Ellipsoid, pyramid என்பவற்றை முறையே நீள்வட்டக்கோளம், கூம்பகம் என எழுதலாமா? - காயத்திரி 00:58, 11 மே 2007 (UTC)Reply

நீளுருண்டை என்பதை ellipsoid என்பதற்கும், நான்முக முக்கோணகம் என்பதை tetrahedron என்பதற்கும் ஆண்டுள்ளோம். எண்முக முக்கோணகம் என்பதை octahedron என்பதற்குப் பயன்படித்தியுள்ளோம். பார்க்கவும்--செல்வா 22:23, 11 மே 2007 (UTC)--செல்வா 21:24, 15 மே 2007 (UTC)Reply
நான்முக முக்கோணகம் என்பது புரியும்படி தெளிவாக இருப்பினும் சற்று நீளமாக இருப்பதால் இன்னும் சுருக்கமான சொற்களை ஆக்க முனையலாம்.--Sivakumar \பேச்சு 07:26, 13 மே 2007 (UTC)Reply
உண்மைதான் சிவகுமார். ஆனால் நாமுக்கோணகம் என்றுவேண்டுமானால் சுருக்கலாம். இவ்வகை பெயர்சூட்டல், பலவடிவங்களுக்கும் சீரான முறையில் வழிவகுக்கும் என்றே அப்படிப் பெயரிட்டேன். இந்த பகுப்பைப் பார்க்கவும் . பிளேட்டோவின் சீர்திண்மங்கள் என்னும் கட்டுரையையும் பாருங்கள். Pyramid என்பதற்கு சதுரவடி முக்கோணகம் என்றும், பிற வகையான பல்கோணங்கள் அடிப்பரப்பாக இருந்தால் அதனடிப்படையிலேயே பெயர் சூட்டலாம். எ.கா : அறுகோணவடி முக்கோணகம் (அல்லது அறுகோணவடிக் கூம்பு -> அறுகூம்பு). இதேபோல சதுரவடி முக்கோணகத்தை சதுரக்கூம்பு என்றும் கூறலாம் என நினைக்கிறேன். இப்படியே, ஐங்கூம்பு, எண்கூம்பு, எழுகூம்பு முதலியனவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 21:24, 15 மே 2007 (UTC)Reply

NANOGAN எவ்வாறு அழைக்கப்படுகிறது? தமிழ் அகராதிகளில் "நவகோணம்" என மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. நவம் வடமொழி போலுள்ளது. -ராஜ், தொழில்நுட்பம் இணையம்

தலைப்பு மாற்றம்

தொகு

இக்கட்டுரை கனவளவு என்ற தலைப்பு சரியானதாக இல்லை. இது கன அளவு என்று இருப்பதே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். கனவளவு என்பது கனவின் அளவு என்ற பொருள் தோன்றுவதாக இருக்கிறது எனவே இதை கன அளவு எனும் தலைப்பிற்கு மாற்றுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:11, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

கனவளவு சரியான வழக்கு என்பதை ஆதாரப்படுத்தி பவுல் விக்சனறியில் எழுதிய குறிப்பையும் கவனிக்க.--சஞ்சீவி சிவகுமார் 15:36, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

//உடம்படுமெய் என்பது "நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள உயிர்/உயிர்மெய் எழுத்துகளை இசைவாக ஒன்றுசேர்க்க வருகின்ற மெய்யெழுத்தைக் குறிக்கும்." இத்தகைய இரு மெய்யெழுத்துகள் "வ்", "ய்" என்பனவாகும்.

உடம்படுமெய் பற்றிய இலக்கண விதிகளையும் விளக்கங்களையும், தொல்காப்பியர் கால வழக்கு, நன்னூல் வழக்கு, தற்கால வழக்கு போன்றவற்றையும் காண்க:உடம்படுமெய் - விரிவான விளக்கம்.

கனம்>கன+அளவு = கனவளவு என்னும்போது அங்கே இலக்கணப் பிழை இல்லை. "கன அளவு" என்று பிரித்து எழுதினால் இன்று எளிதாகப் பொருள் புரிந்துகொள்ளலாம் என்னும் ஒரே காரணத்திற்காக "கனவளவு" தமிழ் வழக்கு அல்ல என்பது முறையன்று. இரு சொற்களுக்கும் இடையே வருகின்ற "வ்" என்னும் மெய் இலக்கண முறைப்படி சரியானதே.

(ஒப்பிடுக: புறம்>புற+அமைப்பு = புறவமைப்பு; குடம்>குட+ஓலை = குடவோலை; அகம்>அக+அன்பு = அகவன்பு).--பவுல்-Paul 14:29, 21 செப்டெம்பர் 2011 (UTC)//Reply

கட்டுரையின் உள் பகுதியில் அனைத்து இடங்களிலும் கன அளவு என்று குறிப்பிட்டிருந்ததாலும், இக்கட்டுரையின் தலைப்பு பிரிக்கப்பட்டு இருந்தால் எளிமையாக இருப்பதுடன் தவறான பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவும்தான் இக்கட்டுரையை கனவளவு என்பதிலிருந்து கன அளவு எனும் தலைப்புக்கு மாற்றினேன். கனவளவு என்ற வழக்கு தவறு என்று நான் குறிப்பிடவில்லை. மேலும் கனவளவு எனும் தலைப்பிலிருந்து வழிமாற்றும் செய்யப்பட்டுள்ளது. எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கட்டும் என்றுதான் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டுக்காக அல்ல. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:17, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply
கனவளவு அல்லது கன அளவு சரியானது. இலங்கையில் கனவளவு பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது. கனஅளவு இலக்கணப்படி தவறு.--Kanags \உரையாடுக 21:09, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply
கன அளவு இலக்கணப்படி தவறு என்றால் தலைப்பை மாற்றம் செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:40, 22 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இப்போதுள்ள கன அளவு என்ற தலைப்பில் மாற்றம் தேவையில்லை.--Kanags \உரையாடுக 03:12, 22 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கன_அளவு&oldid=880019" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கன அளவு" page.