பேச்சு:கருநொச்சி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

நொச்சி என்று திருநீற்றுப்பச்சை இனச் செடிப் படம் இணைக்கப்பட்டிருப்பது பெரும் பிழை. இங்கே சரியான படத்தை இணைக்கிறேன். கட்டுரையில் இணையுங்கள். நான் இது போன்ற பெரும் பிழைகளைத் திருத்த விரும்பவில்லை. நொச்சி --Sengai Podhuvan (பேச்சு) 07:53, 16 திசம்பர் 2012 (UTC)Reply

ஐயா, நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே. எனினும் நொச்சி (வெண்ணொச்சி) மரத்துடன் வேறு மரங்களும் சேர்ந்திருப்பதைக் காண்கிறேன். நொச்சி மரத்தை மாத்திரம் தனியாகப் படமெடுக்க முடியுமாயின், அது மிக்க வசதியாயிருக்கும். நொச்சியில் வெண்ணொச்சி, கருநொச்சி என இரண்டு இனங்கள் இருப்பதை இலங்கையில் பார்த்திருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 08:02, 16 திசம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள பாகு, தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் படத்தில் வேலிகாத்தான் முட்செடியும் இணைந்துள்ளது. வேறு படம் எடுக்க முயல்கிளேன். வெண்ணொச்சி கிடைக்கும். கட்டுடையில் இணைக்கப்பட்டுள்ள படச்செடியை அறிவேன். பெயர் தெரியவில்லை. ஒருவேளை அந்தச் செடிக்கு எங்காவது நொச்சி என்னும் பெயர் வழங்கப்படுமாயின் வழங்கும் இடத்தைக் குறிப்பிட்டுவிட்டுப் படத்தை அப்படியே இருக்கும்படி விட்டுவிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 08:51, 16 திசம்பர் 2012 (UTC)Reply

ஐயா, கட்டுரையில் இருக்கும் படம் எங்கேயும் நொச்சியென்று அறியப்படுவதாகத் தெரியவில்லை. எனினும், அது நொச்சியல்ல.--பாஹிம் (பேச்சு) 10:15, 16 திசம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள பாகு! எப்படியோ சீர் செய்யுங்கள். அல்லது கட்டுரையை நீக்கிவிடுங்கள். நொச்சி மரம் கட்டுரை உள்ளது. அது போதும். --Sengai Podhuvan (பேச்சு) 10:25, 16 திசம்பர் 2012 (UTC)Reply

அன்புள்ள பாகின்! முதிர்ந்த மூலிகை மருத்துவரிடம் செய்திகள் கேட்டறியப்பட்டதில் இக்ஃ கட்டுரையில் உள்ள படமும் செய்திகளும் கருநொச்சிக்கு உரியவை எனத் தெளியப்பட்டது. நன்கு தெளிந்த பின்னர் தொடர்புள்ள இரு கட்டுரைகளையும் செம்மைப்படுத்தியுள்ளேன். இணைப்புக் குறியை நீக்கிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:11, 16 திசம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருநொச்சி&oldid=1277865" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருநொச்சி" page.