கோளம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

உங்கள் கட்டுரை அழகாக உள்ளன ஆனால்! கோளம் மற்றும் உருண்டை என்னும் சொல் பாவிக்கப்பட்டன!! ஆனால் இவை இரண்டும் வேறுபட்டன!! வேறுபட்ட வடிவம் கொண்டன!! நன்றி. உருண்டை வடிபம் என்பது > மையத்தில் இருந்து அனைத்து திசைகளும் ஒரே அளவை கொண்டன. கோளம் என்பது மையத்தில் இருந்து வேறுபட்ட அளவை கொண்டன!! நன்றி .--சிவம் 00:45, 16 செப்டெம்பர் 2012 (UTC)

  • மேற்பரப்பில் அமையும் அனைத்து புள்ளிகளும் அதன் மையத்திலிருந்து சமதூரத்தில் அமையும் உருவையே இக்கட்டுரை குறிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் கோளம், உருண்டை இவற்றுக்கான வெவ்வேறு ஆங்கிலச் சொற்களைத் தந்தீர்களானால் உங்களது கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன். எதற்கும் கோளவுரு என்ற கட்டுரையையும் பார்க்கவும்--Booradleyp (பேச்சு) 01:10, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் பூரட்லேப். நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் கட்டுரை மிகவும் அழகான விளக்கத்தை கொண்டுள்ளன, அதேவேளை உங்கள் ஆரம்ப கட்டுரை வடிவவியலில் கோளம் அல்லது உருண்டை(Sphere) என்பது முப்பரிமாண வெளியில் அமைந்த ஒரு உருண்டையான வடிவியல் பொருளாகும். இதன் வடிவம் ஒரு உருண்டையான பந்து போன்றது. (இது ஒரு உருண்டையான பந்து போல் அல்லாமல் கோளை வடிவமானது.)--சிவம் 02:51, 16 செப்டெம்பர் 2012 (UTC)

  • கோளம், உருண்டை என நீங்கள் குறிப்பிடும் உருவங்களின் ஆங்கிலச் சொற்களைத் தந்தால்தான் என்னால் நீங்கள் கூற விழைவதைப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 03:07, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply
கோளம் உருண்டை இரண்டும் ஒன்றே. சிவம் "கோளம்" என்று குறிப்பிடுவது en:Oblate spheroid என்பதாக இருக்கலாமோ என்று கருதுகின்றேன். புவி போன்றவை சுழல் அச்சு முனைப் பகுதிகளில் சற்று தட்டையாகவும், நிலநடுவரைக் கோட்டின் பக்க சற்று புடைத்தும் இருக்கும் முத்திரட்சி உருண்டை வடிவாக இருக்கும் என்று குறிப்பிட வருகின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் உருண்டை, கோளம் என்பது இரண்டும் ஒரே கருத்தைக் குறிக்கும் சொற்களே.. --செல்வா (பேச்சு) 04:14, 16 செப்டெம்பர

வணக்கம் உங்கள் இருவருக்கும். கணிதவியலின் படி பாரிய வேறுபாடு இந்த கோளை மற்றும் உருண்டைக்கும் உள்ளது! இரண்டும் ஒன்று அல்லா!!! பூமியானது கோளை வடிவானது! உருண்டை வடிவம் அல்ல!!! பந்து என்பது உருண்டை வடிவானது அதாவது கால் பந்து! உருண்டை ஆனா ஒரு பொருளை எத்தனை துண்டுகளாக வெட்டி ஒரு வரை முறையில் பொருத்தும் பொழுதும் அவை உருண்டையாகத்தான் அமையும்!!! ஆனால் கோளை ஆனா ஒரு பொருளை அதே மாதிரி வெட்டி அதே வரை முறையில் பொருத்தும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தாதது!!! மாறு பட்ட வடிவமாக அமையும்!!! ஐந்தாம் வகுப்பு சமுகக்கல்வி கேள்வி பூமியின் வடிவம் என்ன வடிவமானது? விடை: உருண்டை வடிவானது, கோளை வடிவானது, வட்டவடிவம்மானது! இதற்க்கு விடை தெரிந்தால் உங்களிக்கான விடையும் கிடைக்கும். ஒரு உருண்டையின் நடு விட்டம் 100x100 ஒரு கோளையின் நாடு விட்டம் 100x90 ஆகும் --சிவம் 04:56, 16 செப்டெம்பர் 2012 (UTC) 100x100= உருண்டை, 100x76இருந்து99= கோளை, 100x51இருந்து74= நீள்வட்டம், 100x50= அரைவட்டம் அல்லது அரை உருண்டை--சிவம் 05:10, 16 செப்டெம்பர் 2012 (UTC)

