கள் தான். 1. விக்கிப்பீடியா, 2. விக்சனரி, 3. ஒரு பிடிஎப் கோப்பு (அதுலையும் தொடரேடு - ப்ளாக்செயின் பற்றி அல்ல). இப்படி யாருக்குமே தெரியாத இடத்துல புதுசா தமிழ்ல மட்டும்தான் இருக்குன்னு வெச்சா யாருக்குப் பயன்படும். இவ்ளோ நாளா, தமிழ்ல இருக்கனும்னு சொன்னோம், கிரந்த எழுத்து இல்லாம இருக்கனும்னு சொன்னோம், இப்போ எல்லாரும் பயன்படுத்துற சொல்லுல வழிமாற்று கூட வேண்டாம்னு சொல்றோம், நல்லா வருவோம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:39, 3 நவம்பர் 2018 (UTC)
- இங்கு "ப்ளாக்செயின் என்பது காப்புரிமை பெற்ற ஒரு தொழில்நுட்பம்" என்றுள்ளீர்கள். யார், எங்கிருந்து காப்புரிமை பெற்றனர் எனக்குறிப்பிட முடியுமா? வணிகப் பெயராயின் உச்சரிப்பிற்கேற்ப எழுதலாம் அல்லது தகுந்த பெயருக்கு மாற்றப்பட வேண்டும். மேலும், ப்ளாக்செயின் குழப்பமாகவுள்ளது. BlockChain, BlackChain, BlogChain என்றெல்லாம் கருதப்படவுள்ளது. ப் கொண்டு சொல் அமைக்க முடியாது. இல்லை என்றால் "முறையான விளக்கம்" தரவும். --AntanO (பேச்சு) 14:54, 3 நவம்பர் 2018 (UTC)
- இங்கு காப்புரிமை குறித்த தகவலை பார்க்கலாம். யாருக்கும் அப்பெயர் வழங்கப்படாமல் உறுதி செய்துள்ளனர். இது வணிகப்பெயர் அல்ல. கட்டுரை தொடரேடு பக்கத்தில் நகர்த்தவே எனக்கு விருப்பம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிர்வாகிகள் இந்த வழிமாற்று பக்கத்தை வெவ்வேறு காரணங்களால் அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
/* மேலும், ப்ளாக்செயின் குழப்பமாகவுள்ளது. BlockChain, BlackChain, BlogChain என்றெல்லாம் கருதப்படவுள்ளது */ யார் அவ்வாறு கருதுவார்கள்? ஏன் குழம்புவார்கள்? "ப்ளாக்செயின்" என்ற பெயரில் ஒரு வழிமாற்று வேண்டும் அவ்வளவே. /* "முறையான விளக்கம்" தரவும் */ ப்ளிண்டர், ப்ரியான், ப்ரோமேனடே பீச், ப்ரீடம் 251, ப்ருகாடா நோய்க்கூட்டறிகுறி, கட்டுரைகளின் வழிமாற்றுகளை உருவாக்கிய நோக்கம் என்ன? 1. இக்கட்டுரை தமிழில் எழுதியதன் நோக்கம், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே 2. முறையான தமிழ் சொல்லை ஆய்வு செய்து, சரியான தலைப்பிலேயே கட்டுரை எழுதப்பட்டது, நிர்வாகிகள் வழிமாற்றை தொடர்ந்து இருமுறை அழித்ததன் காரணமாகவே கட்டுரையை இப்பக்கத்தில் நகர்த்தியுள்ளேன். முறையான விளக்கம் அழித்தபின் இக்கட்டுரையை அழித்துவிடலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:22, 3 நவம்பர் 2018 (UTC)
- lockChain, BlackChain, BlogChain என்பவற்றை எவ்வாறு ஒலிபெயர்ப்பது? //கட்டுரைகளின் வழிமாற்றுகளை உருவாக்கிய நோக்கம் என்ன?// உருவாக்கியவர்களிடம் கேட்க வேண்டும். ப் கொண்டு சொல் அமைக்க முடியாது. இதில் வணிகப் பெயர்களைத் தவிர மாற்றும் கருத்து இல்லை. --AntanO (பேச்சு) 15:29, 3 நவம்பர் 2018 (UTC)
- "ப்" கொண்டு சொல் அமைக்க முடியாது. தமிழில் ஒற்று எழுத்துடன் ஆரம்பிப்பது இலக்கணப் பிழையாகும்.--நந்தகுமார் (பேச்சு) 16:32, 3 நவம்பர் 2018 (UTC)
- ஒலிபெயர்ப்பு இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடும். ப்ளாக்செயின், ப்ளேக்செயின், ப்ளாக்செயின் என்றே தமிழில் எழுத இயலும். ஒலிபெயர்ப்பு மாறுபடும். 