பேச்சு:குவார்ட்சு

குவார்ட்சு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சூரிய பிரகாசு, quartz என்னும் ஒலிப்பே வரவேண்டும் என்றால் குவார்ட்ஃசு என்று எழுதலாம். குவார்ட்சு என்றால் quartchu என்று கடைசி எழுத்து வல்லினமாகவே ஒலிக்கும். திருக்குறளில் உழவு என்னும் அதிகாரத்தில்

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

என்று வரும். அதில் உள்ள கஃசு (kahsu) என்ற சொல்லில் வல்லினத்துக்குப் பின் சற்று நிறுத்தி காற்றொலியுடன் வரக்கூடியவாறு வந்துளைதைக் காணுங்கள். எஃகு என்பது (ehxu) என்பது போன்ற ஒலி. ஆகவே ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வல்லினத்தை அடுத்து வரும் காற்றொலி கலந்த ஒலிகளைக் குறிக்க ஆய்த எழுத்தைப் பயன்படுத்தலாம். Oxford என்பதை ஆக்ஃசுபோர்டு என்றும் pizza (இதனை peetza என்பது போல ஒலிக்க வேண்டும், ஆங்கிலத்தில்) பீட்ஃசா என்றும் Nazi (mawtzi என்பது போல ஒலிக்க வேண்டும்) நாட்ஃசி என்று குறிக்கலாம். பொதுவாகவே ஃச என்பதை எல்லா இடத்திலும் sa அல்லது za என்பதற்கு ஈடாகக் குறிக்கலாம். ஃக = ha , ஃச = sa, za, ஃவ = fa என்று பயன்படுத்தலாம். ஆகவே குவார்ட்ஃசு என்று எழுதலாம் எனப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா 14:11, 28 மே 2011 (UTC)Reply

தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் இவ்வாறு உள்ளதால் குவார்ட்சு என்று தலைப்பிட்டேன். நீங்கள் கூறும் பெயரில் வழிமாற்று ஏற்படுத்திவிடலாம்.

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:48, 28 மே 2011 (UTC)Reply
நன்றி சூரிய பிரகாசு! புரிகின்றது நீங்கள் சொல்வது. சிக்கிமுக்கிக் கல், வெங்கச்சங்கல் என்ரும் இது பொதுவழக்கில் உள்ளது. ஆனால் அறிவியல்-பொறியியல் நோக்கில் குவார்ட்ஃசு என்னும் படிகத்தைக்த் துல்லியமாகக் குறிக்காமல் இருக்கலாம். இதனை வெங்கப்படிகம் போன்ற ஏதேனும் பொருத்தமான பெயராலும் குறிக்கலாம் (வெங்கச்சங்கல்படிகம் என்றும் சொல்லாம்). --செல்வா 15:44, 28 மே 2011 (UTC)Reply

கட்டுரை பற்றிய கருத்து தொகு

இக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவின் w:Quartz எனும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது என்னுடைய 51ஆவது கட்டுரையும் கூட. இதுநாள் வரை நான் பங்களித்துள்ளதில் எனக்குத் தெரிந்து மிகவும் விளக்கமாக இக்கட்டுரையையும் எழுதியுள்ளேன்/மொழிபெயர்த்துள்ளேன். இது குறித்துப் பிற பயனர்களின் கருத்துகளை அறிய ஆவல். இது மேலும் இதுபோன்ற மொழிபெயர்ப்பு/தொழில்நுட்பஞ்சார் கட்டுரைகளை என்னை எழுதத் தூண்டும். எனவே கருத்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். அனைத்துவிதமான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.   --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:40, 7 சூலை 2011 (UTC)Reply