--- பூமி கோள வடிவமானதல்ல. அதன் வடிவத்தை (Geoid) புவி வடிவம் என்றே தற்போது வரையறுத்துள்ளனர். ஏனெனில் அது கோளத்தைப் போல் அல்லாமல் மேலும் கீழும் சற்று தட்டையாகக் காணப்படுவதனால். காண்க en: Geoid. ஏனெனில் எங்களுக்கு புதிய பாடநூல் பற்றிய பயிற்சி தரப்பட்டபோது இச்செய்தி விளக்கப்பட்டது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:53, 16 செப்டெம்பர் 2012 (UTC) Geoid என்பதற்கான தமிழ் பெயரை தருக்க அல்லது கோளை என்பதற்கான தமிழ் விளக்கத்தை தருக்க தயவாக.--சிவம் 06:02, 16 செப்டெம்பர் 2012 (UTC) http://www.google.de/imgres?q=Geoid&hl=de&sa=X&biw=1366&bih=667&tbm=isch&prmd=imvns&tbnid=be-xI9QW8476VM:&imgrefurl=http://www.leifiphysik.de/web_ph10_g8/umwelt_technik/14erdbeschleunigung/geoid.htm&docid=OH65pEOWIwjgRM&imgurl=http://www.leifiphysik.de/web_ph10_g8/umwelt_technik/14erdbeschleunigung/geoid.gif&w=426&h=460&ei=ZW1VUOfYLobctAaYnoHQCQ&zoom=1&iact=hc&vpx=975&vpy=138&dur=2523&hovh=233&hovw=216&tx=16&ty=219&sig=111949250278697337567&page=1&tbnh=150&tbnw=139&start=0&ndsp=18&ved=1t:429,r:4,s:0,i:85 உருவம் அற்ற ஒரு கோளை.--சிவம் 06:16, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply


