பேச்சு:டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி
இக்கட்டுரையை Gel electrophoresis என்ற ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாமா?--Kanags \பேச்சு 10:18, 13 ஜூலை 2009 (UTC)
ஆம். கொடுந்து விடுங்கள்..... இன்னும் சில மாற்றங்களை செய்யலாம் (RNA and protein gel) அல்லது தனியாக எழுதலமா ? என நினைக்கிறேன். அனைத்துக்கும் gel electrophoresis இணைப்பு கொடுந்து விடுங்கள்...
நன்றி மகிழ்நன்...
--Munaivar. MakizNan 14:34, 13 ஜூலை 2009 (UTC)
எத்திடியம் புரோமைடு என்று ஒரு கட்டுரை தொடக்கி உள்ளேன். அதில் electrophoresis என்பதை மின்புல தூள்நகர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளேன். இது இத்துறையில் சரியான பொருள் தருமா என்று எண்ணிப்ப்பார்க்க வேண்டுகிறேன். "மின்துளை ஓட்டம்" என்று நீங்கள் குறிப்பிட வேறு காரணங்கள் இருக்ககூடும் என்று நினைக்கிறேன்.--செல்வா 14:42, 13 ஜூலை 2009 (UTC)
- பேச்சு:எத்திடியம் புரோமைடு என்னும் பக்கத்தில் பயனர் மகிழ்நன் கருத்து இட்டவாறு, தலைப்பை மாற்ரி உள்ளேன்.--செல்வா 15:42, 13 ஜூலை 2009 (UTC)
குறியீடு சாயம்
தொகுகுறியீடு சாயம் (indicators dye) என்பதற்கு பதிலாக சுட்டும் சாயம் என்று பயன்படுத்தலாமா?--கார்த்திக் 06:55, 21 ஜூலை 2009 (UTC)
நல்ல சொல்
பயன்படுத்தலாம்
--Munaivar. MakizNan 14:39, 21 ஜூலை 2009 (UTC)
- ஆம் நல்ல சொல். வெறும் சுட்டி அல்லது சுட்டியம் என்றும் கூறலாம் (இதில் சாயம் என்பது தெளிவாக இல்லை). சுட்டிச்சாயம் என்றோ சுட்டுசாயம் (வினைத்தொகை-ஊறுகாய் என்பது போல) என்றோ சுட்டுஞ்சாயம் என்றோ கூடச் சொல்லலாம். --செல்வா 02:17, 22 ஜூலை 2009 (UTC)
கூழ்மம் என்னும் சொல்
தொகுGel என்பதற்கு கூழ்மம் என்பது பொருந்துமா (ஓரளவுக்குப் பொருந்தும்)? கொல்லாய்டு (colloid) என்பதRகும் கூழ்மம் என்று நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? கொல்லாய்டு என்பதற்கு இடைமிதப்பி, ஊடுமிதப்பி என்பதை அடிப்படையாகக் கொண்டு இடைமிதப்பியம், ஊடுமிதப்பியம் எனலாம். அல்லது செ'ல் (gel) என்பதற்குக் களி, களிமம், களிமியம் எனலாம். பழக்களி என்பது jam என்பதற்குப் பயன்படுத்துவதால், செ'ல் என்பதற்கு களி என்றே கூடக் கூறலாம். ஐசுக்கிரீம் என்பதற்குப் பனிக்குழை என்கிறோம். குழை, குழைமம், கூழ், கூழ்மம், களி, களிமம், போன்ற பல சொற்களை சீராக வகுத்து ஆள்வது நல்லது. ஒரு நீர்மத்துள் இடையே, ஊடே நுண்துகள்கள் "மிதப்பதால்" கொல்லாய்டு என்பதை இடைமிதப்பி, ஊடுமிதப்பி என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் ஆக்கலாம்.--செல்வா 02:32, 22 ஜூலை 2009 (UTC)
சில தெளிவுபடுத்தல்கள்
தொகுஇன்றைக்குத்தான் இந்தப் பக்கத்தைப் பார்த்தேன்.
1. தலைப்பில் 'கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி' என்பதைப் பார்த்து விட்டு, ‘தூள்' என்ற சொல் என்ன பொருள்பட வருகிறதென யோசித்துப் பார்த்தேன். 'கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி' என்பதை விட, 'கூழ்ம மின்புல துளை நகர்ச்சி' என்பது கூடியளவு பொருத்தமாக இருக்குமெனத் தோன்றியது. அதை இங்கே உரையாடல் பக்கத்தில் கேட்க வந்தபோது, இதுபற்றி ஏற்கனவே நீங்கள் உரையாடி இருக்கின்றீர்கள் என்று தெரிகிறது. இருப்பினும், ‘தூள் என்ற வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கிறதா என்ற கேள்வி இருப்பதால், இதைப்பற்றி கூறிவீர்களா?
