பேச்சு:ஜெயமோகன்
Untitled
தொகுஅஞ்ஞாதவாசம் - தமிழ்ச்சொல் தானா? எளிய மாற்றுச் சொல் உண்டா?--ரவி 07:23, 17 ஜூலை 2006 (UTC)
- அஞ்ஞாதவாசம் கண்டிப்பாகத் தமிழ்ச் சொல் அல்ல. அந்த சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் எவரும் இவர் யாரென அறியாமல் வாழ்தல் ஆகும். இப்பொருள் தரும்வகையில் யாரேனும் நல்ல தமிழ்ச் சொற்றொடரைப் பரிந்துரையுங்கள். -- Sundar \பேச்சு 07:35, 17 ஜூலை 2006 (UTC)
எழுத்துலகிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.--Kanags 09:54, 17 ஜூலை 2006 (UTC)
- விக்கிபீடியா என்பது கூடத் தமிழ்ச் சொல் இல்லையே;-)
உண்மையில் அஞ்ஞாதவாசம் என்பது ஒரு தற்காலத் தமிழ்ச் சொல்தான். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் அது இடம்பெற்றுள்ளது. இப்படி நிறையப் பிறமொழிச் சொற்கள் தமிழில் உள்ளன. தமிழ் மட்டுமல்ல; எல்லா மொழிகளிலும் அவ்வாறு உள்ளன. அது தவிர்க்க முடியாதது. ஒரு சிறு சொல்லால் குறிப்பிடக்கூடியதை சொற்றொடரொன்றின் மூலம் சொல்வானேன்? ஆனால் சுருக்கமிலாவிடினும் நல்ல தமிழ் சொற்கள் இருக்க வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்தாமலிருப்பது நல்லதுதான்.
ஆயினும் இக்கட்டுரையில் கனகு பரிந்துரைத்தது சரியே. ஏனெனில் அஞ்ஞாதவாசம் என்றால் மற்றவர்கள் அடையாளங் காணாமல் இருத்தல். இக்கட்டுரையைப் பொறுத்தவரை ஒதுங்கி இருக்கிறார் என்பதே பொருத்தமானது. கோபி 13:43, 17 ஜூலை 2006 (UTC).
புகைப்படம்
தொகுஇன்போ பக்கத்தில் எப்படி புகைப்படம் சேர்ப்பது ? புகைப்படத்தை ஏற்கனவே விக்கி படிமம் பக்கத்தில் சேர்த்துள்ளேன் அரங்கா 05:32, 27 சனவரி 2016 (UTC)
- விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி இப்பக்கத்தைப் பார்க்கவும். --Surya Prakash.S.A. (பேச்சு) 05:34, 27 சனவரி 2016 (UTC)
- நீங்கள் எடுத்த சொந்தப் படத்தை அல்லது காப்புரிமை அற்ற படத்தை மட்டும் தரவேற்றுங்கள். ஏற்கனவே நீங்கள் வேறு இணையத்தளத்தில் இருந்து எடுத்த படத்தைத் தரவேற்றினீர்கள். அது நீக்கப்பட்டு விட்டது.--Kanags \உரையாடுக 08:00, 27 சனவரி 2016 (UTC)