பார்வதி, சிவம், நீங்கள் சொல்வதெல்லாம் நன்கு அறியப்பட்ட செய்தியே. கோளம் = உருண்டை = sphere என்பது வெகுகாலம் உள்ள கருத்து. பூமியின் வடிவம் கோளம் அன்று (அதாவது உருண்டை அன்று) என்பதும் நெடுங்காலம் அறிந்த ஒன்று. நீங்கள் பூமியின் வடிவத்தை (உருண்டை அல்லது சீருருண்டையில் இருந்து மாறுபட்ட வடிவத்தை) கோளம் என்று புனைந்து கொண்டு உருண்டை வேறு கோளம் வேறு என்கின்றீர்கள். பூமியின் வடிவத்தைத் (முனைப்பகுதி சற்று தட்டையாக இருக்கும் வடிவத்தை) தமிழில் சிறப்பான தமிழ்ப்பெயர் கொண்டு அழைத்து வந்ததில்லை (என்று நினைக்கின்றேன்). ஆங்கிலத்தில் Geoid என்னும் பெயர் 1880 இல் முதலில் பயன்படுத்தினாலும், கடந்த சில பத்தாண்டுகளாகத் தான் சற்றுக் கூடுதலான பயன்பாட்டில் உள்ளது. தமிழில் பூசணியுருண்டை எனலாம். சுழலச்சின் முனைப்பகுதி சற்று தட்டையாகவும், நிலநடுக்கோட்டு வளையப்பகுதி சற்று புடைத்தும் இருக்கும் வடிவம். கணிதவியலில் உருண்டை என்பது அதன் நடுவின் வழியாகப் பாயும் எந்தச் சமதள வெட்டுத்தளமும் ஒரே சீராக ஒரே அளவான வட்டமாக இருக்கும். இதனை வலியுறுத்த உருண்டையை சீருருண்டை எனலாம். ஆனால் oblate spheroid என்பது ஒரு நீள்வட்டத்தின் சிறுவிட்டத்தை அச்சாகக் கொண்டு சுழற்றினால் உருவாகும் நடுப்புடை உருண்டை ஆகும். இந்தச் சிற்றச்சு நடுப்புடை உருண்ட ஏறத்தாழ பூசணிக்காய் வடிவம் போல் இருப்பதாகக் கூறலாம். எனவே பூசணியுருண்டை என்றோ சிற்றச்சுச்சுழல் நீளுருண்டை என்றோ கூறலாம். இதே போல புரோலேட்டு உருண்டை Prolate spheroid என்பது ஒரு நீள்வட்டத்தின் பேரச்சைச் (பெரிய அச்சைச்) சுழலச்சாகக் கொண்டு சுழற்றினால் உருவாகும் உருண்டை வடிவாகும். இதனைப் பேரச்சுச்சுழல் நீளுருண்டை எனலாம். இது வெள்ளரிக்காய் வடிவம். எனவே வெள்ளரியுருண்டை என்றும் கூறலாம். பூமியின் வடிவம் பூசணியுருண்டை வடிவில் (சிற்றச்சுச்சுழல் நீளுருண்டை) வடிவாக இருந்தாலும், அது உருண்டையில் இருந்து மாறுபடுவதைக் குறிக்க சிற்றச்சின் அரை நீளத்தையும் பேரச்சின் அரை நீளத்தையும் ஒப்பிட்டுக்கூறுவது மரபு. இந்த இரண்டு அரை நீளங்களும் சரிசமமாக இருந்தால் அது உருண்டை. சிற்றச்சின் அரை நீளம் பேசச்சின் அரை நீளத்தை விட எவ்வளவு சிறிதாக இருக்கின்றதோ அவ்வளவு அதன் முனைத்தட்டைமம் கூடும். சிற்றச்சின் அரை நீளத்தை b என்றும் பேரச்சின் அரை நீளத்தை a என்றும் குறித்தால், முனைத்தட்டைமத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் f என்பதை

என்று குறிப்பார்கள். நாம் வாழும் நிலவுலக, மண்ணுருண்டைப் புவிக்கு a = 6378.137 கி.மீ, b ≈ 6356.752 கி.மீ, எனவே இதன் உயரக்கிடைம விகிதம் 0.99664717, அல்லது முனைத்தட்டைமம் (flattening) 0.003352859934 ஆகும். உருண்டை அல்லது சீருருண்டைக்கு உயரக்கிடைம விகிதம் 1 ஆகவும் முனைத்தட்டைமம் 0 ஆகவும் இருக்கும் (ஏனெனில் முனைத்தட்டைமம் ஏதும் கிடையாது).

--செல்வா (பேச்சு) 17:18, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சுழலச்சுக்குச் செங்குத்தான திசையின் உள்ள வளையத்தை நடு வளையம் என்று கொண்டால், இளைநடு உருண்டை (prolate spheroid), என்றும், பருநடு உருண்டை (oblate speroid) என்றும் சுருக்கமாகக் கூறலாம். பருநடு உருண்டை என்பது பூசணியுருண்டை, இளைநடு உருண்டை என்பது வெள்ளரி உருண்டை. பொதுவாக spheroid என்பதை உருண்டையனை என்று குறிக்கலாம். உருண்டையனை என்பது உருண்டை போன்ற வடிவம் என்பதைக் குறிக்கும். அனை என்பது போன்ற, ஒத்த, இனமான என்னும் பொருள்கள் தரும் சொல். ஏறத்தாழ -oid என்னும் பின்னொட்டு போன்றதே.--செல்வா (பேச்சு) 18:15, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் செல்வா. உங்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அதே வேளை நீங்கள் இங்கே குடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களை உங்கள் கட்டுரையில் இணைப்பது சாலச் சிறந்தது என்று எண்ணுகிறேன், அத்தோடு தேவை அற்ற சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். நீங்கள் இங்கு பேச்சு பக்கத்தில் இருக்கும் உதாரணங்களை உங்கள் கட்டுரையில் சேர்க்கப்பட்டால் இது ஒரு பெறுமதி மிக்க கட்டுரை ஆகும் என்பது என் நம்பிக்கை. நன்றி --சிவம் 19:11, 16 செப்டெம்பர் 2012 (UTC)

