பேச்சு:கருப்பு

கறுப்பு என்பதுதான் நிறம். கருப்பு என்றால் பஞ்சம் என்று பொருளெனக் கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி.--பாஹிம் (பேச்சு) 09:12, 28 திசம்பர் 2012 (UTC)Reply

ஆம் பாஹிம். இலங்கை வழக்கில் கறுப்பு என்றுதான் பொதுவழக்குள்ளது. ஆயினும் தமிழகத்தில் கருப்பு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இலங்கையில் கரும்பலகை, கருநீலம், கருமை முதலான வழக்குகள் உள்ளன.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:33, 28 திசம்பர் 2012 (UTC)Reply

ஆனால் கரிய, கார்மேகம், கருங்கல் என்றே வருகின்றனவே. கரி என்றால் யானை. யானை கருப்பாகத் தானே இருக்கும்! ஆனால் கறுப்பு என்றானால் கறி என்றாகுமே? - தமிழ்க்குரிசில் (பேச்சு)

கருப்பு, கறுப்பு இரண்டுமே சரியானவை, கரு எனும் முன்னெட்டை கொண்ட ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழில் உண்டு, முதலில் இக்கட்டுரைக்கு இட்ட தலைப்பு கருப்பு எனவே அதே தலைப்பில் கட்டுரை தொடர்ந்து இருப்பதே முறை--சங்கீர்த்தன் (பேச்சு) 11:11, 28 திசம்பர் 2012 (UTC)Reply

கருமை என்னும் போது கரிய நிறத்தைக் குறிப்பிடலாம். ஆயினும் கருப்பு என்ற சொல் கரிய நிறத்தைக் குறிப்பிடவில்லை. அப்படித்தான் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. கறுப்பு என்றுதான் கூற வேண்டும். இது வெறுமனே இலங்கை வழக்கு மட்டுமன்று.--பாஹிம் (பேச்சு) 12:30, 28 திசம்பர் 2012 (UTC)Reply

மு. சண்முகம்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, பேராசிரியர்களான அ. ச. ஞானசம்பந்தன், அ. மு. பரமசிவானந்தம், கொண்டல் சு. மகாதேவன் ஆகியோரால் மேலாய்வு செய்யப்பட்ட தமிழ்-தமிழ் அகரமுதலியும் கருப்பு என்றால் பஞ்சம் என்றும் வறுமையான காலம் என்றும் மட்டுமே கூறுகிறது. கருப்பு என்றால் கரிய நிறம் என்று பொருள் தரவில்லை.--பாஹிம் (பேச்சு) 12:40, 28 திசம்பர் 2012 (UTC)Reply
//கருப்பு, கறுப்பு என்னும் இருவடிவுகளுள், முன்னதே முன்னதாம். இம் முடிவிற்கு ஏதுக்கள் மூன்று, அவையாவன : 1. கள் எனும் வேர்ச்சொல்லினின்று கரு என்னும் வடிவே முந்தித்தோன்றல். கள் - கர் -கரு - கறு,// இப்படி தேவநேயப் பாவாணரின் கட்டுரை கூறுகிறது, எனக்கு இரு சொற்களுமே சரி என்றுதான் தோன்றுகிறது..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 14:51, 28 திசம்பர் 2012 (UTC)Reply

ஜி. யு. போப் அவர்கள் 1884 ஆம் ஆண்டு வெளியிட்ட A handbook of the ordinary dialect of the Tamil language எனும் நூலின் மூன்றாம் பாகத்தில் கருப்பு, கருப்பம், adj. foms of கரும்பு என்று குறிப்பிடுகிறார். அதிலும் கருப்பு என்றால் கரிய நிறம் என்ற பொருள் வரவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:28, 15 சனவரி 2016 (UTC)Reply


நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:56, 27 சனவரி 2013 (UTC)Reply

பார்வதிசிறீ தந்துள்ள மேற்கோள்களே போதுமானது. கருப்பு என்பது சரியானதே. இதற்கு மேலும் விளக்கம் தேவையற்றது.--Kanags \உரையாடுக 09:12, 26 ஏப்ரல் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருப்பு&oldid=2652706" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருப்பு" page.