பேச்சு:தமிழகத் திரைப்படத்துறை


விரைந்து மேம்படுத்தச் சொல்லும் சிவாவின் வேண்டுதல், குறுங்கட்டுரை விரிவாக்கக் கோரும் கோபியின் வேண்டுதல், ஆங்கில விக்கி சாராது சுயமாக எழுதத் தூண்டும் சுந்தரின் வேண்டுதல் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொள்ள முயன்றிருக்கிறேன் :) மேலும், தரவுகள், புள்ளிவிவர இணைப்புகள், படிமங்கள், உரை இணைக்க உத்தேசம் !--ரவி 18:29, 16 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நல்ல கட்டுரை, ரவி. பல புள்ளிவிவரங்களும் தந்திருக்கிறீர்கள். அவற்றிற்கான மேற்கோள்களையும் தந்துவிடுங்களேன். -- Sundar \பேச்சு 12:46, 13 அக்டோபர் 2006 (UTC)Reply

சுந்தர், புள்ளிவிவரங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கப்பட்டவை. ஆதாரங்கள் ஏதும் அகப்படுகிறதா பார்க்கிறேன். பாராட்டுக்கு நன்றி. --ரவி 13:16, 13 அக்டோபர் 2006 (UTC)Reply


இக்கட்டுரை தமிழகத் திரைப்படத்துறை என்றே இருக்கட்டும் தமிழ்த் திரைப்படத்துறை என்ற கட்டுரை தனியாக உருவாக்கப்பட வேண்டும். அதில் உலகின் அனைத்துத்தமிழ்த் திரைப்படத்துறைகளினையும் பட்டியலிட நான் முயல்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 07:18, 29 மே 2008 (UTC)Reply

கவனம் தேவை

தொகு

மேற்கோள்கள் எனும் பகுதிக்குக் கீழ் உள்ள உள்ளடக்கம், ஒரு நேர்காணல் போன்ற பாணியில் அமைந்துள்ளது. இது விக்கிப்பீடியா நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளதா என அட்மின்கள் கவனிக்கவும்.--ஏர்னஸ்டோ பாலாஜி 13:48, 16 திசம்பர் 2011 (UTC)Reply


திரைப்படமே வேண்டாம் என்ற பெரியாரைக் கூட திரைப்படமாக எடுத்திருப்பதை பதிவு செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் பிராமண ஆதிக்கம் மறைந்து தலித் திரைப்படங்கள் இப்போது வந்து கொண்டிருப்பதை சொ்ல்ல வேண்டும்.

- சகோதரன்.

தகவல் உதவி

தொகு

ஏறத்தாழ 200 திரைப்படங்கள் குறித்து ராண்டார் கை எழுதியுள்ள கட்டுரைகளுக்குரிய இணைய இணைப்புகளை, Blast from the Past (column) எனும் ஆங்கில விக்கி கட்டுரையில், தொகுத்துள்ளார்கள். பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் இற்றை செய்ய விரும்பும் பயனர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்! (சில இணைப்புகள் வேலை செய்யவில்லை - குறிப்பிட்ட இணையத்தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:08, 9 ஆகத்து 2014 (UTC)Reply

Return to "தமிழகத் திரைப்படத்துறை" page.