பேச்சு:காரகாடித்தன்மைச் சுட்டெண்

அமிலம் என்பதற்கு காடி என்று அ.கி. மூர்த்தி போன்ற அகராதிகள் பயன்படுத்துகின்றன. அமிலம் என்பதும் மிகவும் பரவலாக அறியப்படும் சொல். acidity என்பதைக் காடித்தன்மை எனலாம். pH என்னும் அளவீட்டுக் கருத்தை முதலில் சோரென்சென் என்பவர் முன் வைத்தார். இதனை காரக்காடித்தன்மை எனலாம், அல்லது ஐதரசவலு என்று சோரென்சென் முதலில் கூறிய Power of Hydrogen[1] என்னும் கருத்தடிப்படையிலேயே பெயர் சூட்டலாம். சிலர் Power of Hydrogen என்பதற்கு மாறாக Potency of Hydrogen என்றும், partial hydrogen என்றும் கூறுகின்றனர். நாம் ஐதரசவலு என்றே கூறலாம் என்று நினைக்கிறேன். மேலும் அமிலக்காரத்தன்மை என்பது அமில-காரத் தன்மை என்பதைசற்றுக்குழப்பமாகச் சுட்டுகின்றது. அமிலம் என்று கூறுவதென்றால் கார-அமிலத்தன்மை எனலாம். --செல்வா 12:50, 5 ஏப்ரல் 2009 (UTC)

அமிலத்திற்கு பதிலாக காடி என்பதை ஏற்றுக்கொள்ளலாம் செல்வா:) ஆதலால் இதை காரக்காடித்தன்மை என்று இத்தலைப்பை வைத்துவிடலாம். இந்த 'ஐதரசவலு கொஞ்சம் குழப்பமாக இருக்கு செல்வா:(. --கார்த்திக் 19:16, 5 ஏப்ரல் 2009 (UTC)
குழப்பமாக இருந்தால் அமில(க்) காரத்தன்மைக் கூறியீடு எனப் பிரித்தெழுதலாம். அமிலத்திற்கு காடி என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.--Kanags \பேச்சு 21:05, 5 ஏப்ரல் 2009 (UTC)
கார்த்திக் காடி என்பதன் அடிப்படையே ஐதரசனை வைத்துத்தான். pH என்னும் கருத்தும் ஐதரசனை வைத்துத்தான். pH உள்ள் H என்பதை நோக்குங்கள். ஐதரசவலு என்பது சரியான பெயர். தலைப்பு அப்படி இருக்க வேண்டாம் எனில் தவறில்லை. கார-அமிலத்தன்மை அல்லது கார-காடித்தன்மை என்று இடைக்கோட்டு இட்டு எழுதுவது நல்லது. காடி என்பது புளிக்கும் தன்மையது என்று உணர்த்தவல்ல தமிழ்ச்சொல். அமிலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. இதனால் வேண்டாம் என்றுகூறவில்லை. தமிழ்ச்சொல்லைத் தேர்வதென்றால் காடி என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். புளிமம் என்பதும் காடி, அமிலத்துக்கு ஏற்ற சொல். ஆசி'ட் என்றாலே ஏதோ தெரியாததாக உணர்வோர், புளிமம், காடி என்றால் சற்றேனும் அறிந்த ஒன்றாக எண்ணி மிரளாமல் நட்பாக அணுகுவர். புதுமை கண்டு மிரளக்கூடாதுதான், ஆனால் எளிமை வரவேற்பு மிக்கதாய் இருக்கும். --செல்வா 22:01, 5 ஏப்ரல் 2009 (UTC)
இதனை காரகாடித்தன்மைச் சுட்டெண் என மாற்றலாமா? குறியீடு என்பது அவ்வளவு பொருத்தமாக இல்லை. --செல்வா 14:54, 23 ஏப்ரல் 2009 (UTC)
மாற்றுவதில் எனக்கு உடன்பாடுண்டு. -- சுந்தர் \பேச்சு 15:06, 23 ஏப்ரல் 2009 (UTC)

மேற்கோள் தொகு

  1. http://www.carlsberggroup.com/Company/Research/Pages/pHValue.aspx
Return to "காரகாடித்தன்மைச் சுட்டெண்" page.