தமிழர் கப்பற்கலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

"எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன்பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கையில் இருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140). "1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாக கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154) 1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரித்தானியாவின் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரித்தானியாவின் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது." மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155).

மேலுள்ள உரைப்பகுதி கட்டுரையில், தமிழர் கப்பற்கலை வரலாறு என்ற தலைப்பின் கீழ் உள்ளது. தமிழர் கப்பற் கலைக்கும் விலைக்கு வாங்கி ஓட்டிய கப்பலுக்கும் என்ன தொடர்பு? வஉசி ஓட்டிய கப்பல் அக்காலத்தில் 800,000 ரூபாவுக்கு விலைக்கு வாங்கப்பட்டதென்றும், அதற்காக தமிழ் முஸ்லிம் ஒருவர் 200,000 ரூபா (கப்பலின் மொத்த விலையில் கால்வாசி) கொடுத்ததாகவும் வாசித்திருக்கிறேன். அது எப்படித் தமிழர் கப்பற்கலை வரலாறாகும்?--பாஹிம் (பேச்சு) 03:38, 27 திசம்பர் 2012 (UTC)Reply

ஆம்! தமிழர் கப்பற்கலை வரலாறு பகுதியில் இடம்பெற்றிருக்கும் மேலுள்ள பகுதி பாஹிம் கூறுவது போன்று தொடர்பில்லை தான். அது நீக்கப்பட வேண்டும். அதேவேளை //அதற்காக தமிழ் முஸ்லிம் ஒருவர் 200,000 ரூபா (கப்பலின் மொத்த விலையில் கால்வாசி) கொடுத்ததாகவும் வாசித்திருக்கிறேன்.//.போன்ற "நான் பார்த்தேன்", "வாசித்திருக்கிறேன்" போன்ற குறிப்புகள் அவசியமற்றது; அவற்றை ஆதாரமாக கொள்ளவும் முடியாது. தகவல் சரியானது என்றால் அதனை சான்றுகளுடன் குறிப்பிட்ட கட்டுரையில் தொகுத்துவைக்கலாம். --HK Arun (பேச்சு) 15:03, 27 திசம்பர் 2012 (UTC)Reply

//அதற்காக தமிழ் முஸ்லிம் ஒருவர் 200,000 ரூபா (கப்பலின் மொத்த விலையில் கால்வாசி) கொடுத்ததாகவும் வாசித்திருக்கிறேன்.// மேற்படி தகவல் ஏற்கனவே வஉசி தொடர்பான கட்டுரையில் உள்ளதுதான்.--பாஹிம் (பேச்சு) 15:07, 27 திசம்பர் 2012 (UTC)Reply

பாஹிம், அருண், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழர் கப்பற்கலை வரலாறு பகுதியில் உள்ள நரசையா அவர்களின் கூற்றுக்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் எனக் கருதுகிறீர்களா? அவை கட்டுரைக்கு அவசியமான பகுதிகள் என்றே நான் நினைக்கிறேன். இவ்வாறு மேற்கோள்கள் கட்டுரையிலேயே தருவதும் (அவசியமான இடங்களில் மட்டும்) விக்கி நடையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. மேலும் //அதற்காக தமிழ் முஸ்லிம் ஒருவர் 200,000 ரூபா (கப்பலின் மொத்த விலையில் கால்வாசி) கொடுத்ததாகவும் வாசித்திருக்கிறேன்.// என்ற வரிகளைக் கட்டுரையில் காணவில்லையே.--Kanags \உரையாடுக 21:57, 27 திசம்பர் 2012 (UTC)Reply

விலைக்கு வாங்கிக் கப்பலோட்டினால் அது எப்படித் தமிழர் கப்பற் கலையாகும்? கப்பற் கலை என்பது கப்பற் கட்டுமாணம் அல்லவா?--பாஹிம் (பேச்சு) 01:05, 28 திசம்பர் 2012 (UTC)Reply

//நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.// மேற்படி பகுதி வ. உ. சிதம்பரனார் கட்டுரையில் உள்ளது. இதுதான் தமிழர் கப்பற் கலையா?--பாஹிம் (பேச்சு) 01:13, 28 திசம்பர் 2012 (UTC)Reply
கப்பல் ஓட்டுவதும் கப்பற்கலை தானே:). நீங்கள் குறிப்பிட்ட பகுதி பற்றிய குறிப்பை வ.உ.சி. கட்டுரையின் உரையாடல் பகுதியில் இட்டால் அங்கு உரையாடலாம்.--Kanags \உரையாடுக 01:59, 28 திசம்பர் 2012 (UTC)Reply


