பேச்சு:சிறீவிஜயம்
இந்தக் கட்டுரையின் தலைப்பை ஸ்ரீ விஜயா என மாற்றினால் சரியாக அமையும் என்பது என் கருத்து. சிறீவிஜயம் என்பது மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் மலாய், இந்தோனேசிய விக்கிப்பீடியாவிலும் Sri Vijaya என்றே தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ விஜயா என்பது ஒரு பேரரசின் வரலாற்றுப் பெயர். அதை அப்படியே விட்டுவிடுவது தான் சிறப்பு. Facebook என்பதை முகநூல் என்று தமிழ்ப்படுத்தினால், எதிர்காலச் சந்ததியினருக்கு குழப்பம் ஏற்படும். தங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விழைகிறேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 01:53, 21 சனவரி 2015 (UTC)
பழைய தமிழ் ஆவணங்கள் ஸ்ரீ விஜயம் என்றே குறிப்பிடுகின்றன. அவை ஸ்ரீ விஜயா என்று குறிப்பிடுவதில்லை. அதனால், தமிழ் வழக்கையொட்டியே இத்தலைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 03:32, 21 சனவரி 2015 (UTC)