பேச்சு:சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Rasnaboy in topic பயன்பாடு
பயன்பாடு
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)
- அரசமைப்பு உலகளாவிய அரசியல் சாசன மரபுகளின் படி இந்தியாவை ஒன்றியம் என்று குறிப்பிட்டாலும் "ஒன்றிய அரசு" என்பது அதிகார அளவிலும் அலுவல் ரீதியாகவும் இந்திய ஒன்றியப் பகுதி அரசுகளைக் (union territory governments) குறிப்பதால் இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வல்லது. இந்திய அரசைக் குறிப்பிட ஏற்கனவே இந்திய அரசு, மத்திய அரசு, நடுவண் அரசு என பெயர்கள் வழக்கில் உள்ளன எனும்போது நான்காவதாக ஒரு பெயருக்கான தேவை இல்லை என்றே கூறலாம் (அதுவும் ஏற்கனவே ஒன்றியப் பகுதிகளான union territory-களைக் குறிக்கப் பயன்படும் சொல்லை தேவையின்றிக் கையாண்டுக் குழப்ப வேண்டிய அவசியம் முற்றிலும் இல்லை என்பதால்). உலகளாவிய அளவில் "இந்திய அரசு" என்றும் இந்திய அளவில் "மத்திய அரசு" அல்லது "நடுவண் அரசு" என்றும் கூறுவதே பொதுவான வழக்கில் இருக்கும் முறை. அரசியல் கல்வி சார்ந்த பயன்பாடே (scholarly usage) ஏற்கப்படும் தரவுகளிலும் பதிப்புகளிலும் காணப்படுவதால் விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை விதிகளின்படி தரவுகளின் பயன்பாட்டைக் கையாள்வதே முறை. எனவே "இந்திய அரசு" என்றோ "மத்திய அரசு" என்றோ "நடுவண் அரசு" என்றோ கூறுவதே சரியானது. Rasnaboy (பேச்சு) 18:02, 28 சனவரி 2023 (UTC)