பேச்சு:கல்கி (அவதாரம்)

கல்கி (அவதாரம்) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கல்கி (அவதாரம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கல்கி (அவதாரம்) என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தொகு

கல்கி அவதாரம் என்று தலைப்பு இருந்தால் போதுமானது என நினைக்கின்றேன் அடைப்புக் குறிகள் தேவையில்லைப் போலத் தெரிகின்றது. இப்போது இருக்கும் பக்கத்தை ஆட்சேபனை இல்லையென்றால் மீள்வழிநடத்தி விடலாம். --உமாபதி 08:06, 22 டிசம்பர் 2007 (UTC)

கல்கி நாளிதழ், கல்கி எழுத்தாளர், கல்கி பகவான் என பல விஷயங்கள் கல்கி என்ற பெயருடன் உள்ளன. எனவே கல்கி (அவதாரம்) என இருப்பதே பொருத்தமானது வினோத் 08:10, 22 டிசம்பர் 2007 (UTC)

கலியுக முடிவும் கல்கி அவதாரமும்

கிருஷ்ணர், கல்கி எனும் விஷ்ணுவின் 10வது அவதாரமாக பூமியில் அவதரிப்பார் என்பது ஐதீகம். அவர் எப்போது, எங்கே எப்படி தோன்றுவார் என்பன போன்ற கேள்விகளுக்கு புராணங்களும் இதிகாசங்களும் பிற மூலாதாரங்களும் குறிப்புகள் வழங்குகின்றன. அவை வாசகர்களின் பரிசீலனைக்கு இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக பகவத் கீதையில் காணக்கிடக்கும் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய செய்யுட்களை காண்போம்:

   யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
   அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
   यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।
   अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥
   பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
   தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
   परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।
   धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥

இன்று உலக நிலைமையை கண்ணுறும் எவரும் உலக மக்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை, இருக்கும் வழிகாட்டிகளே போதும் என கூறிட முடியாது. வழிதவறிச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகை மனிதர்களால் மட்டும் வழிகாட்டிட முடியாது. மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆற்றல் நிச்சயமாகவே தேவை.

அதாவது எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.

இதை மேலும் விரிவாகக் காண்போம்:

கல்கி அவதாரம் என்பது கிருஷ்ண பரமாத்மாவின் வருகையை குறிப்பதாகும். இந்த அவதாரம் தோன்றக்கூடிய காலம் இடம் போன்றவை புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றும் தோன்றக்கூடிய இடம் பற்றிய வர்ணனையையும் கல்கி புராணத்தில் காணலாம்.

இடம் பெயர் பற்றிய கூற்றுகள்.

   ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:
   பவனே விஷ்ணுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி
   सम्भलग्रम: मुक्य्स्य ब्राह्मनस् य् महात्मन:।
   बवने विश्णुयशस: कल्कि प्रातुर् बविश्यति॥

அதாவது, சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தராக விளங்கும் ஒருவருடைய இல்லத்தில் கல்கி அவதரிப்பார் என்பது இதன் பொருள். ரஷ்ய நாட்டைச் சார்ந்த ரோரிச் எனும் சம்ஸ்கிருத பண்டிதர் சம்பல் என்பது பௌதீகரீதியிலான ஓர் இடமல்ல ஆனால் ஆன்மீகமும் லெளகீகமும் ஒன்று சேரும் ஓரிடம் என “மஹாபோதி, ஏப்ரல் 1948”எனும் சஞ்சிகையில் கூறியுள்ளார். இது இறைவனின் அவதாரங்களின் இயல்புகளான ஆன்மீகத்தையும் லெளகீகத்தையும் ஒருங்கினைப்பதை குறிப்பதாகும். அதே வேளையில் கல்கி புரானத்தில் சம்பலக்கிராமத்தின் லெளகீக வர்ணனையும் காணக்கிடக்கின்றது. சற்று ஆச்சரியப்படும் வகையிலேயே அவ்வர்ணனை அமைந்துள்ளது. கல்கி புரானத்தின் 2வது அம்சம் 6வது அத்தியாயத்தில் இவ்வர்ணனையைக் காணலாம்.

மேற்கண்டவற்றிலிருந்தும் புராணங்களில் மேற்கொண்டு காணப்படுவனவற்றையும் கொண்டு பின்வரும் பட்டியலை உருவாக்கலாம்:

இறைவன் உலகில் தர்மத்தை நிலைப்படுத்த காலத்திற்குக் காலம் தமது அவதாரம் ஒன்றை பூமிக்கு அனுப்புகின்றார். இந்த அவதரிப்பு யுகங்களின் சந்திப்பின் போது நிகழுகின்றது. விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கல்கி பூமியில் தோன்றவிருக்கின்றார் இந்தத் தோற்றம் கலியுகத்தின் முடிவில் உண்டாகும் கல்கி, சம்பல் எனும் கிராமத்தில் விஷ்ணுயாஷா என்பவருக்கு மகனாக பிறப்பார்.

