பேச்சு:காரைக்கால் அம்மையார்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by 175.157.165.36 in topic பேச்சு


காரைக்கால் அம்மையார் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
காரைக்கால் அம்மையார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கப்பட்ட வரி தொகு

ஸம்ஸ்கிருதப் பெயர்கள் அக்காலத்தில் வழக்கில் இல்லை என்ற வாதம் ஏற்புடையது அல்ல. ஏனெனில் ஈசன், சங்கரன், சரணாரவிந்தம், பாதம், சோதி, தானவன், ஆகாசம், இயமானன், அட்டமூரத்தி, ஞானமயன், பலி, சிரம், வனம், மேகம் போன்ற பல ஸம்ஸ்கிருதச் சொற்கள் அவரால் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இது தேவையற்றத் தொடர் என்பதால் நீக்கியுள்ளேன். மேலும் பாதம் பலி சிரம், மேகம் தானவன் சோதி முதலானவை தமிழ் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். --செல்வா 17:04, 19 ஜனவரி 2007 (UTC)

மாற்றம் தொகு

கட்டுரையை விக்கியின் நடைக்கு மாற்றியுள்ளேன். காரைக்கால் அம்மையாரின் கோவிலைப்பற்றியும் இங்கேயே எழுதலாமா என்று விக்கியன்பர்கள் கூறுங்கள்.

நன்றி,

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

அம்மையார் இறைவனின் பல திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறார். முப்புரம் எரித்தது, கங்கையைத் தலையில் தாங்கியது, ராவணன் செருக்கடக்கியது, ஆலகால விடமுண்டு கண்டம் கறுத்தது, அரச்சுனனைச் சோதிக்கக் கிராதவேடம் பூண்டது, அடி முடி தேடிய மால் அயனுக்கு அறியமுடியாத சோதியாய் நின்றது, காலனையும் காமனையும் காய்ந்தது, கபாலம் ஏந்திப் பலி ஏற்றது, யானைத் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது, சந்திரனைத் தலையில் சூடியது, சுடுகாட்டில் அனல் ஏந்திப் பேய்களுடன் அண்டம் அதிர நடனமாடியது என்று பல திருவிளையாடல்களைக் குறிப்பிடும் அவர் ஆலின் கீழிருந்து அறமுரைத்ததையும் தக்கனை மாய்த்ததையும் ஏனோ குறிப்பிடவில்லை. அவரால் அதிகம் பேசப்படுவது இடுகாட்டில் நடனமாடும் கோலம். அடுத்தபடியாக, பிட்சாடனக்கோலமும், உமையொரு பாகனாக விளங்குவதும் ஆகும்.

இவற்றை நூலின் சிறப்புகள் பகுதிக்கு மாற்றி விடலமா.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

கோவிலைத் தனியாக எழுதுவது சிறந்தது. தனியே ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு ஒரு அது ஒரு தனிச்சிறப்புடைய தலைப்பு தான்.--சோடாபாட்டில்உரையாடுக 10:38, 27 சனவரி 2011 (UTC)Reply

சமய நம்பிக்கைகள் தொகு

சமய நம்பிக்கையில் அமைந்த பல கதைகள் இக்கட்டுரையில் நிகழ்வு என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளன. அவற்றைத் திருத்தி நம்பிக்கைகள் மட்டுமே எனக் காட்ட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:52, 2 ஆகத்து 2013 (UTC)Reply

மாற்றம்? தொகு

FYI: @Jagadeeswarann99: வேறுபாடு --AntanO 09:48, 2 திசம்பர் 2016 (UTC)Reply

ஆமாங்க அப்படிமம் ஒரு கிளவி அவ்வளவே. காரைக்கால் அம்மைக்கான வரையரை இல்லை. அவர் எப்போதுமே நடராஜர் பாதங்களுக்கு கீழ் அமர்ந்து பாடியவாறு இருப்பார். என்னிடமே அவருடைய பல ஓவியங்கள் புகைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் பதிவேற்றய பின் நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். விக்கிப்பீடியா ஓவிங்களை புகைப்படமாக எடுப்பதை மறுப்பது இவ்வாறான கட்டுரைகளுக்கு ஏற்ற படிமங்களை இணைக்க வழியில்லாமல் செய்துவிட்டது. அது பெரிய வருத்தமே :-( -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:59, 2 திசம்பர் 2016 (UTC)Reply

பேச்சு தொகு

காகை்கார் அமையார் 175.157.165.36 05:50, 16 அக்டோபர் 2022 (UTC)Reply

Return to "காரைக்கால் அம்மையார்" page.