பேச்சு:சிலுவைப் போர்கள்

Active discussions
Wikipedia-logo-v2-bw.svg சிலுவைப் போர்கள் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சிலுவைப் போர்கள் கிறிஸ்தவம் சார்ந்தவையல்ல. இவை வரலாற்று நிகழ்வுகள். இவை வரலாற்றில் இடம்ப்ற்றுள்ள உண்மையான போர்களாகும். அத்தோடு இக்கட்டுரை கிறிஸ்தவத்தைச் சார்ந்து எழுதப்பட்டுள்ளது..--G.Kiruthikan (பேச்சு) 06:03, 6 சூலை 2013 (UTC)

சிலுவைப் போர்களின் விளைவுகள் நன்மைகள் போன்றே இங்கு பெரிதும் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அப் போர்களே ஐரோப்பிய அறிவெளிக் காலத்துக்கும், தொழிற்புரட்சிக்கும் காரணமாக அமைந்தன என்பது போன்று இங்கு செய்திகள் எவ்வித ஆதாரங்களும் இன்றி சேர்க்கப்பட்டுள்ளன. இப் போர்கள் ஐரோப்பாவின் மிகவும் ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒரு காலப் பகுதிக்கே காரணம் அமைந்தன. Middle Ages என்று அறியப்படும் இக் காலம் ஐரோப்பிய வரலாற்றில் இருண்ட காலம் ஆகும். இதில் இருந்து அறிவெளிக் காலத்தின் பின்பே ஐரோப்பா மீண்டது. அறிவெளிக் காலத்தை சிலுவைப் போர்கள் cause பண்ணின என்று கூற முடியாது, ஆய்வாளர்கள் அவ்வாறு கருதுவதாக அறியமுடியவில்லை. --Natkeeran (பேச்சு) 12:49, 6 சூலை 2013 (UTC)

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; சிலுவைப் போர்களே மறுமலர்ச்சிக்குக் காரணமாய் இருந்தன. அதனாலேயெ ஐரோப்பியர்களால் இஸ்லாமியர்களிடமிருந்து பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. உதாரணமாக இந்து அராபிய எழுத்து வடிவம், திசைகாட்டி, அச்சிடல் முறை. தரம் 10 இலங்கை வரலாற்றுப் புத்தகத்திலேயே இவற்றைக் கற்றேன். எனக்கு மேற்கோளிடத் தெரியாததாலேயே நான் மேற்கோள்களைச் சேர்க்கவில்லை. எனவே தயவு செய்து இம்மேற்கோளை சேர்க்கவும்.--G.Kiruthikan (பேச்சு) 09:45, 19 சூலை 2013 (UTC)

நீங்கள் தகுந்த மேற்கோள்களை இங்கு சுட்டுங்கள், நான் மாற்று மேற்கோள்களை சுட்டுகிறேன். வலுவான கருத்துக்களை கட்டுரையில் சேர்க்கலாம். --Natkeeran (பேச்சு) 14:12, 19 சூலை 2013 (UTC)

குறிப்புகள் - சிலுவை யுத்தத்தின் விளைவுகள்தொகு

  • வன்முறை, சமயம் உந்திய வன்முறை
  • மனித உரிமை மீறல்கள், படுகொலைகள்
  • கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர ஒடுக்குமுறை
உசாத்துணையற்று இவ்வாறு விளைவுகளை வரையறுக்கக்கூடாது.--AntanO 05:58, 28 சூன் 2017 (UTC)

முரண்பாடுதொகு

சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள், சிலுவைப் போரின் விளைவுகள் ஆகிய உபதலைப்புகள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டுள்ளன. சிலுவைப்போர்கள் பல இடம்பெற்றன. அவை ஒவ்வொன்றின் விளைவுகளும் வேறுபட்டவை. ஆனால் இங்குள்ள உபதலைப்புப்பின் கீழ் எழுதப்படுபவை அவற்றுக்கு முரண்பாடானவை. ஆகவே, இவற்றை நீக்கப் பரிந்துரைக்கிறேன் அல்லது திருத்தி எழுதப்பட வேண்டும். --AntanO 05:58, 28 சூன் 2017 (UTC)

சிலுவைப் போர்கள் குறித்துத் தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றைக் கவனமுடன் கருத்தில்கொண்டு விக்கிநடைக்கேற்ப சில திருத்தங்களைச் செய்துள்ளேன். மேலும், உபதலைப்புகள் அனைத்தும் பாடநூலில் உள்ளவையே. அவை சிலுவைப் போர்கள் குறித்த பொதுவான முடிபுகளையே வெளிப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட கருத்து எதுவும் இங்கு இற்றைச் செய்யப்படவில்லை. வரலாறுகள் என்பது மெய்மையான கருத்துக்களை மட்டுமே உள்ளீடாகக் கொண்டிருக்கும் என்று நினைக்கவியலாது. தனிநபர் மனநிலை, அவ்வக்கால அரசியல் சூழ்நிலைகள் எல்லாம் வரலாற்றை நிர்ணயம் செய்திடும் காரணிகள் என்பதும் வெளிப்படை. கிடைக்கக் கூடியவற்றில் அதிக நம்பகத்தன்மையுடைய தரவுகள்தாம் நல்ல கட்டுரை உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. எனவே, முரணான கருத்துக்களை இற்றைப்படுத்துவது என்பது என்னுடைய தனிப்பட்ட நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்துதல் என் கடன். நன்றி! மணி.கணேசன்

எனது கருத்து விளங்கிக் கொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். சுருக்கமாக் குறிப்பிடுவதாயின்; சிலுவைப்போர்கள் பல இடம்பெற்றன. அவற்றின் விளைவுகள் வேறுபட்டவை. எனவே பொதுவாக இதுதான் விளைவு என பொதுக் கட்டுரையில் குறிப்பிடுவது பொருத்தமற்றது. மேலும், இவ்வாறான சிக்கலான கட்டுரைகளுக்க பாடநூல்கள் பொருத்தமற்றவை. --AntanO 14:05, 6 சூலை 2017 (UTC)
AntanO கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். பாடநூலில் பொதுவாக குறிப்பிட்டுருப்பதை விக்கியில் சேர்க்க இயலாது. கட்டுரையை மேம்படுத்தவும் அல்லது இப்பகுதியை நீக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:22, 26 சூலை 2017 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி! பாடநூல்களை மேற்கோளாகக் கொடுக்க முடியாதா? இதுபற்றி எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? மணி.கணேசன் அவர்களின் பல கட்டுரைகளில் பாடநூல்கள் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் இதுபற்றி மேலும் அறிய விரும்புகிறேன். இந்த முரண்பாடுகள் தீரும்வரை இந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. @மணி.கணேசன்: --கலை (பேச்சு) 00:11, 28 சூலை 2017 (UTC)
பாடநூல்களை ஆதாரமாகத் தருவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிலர் பள்ளிப் பாடநூல்களில் இருந்து ஆதாரமாகக் காட்டி கட்டுரைகளை எழுதுகிறார்கள். இதனை குறிப்பாக போட்டிக் கட்டுரைகளில் எழுதுவதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.--Kanags \உரையாடுக 01:49, 28 சூலை 2017 (UTC)
Return to "சிலுவைப் போர்கள்" page.