பேச்சு:கேரளம்
பண்பாடு
தொகுகாட்டுப்பகுதியை அழித்து விளைநிலமாக மாற்றும்போது, ஏழில் ஒரு பங்கினை மட்டும் அப்படியே விட்டுவைப்பது கேரள நாட்டின் பாரம்பரியம். இவற்றைக் காவுகள் என்றும் சர்ப்பக்காவுகள் எனவும் குறிப்பிடுகின்றனர். பக்.231[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86618-12-0.
{{cite book}}
:|first=
missing|last=
(help); Check date values in:|date=
(help); Unknown parameter|Location=
ignored (|location=
suggested) (help)
Not Coconut, but Chera Dynasty
தொகுSorry for not writing in Tamil. But I saw "கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும்". This is not at all true. This is a long-held misunderstanding. In fact the term "Keralam" came from "Chera+alam" which means homeland of ancient Tamil dynasty Cheras. Please refer some authentic history works. - വിക്കിപീഡിയ മുതലാളി (பேச்சு) 03:18, 18 சூலை 2012 (UTC)
- //கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அதனைத் தருவி கேரளம் என அழைக்கப்படுகிறது.// என்ற பகுதியைக் கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன். இதற்கு ஆதாரம் எதுவும் தரப்படவுமில்லை.--Kanags \உரையாடுக 23:50, 20 சூலை 2012 (UTC)
- கரை+அளம் (பகுதி) என்பது கரையளம் என்றாகி, கேரளம் என்று மருவியிருக்கலாம். இப்படி "தமிழகவும் த்ராவிடமாஹாத்ம்யவும்" என்ற மலையாள நூல் குறிப்பிடுகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:14, 10 சனவரி 2014 (UTC)
கேரளத்து ஊர்ப் பெயர்கள்
தொகுகேரளத்து ஊர்ப் பெயர்கள் தமிழுக்கு நெருக்கமாக இருப்பின், தமிழ் வழக்கையே முதன்மைப்படுத்தியிருக்கிறேன். விளக்கத்தை கீழே காணவும்.
1. அ என்று முடியும் ஊர்ப் பெயர்கள், ஆ என்று முடியும் சமசுகிருதச் சொல்லாகவோ, ஐ என்று முடியும் தமிழ்ச் சொல்லாகவோ இருக்கலாம். அந்த சொல்லை பொருத்து, ஆ என்று முடியமெனில், ஆ என்று எழுதியிருக்கிறேன். ஐ என்று முடியும் சொல்லாக இருப்பின் ஐ என்று தமிழ் வழக்காக்கி இருக்கிறேன். (சில காலத்திற்கு முன்பிருந்தே, ஐ என்ற எழுத்து பல மலையாளச் சொற்களில் இல்லை. ஐ என்ற எழுதிற்கு இணையாக அ என்றும் அய் என்றும் எழுதியிருக்கின்றனர்.)
- எடுத்துக்காட்டுகள்:
கீழ்க்காணும் மாதிரி முடியும் சொற்களும், அவற்றின் தமிழ் இணைகளையும் கீழே பார்க்கவும்.
- கோட்ட - கோட்டை
- பாற - பாறை
- கடவ் - கடவு
- பறம்பா - பறம்பு
- கட - கடை
- ஸ்ஸேரி - சேரி
- கர - கரை
- விள - விளை (கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள பல ஊர்களில் விளை என்ற சொல் இருக்கும்)
- பால - பாலை
- மல - மலை
- பழய - பழைய (சொல்லின் தொடக்கத்திலோ, நடுவிலோ வரும்.)
2. சொல்லின் இறுதிப்பகுதியே தமிழ் வழக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. சொல்லின் முதலிலோ, நடுவிலோ தமிழ் மூலச் சொல் இருந்தால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் மலையாள வழக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. தமிழ் வழக்கிற்கும் வழிமாற்று தரப்பட்டுள்ளது.
- சிறயின்கீழ் - சிறையின்கீழ்
- கோட்டக்கல் - கோட்டைக்கல்
- மலப்புறம் - மலைப்புறம்
3. த்ரு என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள், திரு என்றே தொடங்க வேண்டும். திரு என்ற சொல், காலப்போக்கில் த்ரு என மாறியுள்ளது. ஒரு சில ஊர்ப் பெயர்களே ”த்ரு” என தொடங்குகின்றன. இவற்றை சிலர் இன்றும் திரு என்று சொல்கின்றனர். பல ஊர்ப் பெயர்கள் இன்றும் திரு என்றே தொடங்குகின்றன.
- த்ருக்காக்கர - திருக்காக்கரை
- த்ருஸ்ஸூர் - திருச்சூர்
4. ங்க, ஞ்ச, ந்த, ன்ற உள்ளிட்ட எழுத்துக்கூட்டல்களை ங்ங, ஞ்ஞ, ந்ந, ன்ன என்று எழுதுவது மலையாள வழக்கம். அந்த விதியின் பெயர் நினைவில்லை. (தமிழுக்கும் மலையாளத்திற்கும் இருக்கும் முக்கியமான மூன்று வேறுபாடுகளில் இதுவும் ஒன்று.) மூலப் பெயருக்கு மதிப்பளிக்கும் விதத்தில், மலையாளச் சொல்லை தலைப்பாகவும், தமிழ்ச் சொல்லை வழிமாற்றாகவும் ஆக்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் போதிய எழுத்துகள் இல்லாமையால் 'ஞ்ஞ' என்பதை 'nja/nha' என்றும், 'ங்ங' என்பதை 'nga' என்றும் எழுதுகின்றனர். எனவே, nj/ng/nh என்று வரும் ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பில் படிக்க வேண்டாம்.
