பேச்சு:கைகர்-மார்சதென் சோதனை
Kanags ஐயா, TNSE என்றாலே அது தரமற்றது என்ற முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது. தயவு செய்து இதன் ஆங்கில கட்டுரையை ஒப்பிட்டு பார்க்கவும். அப்போது தான் நாங்கள் செய்துள்ள வேலை புரியும். கட்டுரை மொழியாக்கம் தற்போதைய அரசு தமிழ் பாடநுால் மொழியில் எழுதப்பட்டுள்ளது.--மணிவண்ணன் (பேச்சு) 08:34, 10 சூன் 2017 (UTC)
- மணிவண்ணன், எனது திருத்தத்தில் என்ன தவறு கண்டீர்கள் எனக் கூறினால் பதில் அளிக்கலாம். நான் உங்கள் கட்டுரையை விக்கி நடையில் திருத்தினேன். அவ்வளவு தான். நீங்கள் விரும்பினால், எனது திருத்தத்தை மீள்விக்கிறேன். நீங்கள் திருத்துகிறீர்களா? மணிவண்ணன், பாடநூல் எழுதுவதென்றால் நீங்கள் விக்கிநூலில் பாடநூல்களை எழுதலாம்.--Kanags \உரையாடுக 09:19, 10 சூன் 2017 (UTC)
ஐயா உங்கள் திருத்தத்தில் தவறேதும் இல்லை.நான் என்ன தவறு செய்ததாதல் கட்டுரை ஓதுக்கப்பட்டது என அறிய விழைகிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 10:08, 10 சூன் 2017 (UTC)
- உங்கள் கட்டுரையில் எந்தப் பகுதியும் ஒதுக்கப்படவில்லை. நீங்கள் மேலே நான் தந்துள்ள இணைப்பைச் சொடுக்கினீர்கள் என்றால் எனது திருத்தங்களை அறிய முடியும். அதில் ஏதாவது தவறு இருந்தால் கூறுங்கள் திருத்துகிறேன்.--Kanags \உரையாடுக 10:41, 10 சூன் 2017 (UTC)
நன்றி ஐயா.மீண்டும் உங்கள் திருத்தத்தில் தவறேதும் இல்லை.எனக்கு தெரிந்த வரை,நான் கருத்தியல் ரீதியாக தவறேதும் புரியவில்லை என நினைக்கிறேன்.மொழிநடைக்கு மேலும் சில காலம் தேவைப்படும்.--மணிவண்ணன் (பேச்சு) 10:57, 10 சூன் 2017 (UTC)
Kanagsஐயா இந்த பக்கத்தை நீக்கி விட வேண்டுகிறேன். இது காறும் விக்கியில் சில கட்டுரைகள் வெளியிட அனுமதித்தற்கு நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 05:01, 13 சூன் 2017 (UTC)
- மணிவண்ணன், எதற்காக இப்பக்கத்தை நீக்க வேண்டும் என்று அறியலாமா?--Kanags \உரையாடுக 08:57, 13 சூன் 2017 (UTC)
- மணிவண்ணன், இக்கட்டுரை நன்றாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். உங்களைப் போன்று சிறப்பாகப் பங்களித்து வரும் ஆசிரியர்களை மிளிரும் ஆசிரியர்கள் என்ற பக்கத்தில் மகிழ்வுடன் குறிப்பிட்டு வருகிறோம். ஆசிரியர்களுக்கான பயிற்சிக் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்தும் தன்னார்வத்தின் பெயரில் சிறப்பான பங்களிப்புகளை நல்கி வரும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். தங்கள் கட்டுரை ஏன் ஒதுக்கப்பட்டதாக உணர்கிறீர்கள்? விளக்கிச் சொன்னால் எங்கு தவறு நேர்கிறது என்று புரிந்து கொள்வோம். தற்போது, தொடர்பாடல் பிழையால் தேவையற்ற புரிதற் பிழை உள்ளதாகவே தோன்றுகிறது. --இரவி (பேச்சு) 09:25, 13 சூன் 2017 (UTC)
இரவி ஐயா நன்றி --மணிவண்ணன் (பேச்சு) 09:34, 13 சூன் 2017 (UTC)