பேச்சு:கணிக்கும் மரபணு

தொடரிகள்

முன்னில் பயன்படுத்திய தொடரூகிகள் என்ற சொல்லை transcription factors or promoter binding factor என்ற சொல்லுக்கு பாவிக்கலாம் ..

marru கருத்து இருந்தால் தெரிவிக்கவும்

நன்றி --Munaivar. MakizNan 20:08, 19 ஜூலை 2009 (UTC


இக்கட்டுரையில் உள்ள படம் எனது ஆய்வு கட்டுரையின் உள்ள படம். படத்தை இங்கு இடுவதால் பிரச்சனை வருமா? வரும் என்றால் இதை நீக்க விரும்புகிறேன். நான் சில (சொந்த) படங்களை பின்னாளில் ஏற்றி வைக்கிறேன்.

--Munaivar. MakizNan 16:06, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

மகிழ்நன், எப்படத்தை இங்கு இடுவதாயினும், நீங்கள் தக்க உரிமம் வழங்க வேண்டும். உங்கள் படமாயினும் நீங்கள் தக்க காப்புரிமம் தருதல் வேண்டும். வணிக நிறுவனங்கள் எடுத்தாளக்கூடாது எனில் கிரியேட்டிவ் காம்ன்சு உரிமத்தில் -nc என்றும், மற்றவர்கள் உங்கள் படத்தை மாற்றி பிற படங்கள் செய்தல் கூடாது எனில் -nd என்றும் இடலாம். இப்பக்கத்தைப் பாருங்கள். இன்னொரு வழி என்னவென்றால், உங்கள் படத்தைச் சற்று சிறியதாக சுருக்கியபின் தாருங்கள். அப்படி செய்வதால், உயர்தரமான உங்கள் படம் பிற இடங்களில் பிற உரிமங்களுடன் (காப்புரிமத்துடனும்) பயன்படுத்த இயலும். கட்டற்ற உரிமம் வழங்கினாலும், அது உங்கள் படம் என்பதை நிலை நிறுத்திக்கொள்ள நிறைய வழிகள் உள்ளன. உங்கள் படத்தால் பணம் ஈட்ட வேண்டும் எனில் வேறு முறைகளைக் கையாள வேண்டும். குறிப்பாக கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் -nc என்னும் குறிப்பை இட்டால், யாரும் வணிக நோக்கில் பயன்படுத்த இயலாது. --செல்வா 21:29, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

உரை திருத்தம்

தொகு

சில பகுதிகளில் உரை திருத்தம் செய்துள்ளேன். சரி பார்க்கவும். மின்மினிப்பூச்சி என மாற்றியுள்ளேன். jellyfish என்பதை குடை நுங்குமீன் என்று குறித்துள்ளேன் (இதன் கிரேக்கப் பெயரும் கிண்ணம் என்னும் பொருள் கொண்டதே. இவை குடை போல வடிவம் கொண்டிருப்பதாலும் விரிந்து-சுருங்கி இயங்குவதாலும் குடை என்றேன். பன்ம் நுங்கு போல ஒளியூடுருவும்/கசியும் தன்மையும், குழகுழப்புத்தன்மையும் கொண்டிருப்பதால் நுங்குமீன் என்றேன். இது மீன் இல்லாவிடினும், நீரில் நகர்வதால் மீன் எனக் குறித்தேன். jelly, jelly-like என்பதை நுங்கியம் என்றும் கூறலாம் என நினைக்கிறேன். பான்சியின் Bioluminescence ஐ உயிர்வேதி ஒளிர்வு, உயிர்வேதிய ஒளிர்மை எனலாம். luciferase என்பதை ஒளிர்நொதி என்றே கூடக் குறிக்கலாம் (அல்லது மின்மினி ஒளிர்நொதி எனலாம்).--செல்வா 02:32, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

அருமையான பொழிபெயர்ப்பு..... ஒளிரும் என்ற சொல் light என்பதை குறிக்கிறது. ஆனால் மிளிரும் என்றால் glittering என பொருள் தரும். அதனால் இவ்விடத்தில் மிளிரும் என பாவிக்கலாமா?.-- மகிழ்நன் 03:58, 6 ஆகஸ்ட் 2009 (UTC)-- மகிழ்நன் 03:58, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

anpin selva,

gfp kku milirum puratham enrum

luciferase kku olirum ena payanpadutthalaam.

nanri -- மகிழ்நன் 04:53, 6 ஆகஸ்ட் 2009 (UTC)−

நன்றி மகிழ்நன். ஒளி, ஒளிர்தல் என்பதற்கு ஒரு 20 சொற்கள் தமிழில் இருக்கும் (தொகுத்து ஓரிடத்தில் இட வேண்டும்). மிளிர் என்னும் சொல்லையும், மினுக்குதல் என்னும் சொல்லையும் கட்டாயம் ஆளுங்கள். ஒளி என்பது light என்பது சரி, ஆனால் ஒளிர் என்பது சற்று வேறான பொருளையும் சுட்டும். ஒளிர்தல் என்றால் ஒளி விடுதல் ஒளிவீசுதல் என்று பொதுவாக பொருள்படும். ஆனால் ஒளி "உதிர்வது", "கொட்டுவது", "சுடர்வது" போன்ற பொருள்களைக் குறிப்பாய் உணர்த்தும். fluorescence, phosphorescence, iridescence போன்ற சொற்களுக்கு தக்க முன்னொட்டுகளுடன் ஒளிர்தல் என்னும் சொல் பொருந்தும் என நினைக்கிறேன். ஒள், ஒண், ஒளிர் என்னும் வடிவங்களும் கொள்ளும். பச்சையொளிர் புரதம் என்றும் (பச்சை மிளிர் புரதம் என்று நீங்கள் விரும்பினால், அதனையே கூடப் பயன்படுத்தல்லாம்), லூசிவெ'ரேசுக்கு ஒளிர்நொதி, மிளிர்நொதி, மின்னுநொதி, மினுக்குநொதி, ஒண்ணொதி எனப் பலவாறு பெயரிடலாம். ஆனால் ஓரளவுக்கு சீராக கலைச்சொற்களை ஆண்டு வந்தால் நல்லது. எடுத்தாளும் பொழுது பொருள் பொருந்தி வராதது போல இருந்தால் மாற்றலாம். ஆங்கிலம் உட்பட இப்படி எல்லா மொழிகளிலும் பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்து வந்துத் மட்டுமல்லாமல். இன்றளவும் இப்படி சொல்-மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. --செல்வா 13:28, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

தலைப்பு மாற்றம்

தொகு

தலைப்பினை தெரிவிக்கும் மரபணுக்கள் அல்லது அறிவிக்கும் மரபணுக்கள் என மாற்றினால் பொருத்தமாக இருக்கும். --சத்திரத்தான் (பேச்சு) 17:14, 16 நவம்பர் 2021 (UTC)Reply

  விருப்பம் பொருத்தமான பெயர் என்பதால் மாற்றுக--உழவன் (உரை) 02:04, 18 நவம்பர் 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணிக்கும்_மரபணு&oldid=3320048" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணிக்கும் மரபணு" page.