பேச்சு:தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு
இதன் தலைப்பு நில ஓட்டு அமைப்பியல் என்று இருப்பது நன்றாக இருக்கும். நில ஓடு என்பது எளிதாகவும் பொருத்தமாகவும் இருக்கும். --செல்வா 13:45, 5 ஜனவரி 2007 (UTC)
- தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்திலுள்ள கலைச் சொல் அகராதியில் plate tectonics என்பதற்குத் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்றே தரப்பட்டுள்ளது. இது சிக்கலாக இருப்பதாகவே எனக்கும் படுகிறது. ஆனாலும், நில ஓட்டு அமைப்பியல் என்பது பொருத்தமாக இருக்குமா என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன.
- tectonics என்பதற்கு The American Heritage Science Dictionary பின்வரும் பொருளைத் தருகிறது.
- The branch of geology that deals with the broad structural and deformational features of the outer part of the Earth, their origins, and the relationships between them.
- இதைப் பார்க்கும்போது நில ஓட்டு அமைப்பியல் என்பது tectonics என்பதையே குறிப்பதாகப் படுகிறது. plate tectonics என்பது, tectonics என்பதற்குள் அடங்கும் ஒன்றாகும். The American Heritage Science Dictionary, plate tectonics என்பதற்குப் பின்வரும் பொருளைத் தருகிறது.
- 1. (used with a sing. verb) A theory that explains the global distribution of geological phenomena such as seismicity, volcanism, continental drift, and mountain building in terms of the formation, destruction, movement, and interaction of the earth's lithospheric plates.
- 2. (used with a sing. or pl. verb) The dynamics of plate movement.
- எனவே plate tectonics நில ஓட்டு அமைப்பியலுள் அடங்கும் ஒரு கோட்பாடு அல்லது அக்கோட்பாட்டினால் விளக்கப்படுகின்ற தட்டுக்களின் இயக்கம் ஆகும். plate tectonics என்பதற்கான கலைச்சொல் இதனைச் சரியாக விளக்கக்கூடியதாக அமைதல் வேண்டும்.
- ஓட்டு நிலஅமைப்பியல் சிலவேளை பொருத்தமாக இருக்கக் கூடும். Mayooranathan 06:43, 6 ஜனவரி 2007 (UTC)
நிலப்பலகையியல் (அ) நிலவியல் பலகை
தொகுபுவிப்பொறைக் கட்டமைப்பு என்பது கலைச்சொல்லாக இல்லாமல் அதன் விளக்க பொருள் போன்று உள்ளது, இதை விட சிறந்த கலைச்சொல் தேவை, தமிழக அரசு பாடப்புதக்கத்தில் Plate Tectonics என்பது நிலவியல் பலகை என்று பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல் சற்று எளிமையாகவும் உள்ளது.--Sobanbabu.b 05:47, 21 சனவரி 2011 (UTC)
கண்டத்தட்டு இயக்கவியல்
தொகுPlate Tectonics கண்டத்தட்டு இயக்கவியல் ஆகும். புவி மேலோடு பல துண்டத் தட்டுகளாகப் பிளவுண்டுள்ளன. கண்டம் என்பது உப்புக்கண்டம் போல துண்டம் என்ற பொருளிலேயேஆளப்படுகிறது. எனவே இந்தத் தலைப்பை கண்டத்தட்டு இயக்கவியல் என மாற்றல் நல்லது. பழைய காலப் பள்ளிப்பாட நூல்களில் இந்தப் பெயரே இருந்தது. தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும் இச்சொல் பயன்பாட்டில் இருந்தது.இதற்கேற்பக் கட்டுரையைத் தொகுக்க விழைகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:04, 11 சூலை 2015 (UTC)
- ஏற்கெனவே மேலுள்ள உரையாடல்களில் குறிப்பிட்டிருப்பதுபோல, இச்சொல் தமிழிணையக் கல்விக்கழகத்தின் அகரமுதலியில் இருந்து பெறப்பட்டது. இச்சொல் கடினமாகவும் நீளமாகவும் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எளிமையான நல்ல சொல் கிடைத்தால் மாற்றுவதில் மறுப்பு ஏதும் இல்லை. தற்காலப் பள்ளிப் பாட நூல்களில் என்ன சொல் பயன்படுகின்றது என்று பார்த்து அதற்கேற்ப மாற்றினால் நல்லது. மேலேயுள்ள கருத்துக்களையும் பார்க்கவும்.--மயூரநாதன் (பேச்சு) 18:53, 11 சூலை 2015 (UTC)