பேச்சு:செந்தலை ந. கவுதமன்
Untitled
தொகுஇவர் தமிழ்நாட்டில் அறியப்பெற்ற அறிஞர், பேச்சாளர் தான். தமிழ் விக்கிப்பீடியாவில் யாரென்றே தெரியாத ஒரே ஒரு புத்தகம் எழுதியவர்களுக்கு எல்லாம் ஏற்கனவே கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் உள்ள குறிப்பிடத்தக்கமை அறிவிப்பை நீக்கலாம். --இரவி (பேச்சு) 04:57, 28 செப்டம்பர் 2021 (UTC)
திரு. இரவி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். இந்தக் கட்டுரையில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டவும். மேலும் இக்கட்டுரையை எப்படி செழுமைப் படுத்தலாம் என்று வழி காட்டவும். நன்றி. -rajakvk (பேச்சு)
- ஒரு கட்டுரையை வாசிப்பவருக்கு குறிப்பிட்ட நபர் குறிப்பிடத்தக்கவர் என கட்டுரையில் (உசாத்துணை உட்பட) இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும். நிற்க, இக்கட்டுரையை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்) & en:WP:SECONDARY ஆகியவற்றுக்கேற்ப தொகுக்க முடியுமா? குறிப்பாக "சிறப்புகள்" என்பதனுள் உள்ளடங்குவனவற்றுக்கு உசாத்துணை இணைக்க முடியுமா? --~AntanO4task (பேச்சு) 19:26, 10 அக்டோபர் 2021 (UTC)
குறிப்பிடத்தக்கமை
தொகுவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்) & en:WP:SECONDARY
- வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் கருப்பொருள்கள் (subjects) குறிப்பிடத்தக்கனவாக இருக்க வேண்டும்; அதாவது அவை சிறப்பானதாகவோ ஆர்வமூட்டக்கூடியதாகவோ அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதன் மூலம் அறியத் தக்கதாகவோ இருந்து அந்தக் கருப்பொருள் நம்பகமான இரண்டாம் நிலை மூலங்களில் சிறப்பாக முழுக்கவிளவப்பட்டிருப்பது (coverage) சான்றுரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பல அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மெய்யியலாளர்கள் மற்றும் பிற அறிஞர்கள் (எளிய பயன்முறைக்காக மொத்தமாக "கல்வியாளர்கள்") முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இரண்டாம்நிலை மூலங்களின் கருப்பொருளாக இல்லாதிருப்பினும் கருத்துக்களின் உலகில் குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளவர்கள் என்ற வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்கள்.
- ஆக்கங்களை வெளியிட்டிருப்பது மட்டுமே, அவை எண்ணிக்கையில் எத்தனையாக இருப்பினும், ஒரு கல்வியாளரைக் குறிப்பிடத்தக்கவராக நிறுவாது. குறிப்பிடத்தக்கமை என்பது துறையில் அவருடைய ஆக்கங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து அமைகின்றது. இந்த குறிப்பிடத்தக்கமைக்கான வழிகாட்டுதல் ஒரு கல்வியாளரின் குறிப்பிடத்தக்கமையை அவருடைய பணியின் தாக்கத்தினை நிறுவும் நம்பகமான மூலங்களைக் கொண்டு தீர்மானிப்பதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.
ஆகவே, கட்டுரையில் அறிமுகம், நூல்கள் போன்ற விபரங்களைச் சேர்ப்பதிலும் பார்க்க, வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்கமையை சான்றுகளுடன் எழுதுவது நல்லது. --~AntanO4task (பேச்சு) 19:29, 10 அக்டோபர் 2021 (UTC)