பேச்சு:தமிழிசை
செம்மைப்படுத்துதல்
தொகுI have tried to remove non tamil isai related comments and make the more article more neutral in tone and objcetive. I feel that the topic is comprehensive and any info given should be supported with credible references.--ரவி (பேச்சு) 15:29, 30 ஜூன் 2005 (UTC)
குறிப்புகள்
தொகு"உங்களுக்கு சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள்." http://etamil.blogspot.com/2005_08_01_archive.html
தமிழிசை இயல் தலைப்புகள்
தொகு--Natkeeran 22:30, 19 ஆகஸ்ட் 2007 (UTC)
அனல்வாதம் புனல் வாதம் எதற்கு இங்கே?
தொகுஇந்தக் கட்டுரை தமிழிசையின் அடிப்படையை விளக்குமுன் அனல்வாதம் புனல்வாதம் அன்னிந்யர் ஆட்சி போன்றவற்றைத் தேவையின்றிச் சொல்வது தகாது. பலரும் தமிழிசை என்பதில் இசையென்பதை மறந்து விட்டுத்தமிழ்மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு பலவாறு பேசுகிறார்கள்.
- முற்றிலும் உண்மை. ஆங்கில விக்கியில் en:Carnatic music என்னும் கட்டுரையின் பேச்சு பக்கத்தைப் பாருங்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்! ஐராவதம் மகாதேவன் கல்வெட்டுச் சான்று கூட (கி.பி 400! குடுமியான்மலை கி.பி 700 தான்) தந்துள்ளார். திருஞானசம்பதர் பாடியதெல்லாம் மறுத்திருக்கிறார்கள்! சரி செய்வோம்!!--செல்வா 03:51, 10 செப்டெம்பர் 2007 (UTC)
- "வடமொழியான சமஸ்கிருதச் சொற்களின் திணிப்பு பெருகியது. இயற்றமிழ்ச் சுவடிகள் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் பலி கொள்ளப்பட்டன." என்ற வரிகள் முகவுரையில் தேவையில்லாதது. வேண்டுமென்றால் இதற்காக தனிப்பகுதி கொள்ளலாம். இசையை வளர்ப்பதை விட்டுவிட்டு வரலாற்றைப் பிடித்துக்கொண்டு வீணில் சண்டை செய்து கொண்டிருக்கிறோம். --Jeevagv 15:01, 22 அக்டோபர் 2007 (UTC)
- முற்றிலும் உண்மை. ஆங்கில விக்கியில் en:Carnatic music என்னும் கட்டுரையின் பேச்சு பக்கத்தைப் பாருங்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்! ஐராவதம் மகாதேவன் கல்வெட்டுச் சான்று கூட (கி.பி 400! குடுமியான்மலை கி.பி 700 தான்) தந்துள்ளார். திருஞானசம்பதர் பாடியதெல்லாம் மறுத்திருக்கிறார்கள்! சரி செய்வோம்!!--செல்வா 03:51, 10 செப்டெம்பர் 2007 (UTC)
- ஜீவா, நீங்கள் இசை இன்பம் வலைப்பதிவு ஜீவா என்றுதான் நினைக்கிறேன். தகுந்த மாதிரி மாற்றி எழுதுங்கள். இந்தக் கட்டுரையை ஏற்றமாதிரி வளர்தெடுங்க உதவுங்கள். நன்றி. --Natkeeran 23:33, 22 அக்டோபர் 2007 (UTC)
தமிழிசைக் கட்டுரை திட்டவரைவு
தொகு- அறிமுகம்
- இயல், இசை, நாடகம்
- பண்
- நாட்டார் இசை
- தமிழிசையும் கருநாடக இசையும்
- தற்கால இசை: திரையிசை, கானா, ராப்
- தமிழிசை ஆதாரங்கள்
- வரலாறு
- தமிழிசைக் கூறுகள்
- இசை எதிர் இரைச்சல்
- இசை ஒலி/நாதம்
- கோவை/சுரம் - ஏழுழிசை
- பன்னினு நிலம்
- சுருதி/ஆதார ஒலி நிலை
- இராகம்
- ஏறுநிரல்/இறங்குநிரல்
- மண்டிலம்
- முன்னர்ப்பாகம், பின்னர்பாகம்
- கோவை வரிசை/சுவராவளி
- தமிழிசைக் கருவிகள்
- ஆய்வு
- மேற்கோள்கள்
முந்தியவை
தொகுதமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் இசை நயத்துடன் பாடல்களைப் பார்க்கலாம். அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை
கட்டுரை பற்றிய கருத்து
தொகுஇது முக்கியமான கட்டுரையாகையால், இதனை மிக்க அக்கறையோடும், தகுந்த அறிவோடும் எழுதுதல் வேண்டும். இப்பொழுதிருக்கும் நிலையில் தொடக்க வரிகள் முதற்கொண்டு மிகப்பலவும் திருத்தி எழுத வேண்டிய நிலையில் உள்ளது. இப்பொழுது இருக்கும் நேர நெருக்கடையால் உடனே மாற்றியமைக்க முடியாமல் உள்ளேன். தமிழிசை என்பது இரு பொருளில் வழங்குவது, ஒன்று துல்லிய தமிழ் இசைமுறைமையை, இசை ஒருங்கியத்தைப் பின் பற்றியது. இதனைச் செவிசை வரிசையில் வைத்து எண்ண வேண்டும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி விளரி, தாரம் என்னும் ஏழிசைஇ முதலானவை இந்த செவ்விசை வடிவத்தைச் சேர்ந்ததூ. இது பற்றி மிக விரிவான ஆய்வுகள் உள்ளன. பலரும் தமிழிசை என்றால் தமிழ் மொழியால் அமைந்த இசைப்பாடல் என்றே பிழையாக எண்னுகிறார்கள். தமிழிசை என்பது தமிழர்களின் இசை முறைமை (இதில் எந்தமொழிப் பாடலையும் பாடலாம்). தாலாட்டு, தெம்மாங்கு, அம்மானை, ஒப்பாரி, ஏலேலோ முதலான நூற்றுக்கணக்கான பாடல்வகைகள் (தமிழிசைக் கூறுகள் கொண்டிருப்பினும், பொதுப்பட தமிழிசை எனக்கூறக்கூடும் எனினும், அவையல்ல தமிழிசை என்பது). சுரம் முதலான சொற்களையும் தெளிவாக வரையறை செய்ய வேண்டும். இக்கட்டுரையை நான் கருத்தில் கொள்கிறேன்.. கூடிய விரைவில் வந்து திருத்த முயல்கிறேன். --செல்வா 18:03, 6 ஆகஸ்ட் 2010 (UTC)