பேச்சு:செயந்திர சரசுவதி
Untitled
தொகுஇது ஒரு ஆங்கில கட்டுரையின் தமிழாக்கமே இதன் தலைப்பு அந்தக் கட்டுரையைப் பார்த்து வைக்கப்பட்டது. வேறு மாதிரி வைத்துக்கொள்ளலாம். இதை மேலும் தொகுக்கலாம். நிழற்படம் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டது.--செல்வம் தமிழ் 01:38, 3 மார்ச் 2009 (UTC)
- கொலை வழக்கு சம்பந்தப்பட்ட படம் இங்கு அனுமதிக்கலாமா? இது பற்றி சுந்தர் போன்றவர்கள் தான் பதில் தர வேண்டும். என்னைப் பொருத்தவரையில் இப்படம் இங்கு தேவையற்றது. படம் இணையத்தில் இருந்து எடுத்ததாகத் தெரிவிக்கிறீர்கள். காப்புரிமையற்றதா?--Kanags \பேச்சு 10:07, 5 மார்ச் 2009 (UTC)
- கொலைவழக்கு தொடர்பிலான செய்திகளையோ படத்தையோ தருவதில் தவறில்லை. ஆனால், இந்தப்படம் காப்புரிமைக்குட்பட்டது. இதை முதற்கண் பதிவேற்றியிருக்கக் கூடாது. செல்வம், {{PD-self}}அளிப்புரிமை உங்கள் சொந்த ஆக்கங்களைத் தருவதற்கானது. இணையத்திலிருந்து பெற்றால் அந்த இணைய தளத்தின் காப்புரிமைக்குட்பட்டதாகும். -- சுந்தர் \பேச்சு 14:51, 5 மார்ச் 2009 (UTC)
இந்தக் கட்டுரை பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் என பகுக்கப்பட்டுள்ளது. அதற்கான உரையடக்கம்/விளக்கம் கட்டுரையில் இல்லை. எந்த அரசியல் இயக்கத்திலும் உறுப்பினராகவோ தனிப்பட்ட முறையில் அரசியலில் ஈடுபட்டதாகவோ குறிப்புகள்/மேற்கோள்கள் இல்லை. --மணியன் 04:48, 7 ஏப்ரல் 2011 (UTC)