பேச்சு:சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled

Untitled தொகு

எந்த மொழியில் இங்கு கல்வி கற்ப்பிக்கப்படுகிறது ?? --Natkeeran 23:17, 13 சூலை 2011 (UTC)Reply

இப்பள்ளிக்கான வார்ப்புருவில் தமிழ்நாட்டு மாநில கல்வித்திட்டம் என்று உள்ளது. எனவே இங்கு பயிற்று மொழி தமிழாகத்தான் இருக்கும். மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழ் வழியில்தான் கல்வி கற்பிக்கப்படும். சில பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஒரு பிரிவு மட்டும் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டிருக்கின்றன. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:14, 14 சூலை 2011 (UTC)Reply
நன்றி. --Natkeeran 02:03, 14 சூலை 2011 (UTC)Reply

பள்ளியைப் பற்றிய தகவல்கள் (மேற்கோளுடன் காட்டப்பட்டவை) ஏன் நீக்கப்பட்டன? --PARITHIMATHI (பேச்சு) 05:13, 16 சூலை 2016 (UTC)Reply

தனிப்பட்ட தகவல்களை இங்கு சேர்க்க முடியாது.--Kanags \உரையாடுக 05:19, 16 சூலை 2016 (UTC)Reply
தனிப்பட்ட தகவல்கள் இல்லையே. மாணவர்களின் சாதனைகளும் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடும் தலைமை ஆசிரியர் பெயரும் எவ்வாறு தனிப்பட்ட தகவல் ஆகும்? --PARITHIMATHI (பேச்சு) 05:22, 16 சூலை 2016 (UTC)Reply
மோகன்குமார் என்பவர் முன்னாள் மாணவர் என்ற தகவலுக்கு மேற்கோள்கள் வேண்டும். சரியான மேற்கோள் இருந்தால் சேர்க்கலாம். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு சாதனைகள், மேலாண் குழு உறுப்பினர்கள் போன்றவற்றைக் கட்டுரையில் சேர்க்க முடியாது.--Kanags \உரையாடுக 06:38, 16 சூலை 2016 (UTC)Reply
ஏன் சேர்க்கக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தந்தால் எனக்குப் புரியும். மேலும் இது ஒரு பள்ளியைப் பற்றிய தகவல் பக்கம் தானே. அதனைப் பற்றி நாமாக எழுதும் கட்டு உரை அல்லவே. முன்னாள் மாணவர் பற்றிய தகவல் மேற்கோள் தரப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். நன்றி. --PARITHIMATHI (பேச்சு) 08:08, 16 சூலை 2016 (UTC)Reply
"10ம் வகுப்பு, 12ம் வகுப்பு சாதனைகள், மேலாண் குழு உறுப்பினர்கள் போன்றவற்றைக் கட்டுரையில் சேர்க்க முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்? தனிப்பட்ட தகவலுக்கு வரையறை என்ன? பயனர்--PARITHIMATHI (பேச்சு) 01:27, 20 சூலை 2016 (UTC)Reply
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு சாதனைகள், மேலாண் குழு உறுப்பினர்கள் போன்றவற்றைக் கட்டுரையில் சேர்க்க முடியாது" பள்ளி என்றால் படிப்பு, விளையாட்டு முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு பள்ளி சாதனை புரியும். சாதனை புரியும் மாணவர்களின் பெயர் விபரங்களை வெளியிடும் விளம்பரத்தளம் விக்கிப்பீடியா அல்ல.--Kanags \உரையாடுக 08:28, 20 சூலை 2016 (UTC)Reply
கனகு ஐயா, விக்கியின் வரைமுறைகள் (Rules) இருந்தால் தரவும். உங்களது வரைமுறையும் விக்கியின் வரைமுறையும் ஒன்றாக இருந்தால் சரி. மேலும், ஒரு கல்வி நிலையத்தின் அதன் தேர்ச்சி விகிதம் சாதனை என்று யார் சொன்னது? அதை விளம்பரம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது பள்ளியைப் பற்றிய ஒரு தகவலே. -- PARITHIMATHI (பேச்சு) 04:14, 23 சூலை 2016 (UTC)Reply
விக்கியில் இதற்கு வரைமுறை ஏதும் இருக்கிறதா எனத் தெரியாது. ஆனால் விக்கியில் எவ்வாறான தகவல் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஒரு தெளிவுண்டு.--Kanags \உரையாடுக 04:37, 23 சூலை 2016 (UTC)Reply

PARITHIMATHI, நீங்கள் இப்பணியில் பணிபுரிகிறீர்கள் என்றால் பள்ளியைப் பற்றிய விளம்பரம் என்று கருதக்கூடிய தகவல் நலமுரணாகவும் பார்க்கப்படலாம். இதனைத் தவிர்க்க வேண்டும். தேர்ச்சி விகிதம், மேலாண் குழு உறுப்பினர்கள் போன்ற விவரங்கள் மாறிக் கொண்டே இருப்பவை. இவை கலைக்களஞ்சியக்கட்டுரைக்குத் தேவையற்றவை என்பதே எனது கருத்தும். பல (தனியார்) பள்ளிகளும் தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த பதிவை விளம்பர நோக்கிலேயே இட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. --இரவி (பேச்சு) 04:54, 23 சூலை 2016 (UTC)Reply

