பேச்சு:சரதுசம்
சோராசுதிரர் என்பவரின் அறிவுறுத்தல்களை முதன்மையாகக் கொண்ட மதமே இது. இதனை ஆங்கில வழியைப் பின்பற்றி "இசம்" என்று கூறாமல் சோராசுதிதிரர் சமயம் எனக் கூறுவது பொருத்தம் என நினைக்கிறேன். இந்தியாவில் இதனைப் பின்பற்றுவோரைப் பார்சிகள் என்று அழைக்கின்றனர். மேலும், இங்கு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி ஆபிரகாமிய (இப்ராஹீமிய) சமயங்கள் சுவர்க்கம், நரகம் போன்ற ஈருலக நம்பிக்கைகளை இதிலிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற செய்தியாகும். இஸ்லாத்தைப் போதித்த முஹம்மது நபியவர்கள் எழுதவோ வாசிக்கவோ அறியாதவராகவே இருந்தார். அவர் இவ்வாறான எக்கருத்தையும் எந்த ஆசிரியரிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாக எந்தவித ஆதாரமுமில்லை.--பாஹிம் 23:35, 3 செப்டெம்பர் 2010 (UTC)
இதர பயனர்களும் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 01:11, 5 நவம்பர் 2010 (UTC)
தலைப்பு
தொகு- சோராசுதிரர் சமயம்
- சரத்துஸ்தரிய சமயம்
- சோறாசுரியனிசம்
தலைப்பு பற்றி பிற பயனர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 02:13, 5 நவம்பர் 2010 (UTC)
"மகாராஷ்டிரா"வை மராட்டியம் என்பது போல, "சௌராஷ்டிரம்" சௌராட்டிரம் என்பது போல, "சௌராஷ்ட்ரியனிசம்"ஐ, சௌராட்டிரியம்/சௌராட்டிரியனியம் எனலாமா? -- மகிழறிவன் 13:42, 31 ஆகத்து 2015 (UTC)
- ஆம், இதனை வரவேற்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:45, 31 ஆகத்து 2015 (UTC)
- தொடர் பங்களிப்பாளர் போட்டிக்காக இப்பக்கத்தை திருத்திக்கொண்டிருக்கிறேன். முன்பு பரிந்துரைத்தாற்போல பக்கத்தலைப்பை சொராட்டிரிய நெறி என்று மாற்ற விரும்புகிறேன். ஏனைய பயனர்களின் கருத்தை அறிய ஆவல். --5anan27 (பேச்சு) 19:00, 1 மே 2017 (UTC)