உண்மையில் திரு. செல்வா இங்கு குறிப்பிட்டு இருக்கும் அருமையான விளக்கத்தை என் வாழ்வில் வேறு யாருமே தரவில்லை, அதேவேளை எனக்கு இருந்த சந்தேகங்கள் இப்போது அறவே இல்லாமல் பொய் உள்ளது இதை இட்டு நான் பெருமகிழ்ச்சி அடிக்கிறேன் அதேவேளை உங்களின் மாணவனாகவும் நான் இருக்க விரும்புகிறேன். நன்றி திரு செல்வா.--சிவம் 19:22, 16 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், நன்றி. நான் ஒன்றும் சிறப்பாகச் சொல்லவில்லையே இங்கே! கலைச்சொற்கள் தந்ததைத் தவிர. உங்களுக்குப் பிடித்திருந்தது என்பதை அறிந்து மகிழ்கின்றேன். தனியாக பருநடு உருண்டை, இளைநடு உருண்டை என்பனவற்றுக்குக் கட்டுரைகள் எழுதுகின்றேன், விரைவில். பொதுவாகத் தமிழில் படிக்கும்பொழுது, நம் உள்வாங்கல்கள், நாம் புரிந்துகொள்ளும் விதம் முதலியன சற்று எளிமையாகவும் ஆழமாகவும் இருப்பதை உங்களைப் போலவே நானும் பிறரும் உணர்ந்திருக்கின்றோம். எனவே சிவம், உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. மேலே நான் எழுதியிருந்தவற்றில் இருந்த சில எழுத்துப்பிழைகளையும் திருத்தி உள்ளேன். சிலவற்றைச் சாய்வெழுத்துகளிலும் எழுதியுள்ளேன். --செல்வா (பேச்சு) 18:35, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply
பூசணியுருண்டை, வெள்ளரியுருண்டை அழகாக உள்ளது செல்வா. :) என் ஒரே கவலை தோட்டக்கலைத் தேர்வின்வழியாகவும், ஆய்வகத்தில் செய்யும் மரபணு மாற்றத்தினாலோ பூசணியும் வெள்ளரியும் உருமாறிவிட்டால் என்ன ஆகும் என்பதே! ஏற்கனவே சுரைக்காய் எவ்வளவோ உருமாறிப் பருத்த, வழுவழு புடலங்காய் போல ஆகிவிட்டது. -- சுந்தர் \பேச்சு 12:48, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

Geoid

தொகு

வணக்கம் திரு செல்வா. எனக்கு வேறும் ஒரு கட்டுரைக்கான சரியான தமிழ் ஆக்கத்தை உங்களால் தர முடியுமா?? ஆங்கிலத்தில் Geoid என்று சொல்லுக்கான சரியான தமிழ் விளக்கக் கட்டுரை உங்களால் தர முடியுமா?? நீங்கள் மேலே குறிப்பிட்டு இருக்கும் பருநடு உருண்டை, இளைநடு உருண்டை இவை இரண்டுடனும் Geoid என்பதன் சரியான தமிழ் விளக்கத்த தருவீர்கள் ஆனால் மேலும் நான் திருப்த்தி அடைவேன். நன்றி --சிவம் 20:49, 17 செப்டெம்பர் 2012 (UTC)