இரவி! நீங்கள் அளித்துள்ளதும் அதே பதில் தான்! விக்கி வரைமுறையில் இருக்கலாம், நலமுரணாகப் பார்க்கப்படலாம் என்று சுற்றி வருவதை விடத் தெளிவாக என்ன காரணத்தினால், (உரையாடலில் தெரிவிக்கப்படாமல்) தகவல்கள் நீக்கப்பட்டன என்று மட்டும் சொல்ல வேண்டும் என விழைகிறேன். கனகு அளித்துள்ளது வழிமுறை அல்ல -- அவரது நீண்ட நாள் விக்கி அனுபவத்தினால் வந்த தெளிவு. அது தவறாகவும் இருக்கலாம் அல்லவா? மாதிரிக்கு இந்தப் பக்கத்தைப் பார்க்கவும் [[1]]; இது பெர்லின் பல்கலையைப் பற்றியது. இதில் அதன் தரவரிசைப் பட்டியல் உள்ளது. இதுவும் வருடா வருடம் மாறிக்கொண்டே இருப்பது தானே?--PARITHIMATHI (பேச்சு) 11:28, 23 சூலை 2016 (UTC)Reply
பல்கலைக்கழகங்களைப் பாடசாலைகளுடன் ஒப்பிட முடியாது. பல்கலைக்கழகங்களுக்கு எனத் உலகத் தர வரிசை ஆண்டுதோறும் கணிக்கப்படுகிறது. இத்தரவரிசைக்கு தனிக்கட்டுரைகளே உள்ளன. பாடசாலைகளுக்கு இவ்வாறு தரவரிசை உள்ளதாக எனக்குத் தெரியவில்லை. உங்கள் பள்ளிக்கூடம் இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ளதா?--Kanags \உரையாடுக 11:42, 23 சூலை 2016 (UTC)Reply
"@உங்கள் பள்ளிக்கூடம் இவ்வாறு தரப்படுத்தப்பட்டுள்ளதா?" என்னைக் கேட்கிறீர்களா? [இது 'என்' பள்ளிக்கூடம் என்று எவ்வாறோ கண்டுபிடிக்கப்பட்டது!!]
* என் ஐயம் இன்னும் தெளிவாகவில்லை. பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளதும் தனியார் தான் (எ-டு) QS. பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டுள்ளதும் தனியார் தான் (REPORT BEE). அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்படுவதாலேயே QS போன்ற தரவரிசைப் பட்டியல்களுடன் REPORT BEE- யின் புள்ளியியல் தரவுகளை ஒப்பிட முடியவில்லையா நம்மால்? இல்லை வேறு என்ன காரணம்?
* பள்ளி மாணவர்களின் விளையாட்டு மற்றும் கல்விசார் சாதனைகளை ஏன் விளம்பரம் எனக் கருத வேண்டும்? அதைத் தவிர ஒரு பள்ளியில் பெரிய விடயம் என்ன நடக்க முடியும்? பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை விக்கிப்பீடியாவில் எழுதும் போதும் அதே அளவுகோலைப் பிடித்தோம் என்றால் அதுவும் விளம்பரம் தானே?
* விக்கி வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது தெளிவுபடுத்த வேண்டும் என்பது என் விழைவு. --PARITHIMATHI (பேச்சு) 16:53, 26 சூலை 2016 (UTC)Reply


PARITHIMATHI, இப்பள்ளிக்கும் தங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இங்கு தரவரிசையையோ தரவுகளையோ தனியார் வெளியிடுவது சிக்கல் இல்லை. உலக அளவில், தேசிய அளவில் கல்லூரிகள், பல்கலைகளைப் பாடப் பிரிவுகள் அடிப்படையில் அளவிடுவது, தரப்படுத்துவது வழமை. பல முதன்மையான இதழ்கள் இவற்றை அட்டைப்படக் கட்டுரையாகவே வெளியிடுவதால் குறிப்பிடத்தக்கமையு் உண்டு. எனவே, அக்கட்டுரைகளில் அவற்றைக் குறிப்பிடுவது ஏற்புடையது. பள்ளிகளைப் பொருத்த வரை இது வழமை இல்லை. ஒரு சில கட்டுரைகளில் மட்டும் அவ்வாறான தகவலைச் சேர்ப்பது விளம்பர நோக்காகவே புரிந்து கொள்ளப்படும். விக்கிப்பீடியா வரைமுறைகளைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பது உண்மை தான். இந்த உரையாடலையே தொடக்கமாகக் கொண்டு பள்ளிகள் குறித்த கட்டுரைகளில் என்ன மாதிரியான தகவலை இடலாம், தவிர்க்கலாம் என்பதை வரையறுக்க முனைவோம். --இரவி (பேச்சு) 19:49, 26 சூலை 2016 (UTC)Reply

  சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி" page.