பேச்சு:சி. சரவணகார்த்திகேயன்

@Kanags: இக்கட்டுரை ஆங்கில விக்கியில் கட்டுரையில் உள்ள நபரால் உருவாக்கப்பட்டுள்ள சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. இப்பொழுது இந்தப் பேச்சுப் பக்கத்தை நான் துவங்கும் போது 2016 ஜூன் 6 அன்று, ஏற்கனவே நீங்கள் அதனை நீக்கியதாகக் குறிப்புத் தோன்றியது. அதனால் இக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொணர்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:38, 9 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1: இதே கட்டுரையை முன்னர் இந்த எழுத்தாளரே எழுதியதால் அதனை நான் அவரது பயனர் பக்கத்துக்கு மாற்றியிருந்தேன். இப்போது வேறு ஒரு பயனர் அதே கட்டுரையை புதிதாக எழுதியுள்ளார். இருவரும் ஒருவராகக் கூட இருக்கலாம். ஆங்கில விக்கியில் சர்ச்சை 2011 இல் எழுப்பப்பட்டது. ஆனால் எவரும் இதுவரை கவனத்தில் எடுக்கவில்லை.--Kanags (பேச்சு) 06:51, 9 சனவரி 2019 (UTC)Reply

@Kanags: இக்கட்டுரையை இப்போது உருவாக்கிய பயனர்:Jayreborn ஆகிய இருவரும் ஒருவராக இருக்க வாய்ப்பில்லையென்றே அவர்களது பயனர் பக்க விவரங்களில் இருந்து தோன்றுகிறது. அதானால் கட்டுரையைத் தக்க வைப்பதில் சிக்கல் இல்லையென்றே கருதுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:00, 9 சனவரி 2019 (UTC)Reply

ஆம். புதிய பயனர் வேறும் பல நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார். எனவே சிக்கலில்லை. விக்கி வரையறைக்குள் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.--Kanags (பேச்சு) 07:04, 9 சனவரி 2019 (UTC)Reply
@Jayreborn: எழுத்தாளரின் வலைத்தளத்தை மேற்கோளாகக் காட்டுவது முறையல்ல. மேற்கோள்கள் நடுநிலையானவையாக இருக வேண்டும். நன்றி.--Kanags (பேச்சு) 07:20, 9 சனவரி 2019 (UTC)Reply

@Kanags: வணக்கம் ! தக்க வைத்தமைக்கு நன்றி. புதுப்பயனர் போட்டியின் பட்டியலில் அவரது பெயர் இருந்ததாலேயே கட்டுரை எழுத விழைந்தேன் ஐயா. தற்போது தங்கள் மேலே சொன்ன விளக்கம் ஊடாகவே அது ஏன் பயனர் பக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்ற காரணமறிந்தேன். நல்லது. அவரது தளத்தை தவிர்த்து அவர் குறித்து வேறெங்கும் தரவுகள் சிக்காததாலேயே அவரது தளத்தினையே மேற்கோளாக ஏற்றேன். இனி வரும் காலங்களில் தவிர்க்கிறேன். மிக்க நன்றி :) :)

Return to "சி. சரவணகார்த்திகேயன்" page.