2. ”டீ.என்.ஏ யை கண்ணால் பார்க்கலாம்” என்பது, தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். கண்ணால் பார்க்கலாம் என்னும்போது, டீ.என்.ஏ யின் அமைப்பை (structure of DNA) நேரடியாகப் பார்க்க முடியும் என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகப் படுகின்றது. அதனால், அதை வேறுவிதமாக மாற்றி எழுத முடியுமா?
3. Concentration என்பது 'அடர்த்தி' என கூறப்பட்டுள்ளது. அடர்த்தி என்பதைவிட செறிவு என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். அடர்த்தி என்பது density என்பதைக் குறிப்பதுதானே. அதாவது அடர்த்தி என்பது கனவளவுடன் (volume) தொடர்புடையது. செறிவு என்பதே இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
இவற்றை மாற்றலாமா எனக் கூறுங்கள். --கலை 11:45, 2 அக்டோபர் 2009 (UTC)
காலம் தாழ்ந்தி விடை அளிப்பதற்கு பொருத்து கொள்ளவும்.
உங்களின் வினாக்கள் சரியானதே ?
ஆங்கிலத்தில் phor என்ற சொல் துளை என்பதைத்தான் குறிக்கும். செல்வாவிடம் பேசி அதை மாற்றலாமா என அறியலாம்.
கண்ணால் பார்க்கலாம் என்பதை மாற்றி எழுதலாம் அல்லது நீங்களே மாற்றி விடுங்கள்.
அடர்த்தி என்பதை அடர்வு என்றுதான் எழுத வேண்டும். இதை வேறு கட்டுரையின் உரையாடல் பகுதியில் எழுதி உள்ளேன். அடர்வு அல்லது செறிவு என்று மாற்றி விடலாம்.
நன்றி -- மகிழ்நன் 16:41, 2 அக்டோபர் 2009 (UTC)
கலை, மகிழ்நன், உங்கள் கருத்துகளைப் பற்றி என் கருத்துகளைச் சொல்கிறேன்.
- தூள்நகர்ச்சி என்பது எந்தத்துகளாக இருந்தாலும் அவற்றின் நகர்ச்சியைக் குறிக்கும். தூள், துகள் என்பன மிகச்சிறிய வடிவைக் குறிப்பன. நுண்துளைகளை மட்டுமே குறிக்க வேண்டுவது எனில் துளை நகர்ச்சி அல்லது நுண்துளை நகர்ச்சி எனலாம். புரைநகர்ச்சி என்றும் கூறலாம். புரை என்பது நுண்துளை. புரையோடி இருக்கின்றது என்பது இன்றும் பேச்சு வழக்கு. நான் என் துறையில் (குறைக்கடத்திக் கருவிகள்), hole என்பதை புரைமின்னி என்று வழங்குகின்றேன். இங்கே hole என்பது எதிர்மின்னி பகிர்பிணைப்பில் (covalent bond) இருந்து விடுபட்டு சென்றபின் அங்கு "வெற்றிடமாக" இருக்கும் நிலை நேர்மின்மம் உடைய தன்மை கொண்ட சிறுதுகள் போல மின்புலத்தில் இயங்கும். எனவே புரைமின்னி. ஆகவே துளை என்பதற்கு மட்டுமே பயன்படும் எனில் துளைநகர்ச்சி, நுண்துளை நகர்ச்சி, புரைநகர்ச்சி, பொள்ளுநகர்ச்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆளலாம்.
- டி.என்.ஏ வைக் (கருவிகளின் துணையின்றி) கண்ணால் பார்க்கலாம் என்பது மாற்றப்படவேண்டும்.
- பல துறைகளில் (என் துறையையும் சேர்த்து) concentration, density ஆகிய இரண்டும் ஒன்றே. சில துறைகளில் அவை வெவ்வேறு பொருள் உணர்த்துவனவாக இருக்கலாம். நாங்கள் இச்சொற்களை ஈடானவையாகவே பயன்படுத்துகிறோம். செறிவு என்பதும் அடர்த்தி என்பதும் ஒரே பொருள் கொண்டதே. அடர்த்தி, செறிவு இரண்டுமே அளவிடப்படும் ஒரு பண்பை அப்பண்பு "இயங்கும்" மற்றொரு அளவிடப்படும் பண்பின் அளவு எல்லையில் வைத்துக் கணிப்பதே. மரங்கள் அடர்ந்த காடு என்றால். ஒரு குறிப்பிட்ட பரப்பளவில், அதிக எண்ணிக்கையில் மரங்கள் உள்ளன என்று பொருள். காட்டின் மர அடர்த்தி என்று பேசலாம். தலையில் மயிர் (முடி) அடர்த்தி என்று பேசலாம். எல்லைப்படுத்தும் பண்பு இங்கு பரப்பளவு. ஒரு ஏக்கரில் 100 மரங்கள் என்பது அடர்த்தி அல்லது செறிவு. ஒரு கன சென்ட்டி மீட்டர் சிலிக்கானில் எவ்வளவு அயல் அணுக்களான பாசுபரசு அணுக்கள் உள்ளன என்பதும் அடர்த்தி, செறிவு. எ.கா அயலணு அடர்த்தி (doping concentration) 1016 (செ.மீ)-3 என்போம். அடர்வு, அடர்த்தி ஆகிய இரண்டும் வெவ்வேறு பெயர்ச்சொல் வடிவங்கள். அயர்வு, அயர்ச்சி; தளர்வு, தளர்ச்சி என்பது போல. ஆனால் வழக்கத்தில் வெவ்வேறு பொருள் ஏற்கும் வாய்ப்புள்ளது. நட என்னும் வினைச்சொல், நடப்பு, நடத்தை, நடக்கை, நடை, நடத்தல் எனப் பல பெயர்ச்சொல் வடிவங்கள் கொண்டாலும், அவற்றின் பொருள் வெவ்வேறாகும். அதுபோல அடர்வு அடர்த்தி என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு ஆனால் அது பெரிதல்ல (இங்கு வழங்கும் பொருளில்) என நினைக்கிறேன். --செல்வா 20:55, 2 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி.
