பேச்சு:கோப்பா அமெரிக்கா


தலைப்பை மாற்றுக

தொகு

Copa America என்பதை கோப்பா அமெரிக்கா என எழுத வேண்டும். கோபா என்றால் Coba என்றே உச்சரிக்க வேண்டும். இது தொடர்பான தலைப்புகள் அனைத்தையும் மாற்ற வேண்டும். @Rsmn:.--Kanags \உரையாடுக 23:11, 10 சூன் 2016 (UTC)Reply

தலைப்பை மாற்றலாம்; அமெரிக்கக் கோப்பை என்று தமிழாக்கம் செய்யலாமா ? மற்ற மொழிகளில் செய்யவில்லை.--மணியன் (பேச்சு) 02:05, 11 சூன் 2016 (UTC)Reply
பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்காமல் Copa America" என்றே தலைப்பிட்டுள்ளார்கள். உருசிய, உக்ரைன், வியட்நாமிய போன்ற சில மொழிகளில் அமெரிக்கக் கோப்பை (கால்பந்து) என எழுதியிருக்கிறார்கள். அமெரிக்கக் கோப்பை என்ற தலைப்பில் வேறும் ஒன்றிரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போதுள்ளது போன்று கோப்பா அமெரிக்கா எனவோ அல்லது அமெரிக்கக் கோப்பை (காற்பந்து) எனவோ நாம் தலைப்பிடலாம். கோப்பா அமெரிக்கா என்பது எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 02:14, 11 சூன் 2016 (UTC)Reply
அமெரிக்கக் கோப்பை என்பது இயல்பிருப்பாக ஐக்கிய அமெரிக்காவை குறிப்பதாக பொதுவழக்கில் அமைந்து விட்டது. தவிரவும் அமெரிக்கக் கோப்பை (காற்பந்து) எனப் பெயரிட்டாலும் அங்கு விளையாடப்படும் வகையான காற்பந்துப் போட்டி எனப் பொருள்படலாம். எனவே எனது பரிந்துரையும் கோப்பா அமெரிக்கா என்பதே யாகும். எசுப்பானிய மொழியில் உள்ளது என்பதால் உடனடியாக தென்னமெரிக்காவுடன் தொடர்புபடுத்தப்படும். தவிரவும் உலகளவில் இவ்வாறே அறியப்படுகின்றதால் இயற்பெயராகவும் கொள்ளலாம். மாற்றுக்கருத்து எதுவும் பதியப்படாவிட்டால் நாளை மாற்றங்களை மேற்கொள்கிறேன்.--மணியன் (பேச்சு) 13:14, 11 சூன் 2016 (UTC)Reply
கோப்பா அமெரிக்கா   விருப்பம்--AntanO 13:52, 11 சூன் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோப்பா_அமெரிக்கா&oldid=2075106" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோப்பா அமெரிக்கா" page.