ஒரு மேற்கோள் சுட்டப்பட்ட கூற்றுக்காக முழுக் கட்டுரைக்கும் துப்பரவு வார்ப்புரு இடப்பட்டு இருப்பது குழப்பம் தருகிறது. அந்தக் கூற்று வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த தகவல் ஒன்றைத் தருகிறது. அதாவது பெரும் கப்பல்களைக் கட்டி, நெடுந்தூரம் பயணம் செல்ல வளம் பெற்று இருந்த தமிழர் கப்பற்கலை நலிந்து போவதற்கான ஒரு காரணத்தை அது சுட்டுகிறது. அதாவது ஆங்கிலேயர்கள் சுதேகள் கப்பல் கட்டுவதற்கோ, கப்பல் விடுவதற்கோ அனுமதிக்கவில்லை, அல்லது கடுமையாக கட்டுப்படுத்தினார்கள் என்பதை. அது தமிழர் கப்பற்கலை கட்டுரையில் இடம்பெறுவது மிகப் பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 02:17, 28 திசம்பர் 2012 (UTC)Reply
கட்டுரையில் உள்ள வரிகள், மேற்கொள்குறிகளுடன் மேற்கோளாகவே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்த்தேன். இருப்பினும் நீக்கப்படவேண்டியதில்லை. ஆனால் மேம்படுத்தவேண்டும். நன்றி!--HK Arun (பேச்சு) 05:44, 29 திசம்பர் 2012 (UTC)Reply

//ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.//

கொழும்பில் கப்பலை வாடகைக்கு எடுத்தார் என்றால் யாரிடம் எடுத்தார் என்ற குறிப்புளதா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:51, 29 திசம்பர் 2012 (UTC)Reply

தொடர்பில்லாத வரிகளை புகுத்துதல்-கேள்விக்குற்படுத்தல்-கண்டனம்

தொகு
01. இந்த உரையாடலை இப்பொழுது தான் பார்த்தேன். ஒரு கட்டுரையின் பேச்சு பக்கத்தில் குறித்த அக்கட்டுரையுடன் தொடர்பில்லாத தகவல்களை புகுத்துவது வரவேற்கத்தக்கதல்ல. அவ்வாறு செய்வது எதற்கான உரையாடல் என்றே அறிந்துக்கொள்ள முடியாத வகையில் குழப்பத்தை உண்டுபன்னும்; உரையாடலை திசைத்திருப்பிவிடும். அவை இரண்டும் வ._உ._சிதம்பரம்_பிள்ளை கட்டுரையில் உள்ளவற்றை காரணமே இல்லாமல் இந்த உரையாடலில் புகுத்தியதன் ஊடாக இடம்பெற்றுள்ளது.
02. ஒரு கட்டுரையின் குறைபாடுகள் இருப்பின் அதனை திருத்தவதோ சுட்டிக்காட்டுவதோ தவறில்லை. ஆனால் //அது எப்படித் தமிழர் கப்பற்கலை வரலாறாகும்?// போன்றும் //இதுதான் தமிழர் கப்பற் கலையா?// என்றும் ஒட்டுமொத்தமாக தமிழரின் கப்பற் கலையையே கேள்விக்குற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான வரிகள் ஒருவகையான எள்ளல் சொல்லாடல்களாகவே பார்க்க முடிகிறது. இதற்கு எனது கண்டனங்களை பதிவுசெய்கின்றேன். --HK Arun (பேச்சு) 04:16, 29 திசம்பர் 2012 (UTC)Reply

விலைக்கு வாங்கிக் கப்பலோட்டினால் அது எப்படித் தமிழர் கப்பற் கலையாகும்?

தொகு

இதன் மூலம் பாஹிம் என்ன கூற வருகிறார். விலைக்கு வாங்கினால் அதை ஓட்டியது, அதை நிர்வகித்தது, அதனால் வணிகம் செய்தது இதெல்லாம் அவர்கள்து கலை இல்லையா? கட்டுமானம் மட்டும்தான் கலையெனில் தமிழுலகுக்கு பாஹிம் மிகவும் நற்செயல் புரிந்திருக்கிறார் என்று அர்த்தம். இந்த க்ருத்தின் மூலம் இவர் செய்தது யாதெனில்,

  1. கோயமுத்தூரில் தான் இந்தியாவின் 40% நீர் உறிஞ்சும் சாதனங்கள் உற்பத்தி நடைபெறுகிரது. அதனால் அதில் கிடைக்கும் நீரெல்லாம் தமிழகத்துக்கு சொந்தமானது. இனிமேல் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை நடக்காது.
  1. உ.உ.சி. விலைக்கு வாங்கியதால் அது தமிழற்கப்பற்கலை அல்ல என்றால் அந்தக்கப்பலை கட்ட மரங்களை எங்கிருந்து விலைக்கு வாங்கினார்கள். பெரும்பாலும் தமிழ்கத்தில் இருக்கும். அதனால் தமிழ்கத்தில் இருந்து விலைக்கு வாங்கிய மரங்கள் மூலம் கட்டிய அனைத்துலக கப்பல்கள் எல்லாம் தமிழர் கப்பற்கலையாகும்.

