பேச்சு:கிறித்தவத் திருச்சபை

கட்டுரையின் நடுநிலைமை குறித்து

தொகு

ஆங்கில விக்கியிலுள்ளது:

The Christian Church is a group of Christians who have their own beliefs and forms of worship.

தமிழ் விக்கியிலுள்ளது:

திருச்சபையின் உட்பிளவுக்குப் பின் தன்னோடு ஒப்புறவில் இல்லாத சபைகளை திருச்சபையாக ஏற்றுக்கொள்ள உரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் மறுக்கின்றன.

இக்கூற்றினை உரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபை பற்றிய பார்வையில் அல்லது கட்டுரையில் குறிப்பிடலாம். உரோமன் கத்தோலிக்க தவிர்த்து பொது கிறிஸ்தவ பார்வையில் எழுதப்படுவது கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமாக இருக்கும். --Anton (பேச்சு) 11:36, 15 சூலை 2012 (UTC)Reply

ஆங்கில விக்கியில் உள்ளது போல மொழிபெயத்துள்ளேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:01, 11 மே 2013 (UTC)Reply

தலைப்பு

தொகு

கட்டுரையில் உள்ளபடி:

திருச்சபை என்னும் சொல் கிறிஸ்தவர்களின் சமூகத்தினைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இதில் திரு என்பது 'புனிதத்தை'யும் சபை என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்று பொருள் கொள்ளலாம்.

ஆகவே 'புனித மக்கள் கூட்டம்' கிறிஸ்வர்களாகத்தான் இருக்க வேண்டும் இல்லை. எனவே, கிறிஸ்தவ சபை என்ற பொருத்தமான சொல்லிற்குப் பரிந்துரைக்கிறேன். --Anton (பேச்சு) 11:36, 15 சூலை 2012 (UTC)Reply

 N தயவு செய்து இவ்வாறு மாற்றவேண்டாம். சபை என்பது தமிழ் சொல்லாகாது என எண்ணினால், இதனை வத்திக்கான் செய்தி ஊடகங்களில் பயன்படுத்துவது போல திருஅவை என மாற்றலாம். பழக்கத்தில் இல்லாத ஒரு புதிய பெயருக்கு மாற்றுவது சரியல்ல. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:44, 11 மே 2013 (UTC)Reply
வத்திக்கான் நகரில் தமிழில் செய்தி வெளியிடுகிறார்களா??-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 11 மே 2013 (UTC)Reply
ஆம்  , ஆனால் திருச்சபை செய்திகள் மட்டும் தான். http://ta.radiovaticana.va/index.asp. இது வத்திகான் வானொலி தளமானாலும், திருச்சபை செய்திகள் தமிழிலும் வெளிவருகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:04, 11 மே 2013 (UTC)Reply

//அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை// இக்கட்டுரை பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்கிறதா? அவ்வாறாயின் கட்டுரையின் எப்பகுதியில் உள்ளது?

வத்திகான் வானொலி கத்தோலிக்கருக்குரியதா? அல்லது பிற சபைகளுக்குமானதா? வத்திகான் வானொலியைக் கொண்டு எல்லா கிறித்தவ பிரிவுகளுக்கும் அங்கீகாரமாக அதைக் கொள்ள முடியாது. --Anton (பேச்சு) 15:42, 11 மே 2013 (UTC)Reply

கட்டுரையின் முதல் வரியிலேயே அது உள்ளது //திருச்சபை என்பது தமிழில் கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். //
மேலும், வத்திகான் வானொலி கத்தோலிக்கருக்குறியது என்பதால் மட்டும் அதை நீங்கள் ஏற்கமுடியாது என கருதினால் வேறு எந்த சபையாவது Churchக்கு வேறு வார்த்தைகளை பயன்படுத்துகின்றதா? அவ்வாறாயின் அச்செல்லையும் இக்கட்டுரையில் குறிக்கலாம். ஆனால் கத்தோலிக்கம், ஆங்லிக்கம் (CSI), லூதரனியம், யெகோவாவின் சாட்சிகள் முதலிய பெறும்பான்மையான சபைகள் "திருச்சபை" அல்லது "சபைகள்" என்ற வார்த்தையினையே பயன்படுத்துகின்றன.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:03, 13 மே 2013 (UTC)Reply

நடுநிலை

தொகு

The term Christian Church as a proper noun refers to the whole Christian religious tradition through history. When used in this way, the term does not refer to a particular "Christian church" (a "denomination" or to a building). என ஆ.வி. குறிப்பிட த.வி. கத்தோலிக்க பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளது. அத்தோடு உசாத்துணை முழுக்க முழுக்க விலியத்தையே கொண்டுள்ளது. ஆனால், ஆ.வி.யில் அவ்வாறு இல்லை. கத்தோலிக்க திருச்சபை கட்டுரையில் கத்தோலிக்க பார்வை இருக்கட்டும், இங்கு வேண்டாம். ஆ.வி.க்கும் கட்டுரைக்கும் பெரிய இடைவெளி. --Anton (பேச்சு) 15:37, 11 மே 2013 (UTC)Reply

தேவையற்றவற்றை நீக்கிவிட்டேன், ஆனாலும் முற்றிலுமாக கத்தோலிக்க பார்வையினை நீக்கவில்லை. தகுந்த தலைப்புக்கு ஆ.வியில் உள்ளபடி கத்தோலிக்க பார்வையினை சுறுக்கமாக மாற்றியுள்ளேன். இது நடுநிலைமையைத் இன்னும் தரவில்லை எனில் தகுந்த வழிகாட்டவும் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:49, 13 மே 2013 (UTC)Reply
ஆ.வியை மொழிபெயர்த்தால் ஒருபக்கச் சார்பு இன்றி இருக்கும், Related concepts இன் கீழ்வரும் விடயங்கள் போன்று. --Anton (பேச்சு) 12:51, 13 மே 2013 (UTC)Reply

கட்டுரையில் தொன்தமிழில் உள்ள இந்து மத பயன்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதன் காரணம் குறிப்பிடவேண்டுகிறேன்.--Kuzhali.india (பேச்சு) 05:53, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

குழலி, இக்கட்டுரை கிறித்தவத் திருச்சபை பற்றியது. எனவே வேறு பயன்பாடுகள் பற்றி எழுதுவது தேவையற்றது. ஆனாலும், குழப்பத்தை நீக்க ஆங்கில விக்கியில் தலைப்பிடப்பட்டிருப்பது போன்று, இக்கட்டுரையும் கிறித்தவத் திருச்சபை எனத் தலைப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 07:11, 7 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "கிறித்தவத் திருச்சபை" page.