பேச்சு:கதிரவ மறைப்பு
குறைந்தது ஒரு மாற்றுச் சொல்லாகவாவது வளையக் கிரகணம் எனலாமா? கங்கணம் என்றால் என்ன என்று தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:01, 14 ஜனவரி 2010 (UTC)
- வலயக்கிரகணம், வளையக்கிரகணம், வலய மறைப்பு என்ற சொற்களும் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கங்கணம் என்றால் காப்பு என்ற பொருளில் மக்கள் அறிந்து வைத்துள்ளனர் -- என் மாணவர்களிடம் கேட்டு அறிந்தேன். நன்றி. --பரிதிமதி 08:50, 14 சனவரி 2010 (இந்திய நேரம்)
சூரிய கிரகணம்
தொகு"Phases of the moon" என்பதற்குத் தமிழில் கலை என்று பெயர். கலை என்றால் பிரிவு, ஒரு பகுப்பு, ஒரு பகுதி, ஒரு பங்கு என்று பொருள். சிறப்பாக நிலவின் 16 கலைகளைக் குறிக்கும்.--செல்வா 19:38, 21 ஜூலை 2009 (UTC) வைணவர்களில் தென்கலை, வடகலை என்பதும் இருவகையான பிரிவுகளுக்குப் பெயர்.ஆண் மான்களின் "கொம்புகள்" கிளைத்து பிரிந்து இருப்பதால் ஆண் மானுக்கே கலை என்று பெயர். கலையும் பிணையும் என்பது சொல்லாட்சி. பிணை என்பது பெண் மானைக் குறிக்கும். கூட்டம் பிரிவைதையும் கலைதல் என்பர். ஓவியம், நடனம் என்பனவற்றைக் கலை என்று கூறுவதற்குக் காரணம், பொது வழக்கில் இருந்து நுட்பத்தால், நுணுக்கத்தால் பிரிந்து இருப்பதால், தனிப்பகுதியாக கருதப்படுவன. பாட்டு என்பதில் உள்ள பா என்பதும் பா (= பிரிவு) என்பதன் அடிப்படையாய் வருவது. 64 கலைகள் என்பது 64 பிரிவுகள். எனவே Phases of the moon என்பதற்குத் தமிழில் நெடுங்காலம் வழங்கும் கலை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். --செல்வா 19:51, 21 ஜூலை 2009 (UTC)
- சூரிய கிரகணம் பற்றிய செய்தியை விக்கிசெய்திகளில் செய்தி மூலத்துடன் பதிக்கலாமே? -- மாஹிர் 08:20, 4 சனவரி 2011 (UTC, மாஹிர் என் பேச்சுப் பக்கத்திற்கு அனுப்பியது இப்பக்கத்திற்கு நான் அனுப்பியுள்ளேன்.செய்தியைக் கருத்தில் கொள்வது சிறப்பாக இருக்குமே.--P.M.Puniyameen 09:10, 4 சனவரி 2011 (UTC)
வலய மறைப்பு என்பது பொருத்தமற்ற தலைப்பு. ஏனெனில் அது கதிரவ மறைப்பின் ஒரு வகை மட்டுமே. ஆகவே கதிரவ மறைப்பு என்ற தலைப்பே இக்கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் நகர்த்துகிறேன்.SolomonV2 (பேச்சு) 07:54, 11 நவம்பர் 2018 (UTC)
இக்கட்டுரையில் ஜனவரி 15, 2010 அன்று நிகழ்ந்த வலய கதிரவ மறைப்பைப் பற்றிய குறிப்புகளே அதிகம் உள்ளன. ஆகவே அதற்கென தனியாக கதிரவ மறைப்பு, சனவரி 15, 2010 என்ற கட்டுரையை உருவாக்கியுள்ளேன்.SolomonV2 (பேச்சு) 08:12, 11 நவம்பர் 2018 (UTC)