சூரியா, இப்பொழுதுதான் வெகுநாட்களுக்குப் பிறகு இக்கட்டுரையைப் பார்க்கின்றேன். நன்றாக விரிவாக எழுதியுள்ளீர்கள். நல்ல நடை. பாராட்டுகள். சில இடங்களில் சிறு சிறு விளக்கம் சேர்த்து எழுதினால் இன்னும் பயனுடையதாக இருக்கும் (இது மொழி பெயர்பு என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள் எனினும்). எடுத்துக்காட்டாக dumortierite என்று உரோமன் எழுத்திலேயே எழுதினாலும் பொதுவாக ஆங்கிலம் அறிந்த யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள், ஆங்கிலம் அறியாதவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆகவே, "அலுமினியம் போரோ சிலிக்கேட்டுக் கனிமமாகிய, டியூமோர்டியரைட்டு" என்று ஒரு சிறுமுன்விளக்கத்துடன் புதிய சொற்களை அறிமுக்ப்படுத்தினால் பயனுடையதாக இருக்கும். மற்றபடி சில சொற்களுக்குத் தமிழில் பெயர் உள்ளது. Jasper என்பது தமிழில் சலவைக்கல், சலவைமண், சூரியகாந்திக்கல், பரிதிகாந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. (இங்குப் பார்க்க.) மேலே நான் குறிப்பிட்டப்படி குவார்ட்ஃசு என்பதற்கும் தமிழில் பற்பல பெயர்கள் உள்ளன. சிக்கிமுக்கிக் கல், வெங்கச்செக்கான், வெண்கல் இப்படி பற்பல பெயர்கள் உண்டு. வயிடூரியம் என்பதும் ஒருவகை குவார்ட்ஃசுதான் (இதனை பூனைக்கண் Cat's eye என்றும் கூறுவர். இரவில் ஒளிரும், ஒளிர்வது தெரியும் என்பர்). --செல்வா 20:29, 22 சனவரி 2012 (UTC)Reply
விரிவான கருத்துகளுக்கு நன்றி செல்வா. இனிமேல் இதுபோன்ற அகரமுதலிகளைப் பயன்படுத்துகிறேன். :) நான் விக்சனரியில் தேடிப்பார்த்தபோது சில கிடைக்காமற்போயின, ஆகவே அவற்றை ஒலிபெயர்த்துவிட்டேன். (வணிகத் துறைசார்ந்தது என்பதால் அப்படிச் செய்தேன்) மேலும், முன்விளக்கம் குறித்த அறிவுரைக்கு நன்றி. இதைப் பற்றி இதுவரை நான் எண்ணிப்பார்த்ததில்லை. இது அருமையான ஒரு வசதி. :) நீங்கள் கூறியவற்றைக் கீழே குறிப்பில் சேர்த்துவிடுகிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:24, 28 சனவரி 2012 (UTC)Reply
  • நன்கு வழக்கில் இருக்கும் சொற்கள், நானும் நேரடியாகச் சிறுவனாய் இருக்கும் பொழுதிருந்தே பயன்படுத்திய சொற்கள், சிக்கிமுக்கிக் கல், வெங்கச்செங்கான் (அல்லது வெங்கச்சங்கான்). தொல்பொருளறிஞர், அகழ்வாய்வாளர் பேராசிரியர் இராசன் ஒரு கட்டுரையில் (Frontline என்னும் ஆங்கில இதழின் அண்மைய கட்டுரை ஒன்றில் (Volume 29 - Issue 15 :: Jul. 28-Aug. 10, 2012)) இப்படிக் கூறுகின்றார்: "A quartz outcrop called Vengamedu (Venga means quartz and medu is mound)". எனவே குவார்ட்ஃசு என்பதை வெங்கம் அல்லது வெண்கல் என்னும் எளிய பொருத்தமான பெயரை தலைப்பாக வைத்து குவார்ட்சு முதனாலான பெயர்களுக்கு வழிமாற்று தரலாம். குவார்ட்ஃசு படிகம் என்பதை வெங்கப் படிகம், வெண்கற்படிகம் என்று கூறலாம்.--செல்வா (பேச்சு) 19:07, 27 சூலை 2012 (UTC)Reply

விரிவாக்கம் பற்றி விளக்கம் தொகு

நான் விரிவாக்கம் செய்ய வேண்டாம், உரை திருத்தம் மட்டுமே செய்வோம் என்றே இருந்தேன். ஆனால் குவார்ட்சின் பயன்பாடு என்ன என்பது பற்றி சிறிதளவாவது கருத்துகள் இருக்க வேண்டும் என்று எண்ணவே சிறிதளவு சேர்த்திருக்கின்றேன். இப்பகுதி வேண்டாம் எனில் நீக்கிவிடலாம்.--செல்வா 00:06, 23 சனவரி 2012 (UTC)Reply

சில பயன்பாடுகள் பற்றி பின்னே, வேறு ஒர் உள்தலைப்பின் இருந்ததை இப்பொழுது இன்னும் சில தகவல்கள் சேர்த்து பயன்பாடு என்னும் உள்பகுப்பின் கீழே இணைத்துள்ளேன்.--செல்வா 05:14, 23 சனவரி 2012 (UTC)Reply

சிறு திருத்தம் தொகு

சிறப்பான இக்கட்டுரையில் "வரலாறு" என்னும் துணைத் தலைப்பின் கீழ் வரும் முதல் படிமம் குவார்ட்சு மூலம் செய்யப்பட்ட பூந்தொட்டி c. 1000 என்று பெயரிடப்பட்டுள்ளது. பூந்தொட்டியைக் கொள்கலன் என்று மாற்றினால் நல்லது. அதையே "Ewer" என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக (பிரஞ்சு: aiguière) அகராதிகள் தருகின்றன. இத்தகு கலன்கள் தண்ணீர், எண்ணெய் போன்ற நீர்மங்களை வைக்க பயன்பட்டன. மேலும் "c. 1000" என்பதை "காலம்: 10ஆம் நூற்றாண்டு", அல்லது "ஆண்டு: சுமார் 1000" என்று குறிப்பிடலாம். --பவுல்-Paul 04:51, 23 சனவரி 2012 (UTC)Reply

நன்றி பவுல். எனக்கு அது என்னவென்று தெரிந்திருக்கவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். தாங்களே மாற்றியிருக்கலாம் :) எடுத்துக் கூறியதற்கும் நன்றி :) இனி அவ்வாறு பயன்படுத்துகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:39, 2 நவம்பர் 2013 (UTC)Reply

பெயர் தொகு

படிகக்கல் / பளிங்குக்கல் --AntanO (பேச்சு) 02:40, 12 சனவரி 2021 (UTC)Reply

தமிழ்நாட்டில் மக்கள் வழக்கில் வெங்கச்சங்கல்[1] என்பது பெயர்.--கு. அருளரசன் (பேச்சு) 00:34, 14 மே 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குவார்ட்சு&oldid=3715038" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குவார்ட்சு" page.