Geoid என்பது முற்றிலும் வேறான ஒரு கருத்து. அது உருண்டை போன்றோ நீள்வட்டத்தை அதன் சிறிய-பெரிய அச்சுகளில் சுழற்றிப்பெறும் சீரான நீளுருண்டை வடிவுகளில் ஒன்றோ அன்று. Geoid என்பது மேடும் பள்ளமுமாக இருக்கும், (நீளுருண்டைகளின்) சீர்வளைவுகள் அற்ற, ஆனால் புவியீர்ப்பின் அடிப்படையில் சராசரி கடல் மேற்பரப்பின் நீட்சியாக, மலைகளையும் மற்ற ஏறத்தாழ்வுகளையும் கொண்ட தரைப்பரப்பை மண்ணுருண்டையின் ஈடாடக்கொள்ளும் புவிமேற்பரப்பு. இதனைப் புவியப்பரப்பு, புவியவுருண்டையின் பரப்பு என்று கூறலாம். இந்தச் சராசரியானப் புவியப்பரப்பு, வெறும் மலைகள் கடல்களின் சராசரி உயரத்தால் மட்டும் அமைவதன்று, புவியீர்ப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புகோள் புவியப்பரப்பு. இடாய்ச்சு மொழி (செருமன் மொழி) விக்கியில் Das Geoid ist eine Bezugsfläche im Schwerefeld der Erde zur Vermessung und Beschreibung der Erdfigur என்று கூறுகின்றார்கள். Bezugsfläche என்பது ஒப்பிட்டுப்பார்க்கும், அல்லது ஒப்பாகக் கொள்ளும் பரப்பு. Fläche என்பது பரப்பு. இது Schwerefeld (ஈர்ப்புப்புலம்) என்னும் ஈர்ப்புப்புலத்தில் அதன் விளைவால் காணப்படும் ஒப்பீட்டுப் புவியப் பரப்பு. எனவே கருத்தளவில் சராசரியான புவியீர்ப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புகோள் புவிப்பரப்பு. சீராக அமைந்த நடுபருவுருண்டையின் பரப்பில் இருந்து ஆங்காங்கே சராசரியாக 200 மீட்டர் மட்டுமே மாறுபடும் இக்கட்டுரையைத் தமிழில் நன்றாக ஆக்க முடியும். ஆக்க முயல்கின்றேன். (என்னைச் செல்வா என்றே தயங்காமல் அழையுங்கள், சிவம்). --செல்வா (பேச்சு) 00:06, 18 செப்டெம்பர் 2012 (UTC)Reply


வணக்கம் செல்வா. பிற மனிதர்களுக்கு மரியாதை குடுக்கும் பண்பு கொண்டவர்கள் நாம். அதனால் பெயர் சொல்லி அழைக்கும் போது மனசுக்கு சற்று சங்கடமாக உள்ளது. வேறு சில நண்பர்களும் நீங்கள் சொல்வது போன்றே சொன்னார்கள். மேலும் யேர்மனிய மொழியில் வேறு சில கட்டுரைகளை பாக்கும் போது பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன, அதானால்த்தான் உங்களிடம் இந்த உதவியை கேட்டேன். காரணம்: எனக்கு தமிழ் நன்றாக தெரிந்தாலும் துறை மற்றும் பொருள் சார் தமிழில் பாரிய கஸ்டபடுகிறேன். காலப்போக்கில் சரி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதேவேளை. Geoid என்பதற்கான தமிழ் விளக்கம் இன்றைய உலகில் பெரிதும் அவசியமானது அதனால் உங்களிடம் இந்த உதவியை வேண்டி நிக்கின்றேன். Geoid என்பதின் யேர்மனிய கட்டுரையை படிக்கும் பொழுது மிகவும் சுவாரிசியமாக உள்ளன. ஆனால் அதை தமிழாக்கும் திறன் என்னிடம் இல்லை. நன்றி.--சிவம் 00:28, 18 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோளம்&oldid=1223270" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோளம்" page.