பேச்சு:சோலைமந்தி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
மந்தி என்பது குரங்கைத் தானே குறிக்கும். (மந்தி தமிழ்ப் பெயர் தானா?). குரங்கு பக்கத்துக்கு வழிமாற்றம் தரலாமா?--Kanags \பேச்சு 01:09, 7 ஜூலை 2008 (UTC)
மந்தி என்பது தமிழ் பெயர்தான். இச்சொல் "குற்றாலக்குறவஞ்சியில்" கையாளப்பட்டுள்ளது. எந்தப் பாடல் என்று தெரியவில்லை :-(.
மந்தி என்பது ஆங்கிலத்தில் "macaque" என்பதையும் குரங்கு என்பது "monkey"யை குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம்? என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டில் மட்டும் குறைந்தது 5 வகையான முதனிகள் உண்டு, ஆகையால் எல்லாவற்றையும் குரங்கு என்ற பொதுப்பெயரின் கீழ் கொண்டுவர இயலாது என்பது என் கருத்து. இன்னபிற முதனிகளை பற்றி விரைவில் எழுத உள்ளேன்--கார்த்திக் 13:27, 7 ஜூலை 2008 (UTC)
- மந்தி என்று கூகிளில் போட்டாலே நிறைய தரவுகள் கிடைக்கின்றன. சில குரங்கு என்றும் அர்த்தம் கொள்கின்றன. --Natkeeran 13:49, 7 ஜூலை 2008 (UTC)
மந்தி என்பது பெண் குரங்கு மட்டும்.--பாஹிம் 10:10, 30 நவம்பர் 2011 (UTC)
- முன்பு பெண் பால் குரங்கை மட்டும் குறித்து வந்தாலும் பிற்கால வழக்கில் இரு பால் குரங்குகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. [1]. மந்தி என்பதைக் குரங்கென்று மாற்றத் தேவையில்லை--சோடாபாட்டில்உரையாடுக 10:23, 30 நவம்பர் 2011 (UTC)