பேச்சு:சமிபாடு

சமிபாடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
சமிபாடு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

செரித்தல் கட்டுரையை இந்த சமிபாடு கட்டுரையுடன் வரலாற்றுடன் சேர்த்து இணைப்பதற்காக, அங்கிருக்கும் மேலதிக தகவல்களை இங்கே இணைக்கப் போகின்றேன். அவ்வாறு இணைத்து முடிந்த பின்னர், இரு கட்டுரைகளையும் வரலாற்றுடன் சேர்த்து இணைத்து விடுகின்றேன்.--கலை 15:45, 12 சனவரி 2011 (UTC)Reply

செரித்தல் கட்டுரை வரலாற்றுடன் சேர்த்து இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் சிலவும் இணைத்துள்ளேன். ஆனாலும் கட்டுரை இன்னமும் விரிவாக்கம் செய்யப்படலாம்.--கலை 23:13, 12 சனவரி 2011 (UTC)Reply

ஐயம்

தொகு
சமிபாடு எனும் சொல் எந்தப் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது? யாரேனும் விளக்கினால் பரவாயில்லை....
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:31, 18 மே 2011 (UTC)Reply
உங்கள் கேள்வி புரியவில்லையே. 'எந்தப் பகுதியில்' என்று எதனைக் கேட்கின்றீர்கள்?--கலை 11:20, 18 மே 2011 (UTC)Reply
உலகில் எந்தப் பகுதியில் வாழும் தமிழரிடையே பயன்படுத்தப்படுகிறது? எனக்குத் தெரிந்து நான் இச்சொல்லைத் தமிழகத்தில் (நான் சென்ற இடங்களுள்) கேள்விப்பட்டதில்லை.
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:32, 18 மே 2011 (UTC)Reply
இலங்கையில் பயன்படுத்துவது தெரியும். ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றதா எனத் தெரியாது. இது தொடர்பில் ஒரு உரையாடல் ஏற்கனவே நிகழ்ந்ததாக நினைக்கின்றேன். எங்கே என்று தேடிப் பார்க்க வேண்டும்.--கலை 14:53, 18 மே 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமிபாடு&oldid=2537062" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமிபாடு" page.