பேச்சு:கோவிட்-19 பெருந்தொற்று

ஆங்கில விக்கியில் 2019–20 coronavirus outbreak என்பதாக தற்போது தலைப்பு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவிலும் தலைப்பில் ஊகான் என்பதனை நீக்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:40, 7 மார்ச் 2020 (UTC)

உலகம்பரவு நோய் என்பதற்கு நிகரான கலைச்சொல் கிடைத்தால், தலைப்பில் மாற்றம் செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:59, 13 மார்ச் 2020 (UTC)

தொற்று? நோய்த்தொற்று? தொகு

வைரசுத் தொற்றானாலும் பிணி ஏற்படுத்தும் தொற்றுதானே. எனவே கொரோனாவைரசு பிணித்தொற்று என்றோ கொரோனாவைரசு நோய் தொற்று என்றோ தலைப்பிடலாமா. - எஸ்ஸார் (பேச்சு) 08:56, 29 மார்ச் 2020 (UTC)

தேவையற்றது. வைரசுத் தொற்றே சரி.--Kanags \உரையாடுக 10:34, 29 மார்ச் 2020 (UTC)

தலைப்பு தொகு

கோவிட்-19 என்பது இலக்கணப் பிழை. கொவிடு-19 என்றால் சரி. அடுத்தது, இவ்வுயிரின வகையின் பெயரை கொரோனாவைரசு என்று ஆங்கிலத்தைப் போன்று ஒரே சொல்லில் எழுத வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. பெயர் தேவையின்றி நீளாமல் இருக்க, தமிழில் இதை கொரோனா வைரசு எனப் பிரித்தெழுதுவதே சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 14:17, 12 சூன் 2020 (UTC)Reply

Return to "கோவிட்-19 பெருந்தொற்று" page.