இப்போது கலி எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயலுவோம்:

கலியுகம் எப்போது முடியும் எனும் கேள்விக்கு பலர் பலவிதமான பதிலைக் கூறுகின்றனர். சிலர் அது முடிவதற்கு 1200×360=4,32,000 வருடங்கள் இருக்கின்றன என கூறுகின்றனர். கலி யுகத்தின் முக்கியத்துவம் என்னவெனில் அதன் முடிவில் கிருஷ்ணர் அவதரிப்பார் என்பதே ஆகும். 4.32,000 வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்பட போகின்றவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள். இப்போது உலகை உலுக்கும் விஷயங்களே பெரிதாக இருக்கையில் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணர் தோன்றுவதால் இப்போது நமக்கு என்ன நன்மை? ஆனால், கலியுகம் முடிந்துவிட்டது என கூறும் பண்டிதர்களும் உண்டு. அதில் ஒருவர் டாக்டர் முஞ்சே என்பார். இவர் கலி முடிந்துவிட்டதற்கு பல ஆதாரங்களை வழங்கியுள்ளார். கலி முடிந்துவிட்டால் உலகம் ஏன் இன்னும் இவ்வாறு இருக்கின்றது என கேட்கப்பட்டதற்கு அவர் கலி புருஷன் இறந்துவிட்டான். அவனை இன்னமும் நடுவீட்டிற்குள் வைத்துக்கொண்டு அவன் இறக்கவில்லை என கூறிக்கொண்டிருந்தால் இறந்து போன பிணம் நாற்றம் எடுக்கவே செய்யும். இன்று உலகில் காணப்படும் பிரச்சினைகள் இந்த பிணநாற்றமே. பிணத்தை தூக்கியெரிந்துவிட்டு நடக்கவேண்டியதைப் பற்றி சிந்தித்தோமானால் மாற்றங்கள் நிகழும் என்றார்.

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூரதாஸர் எனும் ஞானி விக்கிரமாதித்த வருடம் 1900க்குப்பின் உலகில் ஒரு பெரும் நிகழ்வு உண்டாகும் என போதித்துள்ளார். விக்கிரமாதித்த வருடம் ஆங்கில வருடத்திற்கு 56 வருடங்கள் அதிகமாகும். ஆகவே 1900 – 56 = 1844ல் இம் மாபெரும் நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். ஆக, கிபி 1844 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், உலக சமயங்களுக்கு பொதுவான அவதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடமும் ஆகும். வள்ளலார் இராமலிங்கர் கலி யுகம் 1900ஆம் வருடத்திற்கு முன்பே முடிவுறும் என கூறி பின் வரும் செய்யுளையும் பாடியுள்ளார்:

   நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
   நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
   வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
   மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே

பல கிருஸ்தவ சமயப்பிரிவுகளும் இயேசு நாதரின் மறுவருகை இந்த ஆண்டிலேயே நடக்கும் என போதித்துள்ளன. இஸ்லாமிய சமயத்தில் ஹிஜ்ரி 1260ல், அதாவது அதற்கு சமமான ஆங்கில வருடம் 1844ல் இதே போன்ற ஒரு தூதர் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது.

ஓர் அவதாரம் உலகில் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்காக என கூறுவது தவறாகும். எந்தவோர் அவதாரமும் ஒருதலை பட்சமாக அவதரிப்பதில்லை. எவ்வாறு இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவராக இருக்கின்றாரோ அவ்வாறே அவரது அவதாரங்களும் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்களை அவ்வாறு கண்டறிந்து ஏற்றுக்கொள்வது மனிதர்களின் கடமையாகும்.. ஆகவே, ஓர் அவதாரம் இங்கு மட்டும்தான் தோன்றுவார் அல்லது அங்கு மட்டும்தான் தோன்றுவார் எனக் கூறுவது ஏற்புடையதாகாது. இறைவன் படைத்த உலகமிது. அவர் விரும்புகின்றபடி அவர் தமது அவதாரத்தை எங்கு வேண்டுமானாலும் தோன்ற செய்யலாம். அதே ரீதியில் கல்கி அவதாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நிச்சயமாக கூறிடவும் முடியாது. கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்றொரு நாடு கிடையாது. பாரதம் முழுவது 56 தேசங்கள் இருந்ததாக புரானங்கள் கூறுகின்றன.

பஹாய் சமயம் 1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி பாரசீக நாட்டில் தோற்றம் கண்டது. பாப் என்பார் முன்னோடியான அவதாரமாகவும், அவரையடுத்து பஹாவுல்லா என்பார் இறைவனின் முழு அவதாரமாகவும் தோன்றினர். பஹாய்கள் பஹாவுல்லா நிச்சயமாகவே கல்கி விஷ்ணு யாஷா, இயேசு நாதரின் மருவருகை, புத்தரின் மறுவருகையான மைத்ரேயி அமிதபா, யூதர்களின் மெஸ்ஸையா என நம்புகின்றனர். பஹாவுல்லா எனும் பெயரின் அர்த்தம், “இறைவனின் (ஜோதி/மகிமை/ஒளி)” என்பதாகும். சம்ஸ்கிருத மொழியில் “விஷ்ணுயாஷா”எனவும், ஆங்கிலத்தில் “Glory of God” எனவும் மொழி பெயர்க்கலாம். புத்த சமயத்தின் புத்தரின் ஐந்தாவது அவதாரத்தின் பெயரான “அமிதபா” என்பதன் அர்த்தமும் ஏறக்குறைய இதுவே ஆகும். அதாவது, “அமித” என்றால் அளவிடமுடியாதது அல்லது அதி உயர்ந்தது, “பா” என்றால் (ஜோதி/மகிமை/ஒளி) என்பதாகும்.

இறுதியாக,

   “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு”

பஹாவுல்லாவின் போதனைகளில் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்தகொள்ளப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையை தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. ஆராய்ந்து உண்மையை கண்டறிவது அவரவர் கடமை. -SATHIYARAJ.R

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்கி_(அவதாரம்)&oldid=3780288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்கி (அவதாரம்)" page.