1. கூழ்ம மின்புல நுண்துளைநகர்ச்சி என்பது மிகவும் பொருத்தமான சொல்லாகத் தோன்றுவதால், அதை பரிந்துரைக்கின்றேன். தலைப்பில் எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியாது. எனவே யாராவது மாற்றி விடுங்கள்.
2. Visualization of DNA என்பதை ”டீ.என்.ஏ யின் அமைப்பை நேரடியாக கண்ணால் பார்ப்பது” என்னும் பொருள்படாமல் எப்படி மாற்றியமைக்கலாம் என்று யோசித்தேன். இம்முறையின் துணையால் டீ.என்.ஏ க்களை தனிமைப்படுத்தி, அவற்றை சாயமூட்டி, பின் புற ஊதாக்கதிர்களின் உதவியுடன் பார்க்க முடியும்[1 என்று மாற்றியமைக்கலாம் என் எண்ணுகிறேன். மகிழ்நன்! இதை நீங்கள் ஆமோதித்தால், மாற்றி விடுங்கள்.
3. அடர்த்தி என்பதை “அடர்வு அல்லது செறிவு” என்று ஏற்கனவே மகிழ்நன் மாற்றியுள்ளீர்கள். அதுவே இந்த இடத்தில் சரியான கருத்தை தரும் என நானும் நம்புகின்றேன். காரணம் இரசாயனவியலைப் பொறுத்த அளவில், (அல்லது இந்த கட்டுரையில்) concentration அல்லது செறிவு என்பது குறிப்பிட்ட ஒரு பதார்த்தமானது (கரை பொருளானது) வேறொரு பதார்த்தத்தில் (கரை திரவத்தில்) என்ன அளவில் கலந்துள்ளது என்பதையே குறிக்கிறது. இங்கே செறிவு, அடர்த்தி என்ற இரு சொற்பிரயோகங்களும் வேறுபடலாம் என்றே தோன்றுகின்றது. ஒரு குறிப்பிட்ட கரைசலில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு கரைபொருளின் செறிவானது, அந்த கரைசல் வெப்பமூட்டப்பட்டாலும் மாறாமல் இருக்கும். ஆனால் வெப்பமூட்டப்படும்போது, கனவளவு கூடுவதால், அதன் அடர்த்தி குறையும். அடர்த்தியை அளக்கும்போது கனவளவை தொகுதி எண்ணாகவும், செறிவை அளக்கும்போது, கரை திரவத்தின் அளவை தொகுதி எண்ணாகவும் பயன்படுத்தலே இந்த வேறுபாட்டை தருகின்றது என நினைக்கிறேன். --கலை 00:01, 3 அக்டோபர் 2009 (UTC)
செல்வா மற்றும் கலை
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நான் புரை நகர்ச்சி என எழுதலாம் என நினைக்கிறேன். மேலும் பயிர் உயிரணுக்களுக்கு இடையே உள்ள plasmadesmata என்னும் நுண் துளைகளுக்கு நீங்கள் விளம்பிய புரை அல்லது பொள்ளு போன்ற சொற்களை ஆளலாம். மேலும் வழக்கொழிந்த சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததை போன்று இருக்கும்.
செல்வா மற்றும் பலரை (விக்கியில் உள்ள அனைவரையும்) போன்ற தமிழ் மற்றும் அறிவியல் ஆய்வளார்களின் உதவியுடன் கட்டுரை வளர்ப்பது என்னை போன்று வளர்பவனுக்கு மிக்க மகிழ்ச்சியே....
நான் அடுந்த திங்களில் (அக்டோபர்) திருமணம் முடிக்க இருப்பதால் சில நாட்களுக்கு விக்கியில் என் பணி பாதிக்க கூடும்.... காலம் தாழ்ந்தி விடை கொடுத்தற்கு பொருத்து கொள்ளவும்..
-- மகிழ்நன் 21:32, 3 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி மகிழ்நன். உங்கள் திருமணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை 10:09, 30 அக்டோபர் 2009 (UTC)