- கொடுங்ஙல்லூர் - கொடுங்கல்லூர்
- மீனங்ஙாடி - மீனங்காடி
- காஞ்ஞிரப்பள்ளி - காஞ்சிரப்பள்ளி
5. ’ന’ என்ற மலையாள எழுத்து ந,ன இரண்டிற்கும் சேர்த்தே பயன்படுகிறது. ’ന്ന(ന്+ന)’ என்பதை ’ன்ன/ந்ந’ என்று எடுத்துக் கொள்ளலாம். இடத்திற்கு ஏற்றாற்போல், ’ந்த’ என்றும், ‘ன்ற’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். எ.கா:
- ഇന്നു - இன்னு => இன்று (இந்நு என்று வராது. இந்து என்ற சொல் இல்லை.)
- വന്നു - வந்நு => வந்து (வன்னு என்று வராது. வன்று என்ற சொல் இல்லை)
- இடத்திற்கு ஏற்ப எழுத வேண்டும்.
- வயநாடு (வயனாடு) (வயல்+நாடு=வயனாடு என்று திரிந்திருக்கலாம். இது விதிவிலக்கு. திரிபுகள் இல்லாத ஏனைய இடங்களில் நாடு என்றே எழுதவேண்டும்.)
- வள்ளிக்குன்னு - வள்ளிக்குன்று
6. மலையாளப் பெயர்கள் திரிந்திருக்கும் எனில், நெருங்கிய தமிழ்ப் பெயரை தலைப்பாக கொள்ளலாம்.
- த்ருஸ்ஸூர் - திருச்சூர்
7. மலையாளத்தில் குற்றியலுகரம் உண்டு. குற்றியலுகரம் என்பது சொல்லின் இறுதியில் வரும் குறுகிய ’உ’ எனும் ஒலி. வீடு, நாடு போன்றவற்றை உச்சரித்தால் தெரியும். மலையாளத்தில் குற்றியலுகரத்தை ’ു്’ என்று குறிப்பார்கள். இறுதி எழுத்தில் ’உ’ என்ற உயிருடன் புள்ளியும் வைப்பார்கள். எ.கா: 'കു്' (கு் - தமிழில் புள்ளியிடும் பழக்கம் தற்காலத்தில் இல்லை. முன்பு இருந்ததாம்.) எனினும். தற்காலத்தில் 'കു്' என்று எழுதும் வழக்கம் கற்றோரிடம் மட்டுமே இருக்கிறது. இதற்கு சில்லெழுத்துகளும் காரணம். இறுதியில் வரும் ’உ’கரத்தை எடுத்துவிட்டு புள்ளியை மட்டும் வைத்து எழுதுகின்றனர். எழுத்து மட்டுமே வேறுபடுகிறது. ஒலியமைப்பு ஒன்றே.
- காடு - காட்
- நாடு - நாட்
- வீடு - வீட்
8. ർ என்பது ர் என்பதற்குச் சமமான எழுத்து (இந்த எழுத்து பயன்பாட்டில் வந்த பொழுதில் இருந்தே). இருந்த போதும், ’ற்’ என்ற எழுத்து, சொல்லின் இறுதி எழுத்தாக இருந்தாலும், ർ என்ற எழுத்தை பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கம் முற்காலத்தில் இல்லாமல் இடையில் தோன்றியது. ஆறு என்ற சொல்லை ஆர் என்பதைப் போல எழுதுகின்றனர். ஆறு என்னும் சொல் இறுதியில் குற்றியலுகரம் கொண்டது. முழுமையான று ஒலி வராது. தமிழில் ஒலிப்பதைப் போன்றே ஒலிக்கின்றனர்.
எனவே, பெரியார் என்பது பெரியாற்றைக் குறிக்கும். தமிழிலும் இந்த வழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. ஆறுகளின் பெயர்களை ஊர்களுக்கு சூட்டினாலும், ’ர்’ என்று முடிக்கின்றனர். எ.கா: ஊர்ப் பெயர் - ஆறு
- பெரியார் - பெரியாறு
- அடையார் - அடையாறு
- வயலார் - வயலாறு
8. மலையாளப் பெயர்கள் சமசுகிருத, வேற்று மொழி மூலத்தைக் கொண்டிருப்பின், அதை தமிழாக்கவில்லை. மூலப் பெயரிலேயே எழுதப்படுகின்றன. எல்லைப் பகுதிகளில் தமிழ் வழக்கம், புழக்கத்தில் இருக்கும் எனில், அதையும் கட்டுரையில் குறிப்பிடுவோம்.
இதை ஒரு குறிப்புக்காக பதிந்துவைக்கிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:07, 16 சூலை 2014 (UTC)