அதனால் மிகவும் வேண்டப்பட்ட இக்கேள்வியை கொண்டு தமிழற்கப்பற்கலை கட்டுரையை மேம்படுத்த தங்கள் பொன்னான நேரத்தை தமிழ் விக்கிப்பீடியர்கள் செலவழிக்க வேண்டும். அதற்கு காரணகர்த்தா பாஹிம் என்பதால் அந்த பங்கழிப்பு எல்லாம் பாஹிமையே சேரும். அதனால் பாஹிம் கணக்கில் பங்கழிக்க அவரது கடுவுச்சொல்லை தருவாராக. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:32, 29 திசம்பர் 2012 (UTC)Reply

தமிழர் கப்பற்கலை வரையறையும், வரலாறும்

தொகு

பாஹிம் முன்வைத்த விமர்சனத்தை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர் மரபுவழி அறிவுசார்ந்து கட்டப்பட்ட கப்பல்களே தமிழர் கப்பற்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இருக்கும். இந்த மரபில் பெரிதும் வழிவந்து வல்வெட்டித்துறையில் மட்டும் 19/20 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கப்பல்கள் பற்றி அறிய முடிகிறது. எ.கா: பகுப்பு:தமிழர் கட்டிய கப்பல்கள். இவற்றை நாம் முறையாக ஆவணப்படுத்தவில்லை. நெடுந்தூரக் கடற்பயணம் செய்வது, கடலோடுவது, கடல் வணிகம் ஆகியவையும் கப்பல்கலையோடு நெருங்கிய செயற்பாடுகளே. இவற்றிலும் தமிழர் நெடுங்காலம் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இவற்றை முறையாகப் பதிவுசெய்வதன் மூலம் இக் கட்டுரையை விரிவாக்கலாம்.

தமிழர் கப்பற்கலையின் வரலாற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • பழங்காலம்: தமிழ் இலக்கியத்தில் விரிவான பல குறிப்புகள் இடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழர் கப்பற்கலை பற்றிய தகவல்களைத் தொகுக்கலாம்.
  • இடைக்காலம்/சோழர் காலம்: சோழர் கடற்படை, பெரும் கப்பல்கள், நெருந்தூரக் கடற்பயணங்கள் பற்றிய செய்திகளை இங்கும் தரலாம்.
  • தற்காலம் காலம்: தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் முன்பும் பின்பும் தமிழர் கப்பற்கலையின் வீழ்ச்சி; ஈழத்தில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் கட்டப்பட்ட கப்பல்கள்; கடற்புலிகள்.

--Natkeeran (பேச்சு) 15:21, 29 திசம்பர் 2012 (UTC)Reply

நான் கூறிய கருத்தைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி, நற்கீரன். தமிழர் மரபுவழி அறிவுசார்ந்து கட்டப்பட்ட கப்பல்களே தமிழர் கப்பற்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இருக்கும் என்னும் உங்கள் கூற்று தமிழர் கப்பற்கலை என்றால் என்னவென்பதை மிகச் சுருக்கமாக விளக்குகிறது என்பதுடன், தமிழர் மரபுவழி அறிவு சார்ந்த கப்பல் கட்டுமானம் மட்டுமே தமிழர் கப்பற்கலையாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.--பாஹிம் (பேச்சு) 15:36, 29 திசம்பர் 2012 (UTC)Reply
நன்றி. --Natkeeran (பேச்சு) 15:42, 29 திசம்பர் 2012 (UTC)Reply

//தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. //

கட்டுரையே இப்படித்தான் ஆரம்பிக்கிறது. கப்பற்கட்டுமானம் என்றால் Ship Building. கப்பற்கலை என்றால் என்ன? சரியான கலைச்சொல் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:38, 30 திசம்பர் 2012 (UTC)Reply

en:Naval architecture? --Anton (பேச்சு) 06:55, 30 திசம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_கப்பற்கலை&oldid=3845141" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழர் கப்பற்கலை" page.