'ப்' வரிசையில் இன்னும் மூன்று கட்டுரைகள் உள்ளன. கூடவே க், ட், த் வரிசையிலும் கட்டுரைகள் உள்ளன. /* வணிகப் பெயர்களைத் தவிர மாற்றும் கருத்து இல்லை */ எனக்குத் தெரிந்து ஏற்கனவே அரசியல் தலைவர்கள் பெயர்கள் கிரந்த எழுத்துகளில் தான் உள்ளது, பல சிறிய ஆட்கள் பெயர்கள் வேண்டுமானால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய பெயரை சப்பானிய மொழியில் ஒலிக்க முடியாது, தமிழில் ஒலிக்க முடியும் ஆனால் எழுத முடியாது. நல்ல தமிழில் எழுதவேண்டும் என்ற நோக்கம் நம் அனைவருக்குமே உள்ளது; ஆயினும் ஒருசில இடங்களில் தேவைக்கேற்ப முடிவுகளை பரிசீலனை செய்ய வேண்டும். வழிமாற்று கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றே தோன்றுகிறது. அதில் பிற மொழிகளுக்கு வழிமாற்று உருவாக்க வேண்டாம் என்பது மலையாள விக்கியில் ஆங்கிலத்தில் தேடினால் மலையாளத்தில் முடிவுகள் வரும் அவ்வாறு வருவதை தவிர்க்கவே அக்கொள்கை. இப்போது பிணக்கு ஏன் வருகிறதென்றால் புதிய சொல் உருவாக்கம் வரும்பொழுது அது பயன்பாட்டிற்கு வரும் வரை அதற்கான வழிமாற்றாவது வைக்க வேண்டுமல்லவா? சற்றே சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. கொள்கைகள் நாம் உருவாக்கியதே, அவை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என்பது என் கருத்து. இதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். வழிமாற்று கொள்கை பரிசீலனையை ஆலமரத்தடியில் இடுகிறேன். அதற்கு முடிவு வரும்வரை, இப்பக்கத்தை அழிக்க வேண்டாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:35, 3 நவம்பர் 2018 (UTC)
- ஆங்கில எழுத்துத்க்களை அப்படியே இங்கு கொண்டு வர இயலாது. இதனை இது (ப்ளாக்செயின், ப்ளேக்செயின், ப்ளாக்செயின் என்றே தமிழில் எழுத இயலும்) காட்டுகிறது. தமிழ் மொழிக்கென ஒரு தனித்துவம் உள்ளது. அதனை சிதைக்க வேண்டாம். ஆங்கிலேயரிடம் "டமில்" எனாதே தமிழ் என்று ஒலிபெயர் என்று சொல்ல முடியாது. அவ்வாறு மெய்யெழுத்தில் உச்சரிக்க தமிழில் உச்சரிக்க முடியாது. இது மலையாள விக்கியல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். சரியான தலைப்பு முன்மொழியப்பட்டால், அதற்கு நகர்த்தப்படும். நன்றி. --AntanO (பேச்சு) 18:27, 3 நவம்பர் 2018 (UTC)
- 'ப்ளாக்செயின்' என்பதை 'பிளாக்செயின்' என்னும் தலைப்பிற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யுங்கள். இக்கட்டுரையின் தலைப்பு ஒரு விசித்திரமாக உள்ளது. விக்கிப்பீடியா விதிமுறைப்படி ஒரு கட்டுரைக்கு இரண்டு பெயர்கள் இருந்தால் வழிமாற்று செய்யலாம், அதாவது இரண்டுமே தமிழ்ப் பெயரில் இருத்தல் வேண்டும். ஆனால் இக்கட்டுரையில் வழிமாற்று தமிழ்ப் பெயரிலும், கட்டுரையின் தலைப்பு ஆங்கிலப் பெயரிலும் உள்ளது. தொடரேடு என்பதே இக்கட்டுரைக்கு சரியான பெயர், ஆனால் கூகுள் தேடுதலில் சிக்குவதற்காக ஆங்கிலத் தலைப்பான 'ப்ளாக்செயின் என்பதை வழிமாற்று செய்வது ஏற்புடையதல்ல என்பது எனது கருத்து. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:00, 4 நவம்பர் 2018 (UTC)
தொடரேடு என்று வைக்கலாம். தொடரி என்றும் வைக்கலாம். இது train - தொடரி என்பதோடு குழம்பும். இருப்பினும் தாழ்வில்லை. தரவுத் தொடரி - data chain Paramesh1231 (பேச்சு) 16:03, 12 சனவரி 2019 (UTC)
கட்டச் சங்கிலி (block + chain) என்று மொழி பெயர்த்து கட்டுரையை விரிவாக்கியுள்ளேன். Paramesh1231 (பேச்சு) 23:02, 17 பெப்ரவரி 2019 (UTC)
- இரு சொற்களாகப் பிரித்து எழுதாமல், கட்டச்சங்கிலி என்ற ஒரே சொல்லில் தலைப்பிடலாம்.--Kanags (பேச்சு) 07:45, 18 பெப்ரவரி 2019 (UTC)
- தமிழ்நாட்டில் block, black ஆகியவற்றை எப்படி உச்சரிப்பார்கள். black என்பதை பிளாக் என்பார்கள் அல்லவா? --AntanO (பேச்சு) 20:14, 14 சூன் 2020 (UTC)
- கட்டச்சங்கிலி எனத் தலைப்பிடுவதே சிறந்தது. -இரா. பாலாபேச்சு 10:41, 11 மே 2021 (UTC)