பேச்சு:சார்லசு டார்வின்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic தலைப்பு
சார்லசு டார்வின் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சார்லசு டார்வின் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Could someone help, try translating this article on a priority basis? I will also try soon, may be after a week--ரவி 18:13, 26 ஏப்ரல் 2006 (UTC)

சார்லஸ் டார்வின் / சார்ல்ஸ் டார்வின் / சார்ள்ஸ் டார்வின் எது சரியானது? சார்ல்ஸ் அல்லது சார்ள்ஸ் என்றே (ஈழத்தில்) அழைக்கப்பட்டவர்.--Kanags 00:34, 25 நவம்பர் 2006 (UTC)Reply

எனக்கு சார்ள்ஸ் டார்வின் சரியாகப் படுகின்றது. --Natkeeran 01:38, 25 நவம்பர் 2006 (UTC)Reply

சார்ள்ஸ் டார்வின் என்பதே எனக்கும் சரியாகப் படுகின்றது--கலை 22:49, 22 நவம்பர் 2010 (UTC)Reply

தமிழ்நாட்டில் சார்லஸ் டார்வின் அல்லது சார்லசு டார்வின் என்பது வழக்கம். ஏனோ சார்ல்ஸ் என்று கூட எழுதுவதில்லை. டார்வினின் முதல் பெயர் மட்டுமல்ல, பொதுவாக இந்த "முதல்" பெயரை சார்லசு /சார்லஸ் என்று எழுதுவது வழக்கம் (தமிழ்நாட்டில்).மெய்யெழுத்துக் கூட்டம் (ர்ல்ஸ், ர்ள்ஸ்) என்பதைத் தவிர்க்கும் முகமாக இருக்கலாம். சார்லசு டார்வின் என்று இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் சார்ள்சு டார்வின் என்றாலும் எனக்கு மறுப்பு இல்லை. கடை எழுத்து ஸ் என்று முடிவது இயற்கையில் மிகவும் கடினம் (இயலாது என்றே சொல்லலாம்). நுணுகி ப் பார்த்தால் மெல்லிய துணை உயிரொலி வந்து நிற்பதைப் பார்க்கலாம். சார்ள்ஸ் என்று எழுதினாலும், ஸ் என்று கூறிய பின்பு சிறு உகரமோ வேறு உயிரொலியோ வருவதைப் பார்க்கலாம். பல முறை சொல்லிப்பாருங்கள் நன்றாக நுணுகிக் கேளுங்கள். இதனாலேயே தமிழில் காற்றொலி சகர மெய்யில் முடிவதில்லை.

சார்ல்சு/சார்ள்சு என்றால் அதில் வரும் உகரம் குற்றியலுகரம், எனவே சரியாக இருக்கும். --செல்வா 00:54, 23 நவம்பர் 2010 (UTC)Reply

வலிமையானது வாழும் பிறழ்ந்த கருத்தாகும். (சர்வைவல் ஒஃப் தி ஃபிட்டச்ட்) என்பதற்கு நிகரான தொடரன் தகுதியானது வாழும் என்பதே.வலிமையானது வாழும் என்பது (சர்வைவல் ஒஃப் தி ச்ட்ராங்கச்ட்) என்று பொருள்படும். --பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 14:59, 17 ஏப்பிரல் 2015

தலைப்பு தொகு

தமிழில் உள்ள ட ஒலிப்பும் ஆங்கிலத்தில் உள்ள T/D ஒலிப்பும் ஒன்றல்ல. எளிமையாகவும் சீராகவும் சார்லசு தார்வின் என்றெழுதலாம் என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:54, 28 மே 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சார்லசு_டார்வின்&oldid=3157857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சார்லசு டார்வின்" page.