பேச்சு:சி. ஆர். சுப்பராமன்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
@பயனர்:Uksharma3... இவரின் பெயரை சுப்பாராமன் என பல கட்டுரைகளில் பார்த்தபோது, சுப்புராமன் என திருத்தினேன். ஆனால் லவங்கி (திரைப்படம்) கட்டுரையில் சுப்பாராமன் என தாங்கள் எழுதியிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு மீண்டும் ஐயம் வந்துவிட்டது. ஆங்கில விக்கியில் Subburaman என்றுதான் எழுதியிருக்கிறார்கள். சரிபார்க்கவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 26 அக்டோபர் 2016 (UTC)
Untitled
தொகு- எனக்குத் தெரிந்து அவர் பெயர் சுப்பாராமன் என்றே எழுதி வந்திருக்கிறேன். இசை தளங்களான saavn.com, gaana.com, raaga.com போன்றவற்றில் எல்லாம் Subbaraman என்றே எழுதியிருக்கிறார்கள். ஆங்கில விக்கிக் கட்டுரை தி இந்து வில் ராண்டார் கை எழுதிய ராணி திரைப்பட விமர்சனக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டியுள்ளது. அதில் ராண்டார் கை Subburaman என எழுதியுள்ளார். ஆனால் ராண்டார் கை பல இடங்களில் தவறாக எழுதியிருப்பதை நான் அவதானித்துள்ளேன். (எ-கா.: திலகம் திரைப்படம் 1960ல் வெளியானது. ஆனால் அவரது கட்டுரையில் 1959 என தலைப்பில் கொடுத்திருக்கிறார். ஆராய்ச்சி மணி பற்றிய கட்டுரையில் மேலே நடிகர்கள் பெயரில் ரங்காச்சாரி என எழுதிவிட்டு, கீழே கட்டுரையில் ஆர். பாலசுப்பிரமணியம் என எழுதியிருக்கிறார். உண்மையில் ரங்காச்சாரி தான் நடித்தார். பாட்டுப் புத்தகத்திலும் அவர் பெயர்தான் இருக்கிறது.) ஆகவே அவர் எழுதுவதெல்லாம் சரி என்று சொல்ல முடியாது.
இதற்கு நான் ஒரு தீர்வு சொல்கிறேன். முடிந்தால் செய்யுங்கள். கட்டுரையில் சுப்புராமன் என்றே இருக்கட்டும். நீங்கள் சுப்பாராமன் என ஒரு கட்டுரைத் தலைப்பைத் துவக்கி அதனை வழிமாற்று இன்றி சுப்புராமன் கட்டுரைக்கு இணைத்துவிடுங்கள். அப்படியானால் இரண்டு விதமாக எழுதினாலும் கட்டுரைப் பக்கத்துக்குப் போகும். --Uksharma3 04:54, 26 அக்டோபர் 2016 (UTC)
நல்லது; இன்னொருவர் எவரேனும் கருத்தளித்தால், அதனையும் பார்த்துவிட்டு இறுதி முடிவு எடுக்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 26 அக்டோபர் 2016 (UTC)
- சுப்பராமன் அல்லது சுப்பாராமன் என்பது தான் சரி. சுப்புராமன் தவறு.--Kanags \உரையாடுக 06:49, 28 அக்டோபர் 2016 (UTC)