பேச்சு:சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தேனி சுப்பிரமணி இக்கட்டுரையை விக்கியாக்கம் செய்வதைப் பார்த்தேன். கட்டுரை முழுக்க இங்கிருந்து படியெடுத்து ஒட்டப்பட்டுள்ளது. முழுக்க பதிப்புரிமை மீறல். எனவே குறுங்கட்டுரையாக சுருக்கி விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 03:37, 7 சூலை 2011 (UTC)Reply

  • இக்கட்டுரை முழுக்க முழுக்க என்னுடைய நண்பர் திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாளை.சுசி என்கிற பேராசிரியர்.சிட்னி சுதந்திரன் என்பவரால் எழுதப் பெற்றது. இது எனது முத்துக்கமலம் இணைய இதழில் அடையாளம் பகுதியில் வெளியிடப்பட்டது.(பார்க்க). இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க என்னுடைய முத்துக்கமலம் இணைய இதழிலிலிருந்து திருடப்பட்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது. நான் பாளை. சுசி எனும் பேராசிரியர். சிட்னி. சுதந்திரனை விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வரும் முயற்சியாக அவருக்கு இக்கட்டுரையை எப்படி வெளியிடுவது என்று தெரியாததால் என்னுடைய முத்துக்கமலம் இணைய இதழிலிலிருந்து அப்படியே பிரதி எடுத்து ஒட்டச் சொன்னேன். அதன் பிறகு அதை விக்கியாக்கம் செய்ய முயன்று வருகிறேன். இதில் பதிப்புரிமை மீறிய செயல் வலைப்பூவினருடையதுதான். எனது முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்படும் பல படைப்புகள் இது போன்று எவ்வித மாற்றமுமில்லாமல் திருடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த வலைப்பூவிலாவது எழுதியவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆன்மிகம் மனிதன்.co எனும் வலைத்தளம் முத்துக்கமலத்தில் வெளியான கதை உட்பட பல தகவல்களை எழுதியவர் பெயரே இல்லாமல் முழுக்க முழுக்க திருடி வெளியிட்டு வருகிறது. வலைப்பதிவுகளில் திருட்டு அதிகமாகி விட்டது. இது போன்ற திருட்டுக்களைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட வலைப்பதிவர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்து குறித்து எனது வழக்கறிஞரிடம் ஆலோசித்து வருகிறேன். தகவலுக்கு நன்றி. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:53, 7 சூலை 2011 (UTC)Reply
நன்றி. நான் செய்த மாற்றங்களை முன்னிநிலையாக்கி நீங்கள் செய்த பதிப்புக்கே மீளமைத்துள்ளேன். கட்டுரை பேச்சுப் பக்கத்தில் பாளை சுசியும், சிட்னி சுதந்திரனும் ஒருவர் தான் என்றொரு குறிப்பினை இட்டு விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். (பிற்காலத்தில் மீண்டும் யாருக்கேனும் இந்த சந்தேகம் எழுந்தால், என்னைப் போல தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்கப் பயன்படும்)--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 7 சூலை 2011 (UTC)Reply
Return to "சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்" page.