பேச்சு:கீழ்வெண்மணிப் படுகொலைகள்
கருத்து
தொகுகனகு இது மிகவும் "புகழ்" பெற்ற கொடும் நிகழ்வு. நீதிபதியாக (அறமன்ற நடுவராக) திரு குப்பண்ணன் இருந்தார். இந்நிகழ்வு சீனாவின் வானொலியில் அக்காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் கட்டாயம் அடிச்சான்றுகள் பதிவு செய்தல் இன்றியமையாதது (நிறைய உண்டு, சேர்க்கப்பட வேண்டும்). சாதிக் கொடுமைக்கு இது மிகபெரும் ஓர் எடுத்துக்காட்டு (கடந்த 40 ஆண்டுகளில்). --செல்வா 00:24, 19 டிசம்பர் 2007 (UTC)
- இக்கட்டுரை திருத்தப்பட வேண்டியதாயினும், காரணம் இன்றி நீக்கிய பகுதிகளை மீண்டும் சேர்த்திருக்கின்றேன். கருத்தாடி தக்கவாறு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் நிகழ்ந்த கொடுமைகளை நேர்மையுடன்,சான்றுகோள்களுடன் பதிவு செய்தல் வேண்டும். இது அன்றைய நாளில் மிகவும் உலுக்கிய நிகழ்வு, (கொடுமையாயினும்) வரலாற்றுப் பதிவு.--செல்வா 09:34, 29 ஜூன் 2010 (UTC)
பாராட்டு
தொகுமகிழ்நன், இந்த கொடுமையான பெரும் அதிர்ச்சி தந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி.--செல்வா 02:13, 16 ஜூலை 2009 (UTC)
- கிராமத்தின் பெயர் கீழ்வெண்மணியா அல்லது கீழவெண்மணியா? இணையத்தில் இரண்டு பெயர்களும் உள்ளன. எது சரியென உறுதிப்படுத்திய பின்னர் தலைப்பை மாற்றலாம்.--Kanags \பேச்சு 02:23, 16 ஜூலை 2009 (UTC)
- ஊரின் பெயர் கீழ்வெண்மணி என்பது சரி என்பது என் நினைவு. --செல்வா 03:22, 16 ஜூலை 2009 (UTC)
அண்ணா
தொகு"இந்நிகழ்வின் போது தி.மு.க வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது." என்ற வரிகள் தேவையா? இது அண்ணா இதற்குப் பொறுப்பு என்பது போல் பொருள் தருகிறது.--ரவி 05:15, 17 ஜூலை 2009 (UTC)
- ஆம், அந்த நிகழ்வுடன் ஆட்சியாளர்களுக்குத் தொடர்பு இருந்ததா? அவ்வாறு இருப்பின் என்ன தொடர்பு என்பதை நேரடியாகச் சொல்வது சரியாக இருக்கும். ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கத்தை en:Wikipedia:NOT#Wikipedia_is_not_a_crystal_ball, en:WP:WEASEL போன்ற பக்கங்களில் காணலாம். -- சுந்தர் \பேச்சு 06:45, 17 ஜூலை 2009 (UTC)
நிகழ்வு நடைபெற்ற ஆண்டு குறித்த சரியான தகவல்
தொகு- 1968 கீழ்வெண்மணி தியாகிகள் தினம் தினமணி
- 1968 கீழவெண்மணி தியாகிகள் தின கொடியேற்றம் தினமணி
- December, 25,1968 Frontline
தேவையான திருத்தம் செய்யப்பட்டுள்ளது--ஸ்ரீதர் (பேச்சு) 11:04, 25 திசம்பர் 2012 (UTC)