பேச்சு:சேவல்கோழி மீன்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான்

அன்புடையீர், டெரோசிசு (Pterois) என்பது பேரினப் பெயராகும். பொதுவாக அறிவியல் பெயர்கள் பன்னாட்டு அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருசொற் பெயரீட்டு முறையாகும். (The names must be in Latin) உலகில் உள்ள அனைவரும் ஒரு உயிரியினை அறியும் பொருட்டு இப்பெயர் இடப்படுகிறது. பொதுப் பெயர் என்பது ஆங்கிலப் பெயராகும். ஆனால் வட்டார சொல் அந்தந்தப் பகுதியில் வழங்கப்படுவதால் அதனை வகைப்பாட்டியலாளர் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் பொதுப் பெயர்களும் நாடுகளுக்கிடையே வேறுபடுவதால் இதனை வகைப்பாட்டியலாளர் ஒரு உயிரியினை அடையாளங்காண ஏற்றுக்கொள்வதில்லை. எனவே உலக அளவில் உயிரிகளை அடையாளங்காண அறிவியல் பெயர்களே ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக உள்ளன. எனவே பொதுப் பெயரினை உயிரிகளின் பெயர்களுக்குச் சூட்டுவது அல்லது மொழிப்பெயர்ப்பது தேவையில்லாத குழப்பத்தினை ஏற்படுத்தும். எனவே Pterosis என்பதை அறிவியல் பெயரில் டெரோசிசு என அழைப்பதுதான் சரியானது. அதனை விளக்கும்போது சேவல்கோழி மீன், சிங்க மீன் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். --சத்திரத்தான் (பேச்சு) 16:39, 30 அக்டோபர் 2021 (UTC)Reply

ஏனைய மொழி (ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து) விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கவனியுங்கள். அவையும் பெரும்பாலும் தமது மொழிப் பெயர்களையே தலைப்பாகக் கொடுத்துள்ளனர். மேலும், Pterois - என்பதை எவ்வாறு எழுதலாம்? டெரோசிசு என்பது சரியான பலுக்கலாகத் தெரியவில்லை. தெரோயிசு அல்லது டெரோயிசு சரியாக இருக்கும். அத்துடன் உயிரியல் பெயர்களை சாய்வெழுத்தில் எழுத வேண்டும் என்பதும் பன்னாட்டு அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. @Sundar and செல்வா:--Kanags \உரையாடுக 22:23, 30 அக்டோபர் 2021 (UTC)Reply
தங்கள் கூற்றின்படி தலைப்பினை தமிழில் எழுத எனக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால், அறிவியல் பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்துதான் என்னுடைய ஐயம். கூடுதல் தகவல்களுக்கு நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 01:14, 31 அக்டோபர் 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேவல்கோழி_மீன்&oldid=3307255" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சேவல்கோழி மீன்" page.