பேச்சு:ஜோசப் ஸ்டாலின்
Untitled
தொகுஇவரது கொடுங்கோன்மை இந்தக் கட்டுரையில் இன்னும் விளக்கப்படவில்லை.
- மனித உரிமை மீறல்கள்
- Soviet famine of 1932–1933
- Holodomor
- தொலைநோக்கில் பொதுவுடமைக் கொள்கை தோற்றது.
- சமய நம்பிக்கையாளர்களை துன்புறுத்தியது
--Natkeeran 14:56, 14 பெப்ரவரி 2009 (UTC)
இந்த கட்டுரை நடுநிலையானதே
தொகுஸ்டாலின் செய்தவைகளாக பட்டியலிடப்படும் கொடுங்கோன்மைகளை எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் சுமத்த இயலும். மேலும், அவை இட்டுக் கட்டப்பட்டவையாகவும், மிகைப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளது. இதனைத்தான் ஸ்டாலின் மீதான அவதூறுகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரையின் நடுநிலைமை குறித்த கேள்விகள் தேவையற்றவை, உள்நோக்கம் கொண்டவை.
* மனித உரிமை மீறல்கள் * Soviet famine of 1932–1933 * Holodomor * சமய நம்பிக்கையாளர்களை துன்புறுத்தியது
இந்த வகை பட்டியலின் அடிப்படையில் பேசுவது எனில், விக்கிபிடியாவில் அரசு, அரசாங்கம், தலைவர்கள் குறித்த அனைத்து கட்டுரைகளுமே நடுநிலைமை கேள்விக்குறி என்று முத்திரையிடப்பட வேண்டி வரும்.
* தொலைநோக்கில் பொதுவுடமைக் கொள்கை தோற்றது.
இது எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. ரஸ்யாவில் தோற்றது முதலாளித்துவம் என்பது எனது கருத்து. பெரும்பாலான முற்போக்குவாதிகள், பொதுவுடமைவாதிகளின் கருத்தும் இதுதான். தொலைநோக்கில் மட்டுமல்ல இதோ இன்று வரை தோற்று வருவது முதலாளித்தும்தானேயன்றி பொதுவுடமை அல்ல. எனவே, இந்த அடிப்படையில் கட்டுரையின் நடுநிலையை கேள்விக்குள்ளாக்குவது அநீதியானது.
மனிதன்
தலைப்பு மாற்றம்
தொகு@Parvathisri: இக்கட்டுரையின் தலைப்பை யோசேப் இஸ்தாலின் என மாற்றுமாறு முன் மொழிகிறேன். Vinotharshan (பேச்சு) 17:12, 9 மார்ச் 2019 (UTC)
இக்கட்டுரையில் பல மொழி சார்ந்த இலக்கணப் பிழைகள் உள்ளன
குறிப்பாக வேற்று மொழிச் சொல்லை ஒலிபெயர்ப்பு செய்யும் போது பல இலக்கணப் பிழை ஏற்படுகிறது
அதில் முகாமையானது இல்லாத எழுத்துகளை அஃதாவது கிரந்த எழுத்துகளை பயன்படுத்துவது
கட்டுரையில் உள்ள கிரந்த எழுத்துகளை நீக்கி விட்டேன்
அதற்கு ஏற்றார் போல கட்டுரையின் தலைப்பிலும் கிரந்தம் நீக்கி இலக்கணப் பிழையின்றி தலைப்பை சோசஃபு சுடாலின் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்
நன்றி
தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 08:01, 20 செட்டம்பர் 2022 (UTC)