பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் என்பது சற்று பொருத்தமான பெயராக இருக்கும் என்று நினைக்கின்றேன். இல்லாவிடில் பிற இயக்க உறுப்பினர்களின் பெயர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படலாம்!!! --Natkeeran 16:15, 8 செப்டெம்பர் 2006 (UTC)
- பொதுவாக மாவீரர்களின் இயக்கப்பெயரை தலையங்கமாகக் கொடுப்பது சரியா இல்லை அவரகளின் இயக்கப் பெயர்களுடன் அவர்களின் பதவிகளும் வழங்குவது சரியா.எடுத்துக்காட்டாக சங்கர் என இருந்த தலைப்பை லெப்டினண்ட் சங்கர் என யாரோ மாற்றிவிட்டனர்.இருந்தாலும் எது நடைமுறைக்கு ஏற்றவாறு அமைகின்றது.அனைத்து நிர்வாகிகள் மற்றும் பிற பயணர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 00:54, 3 அக்டோபர் 2006 (UTC)
- மேலும் இப்பட்டியலுக்கான வெளியிணைப்புகளை நான் விரும்பவில்லை இருப்பினும் நிர்வாகிகளின் விருப்பத்திற்கேற்றாற் போல அமைக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 00:59, 3 அக்டோபர் 2006 (UTC)
- நிரோ, அந்த மாற்றத்தை நான் தான் செய்தேன். சங்கர் என்ற பெயரில் பலரிருக்கிறார்கள். இரண்டு மாவீரர்கள் வேறு. அதனால் பிரித்துக் காட்டுவதற்கு அவ்வாறு மாற்றினேன். இது ஏற்புடைதல்லாவிடில் வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்.--Kanags 08:12, 3 அக்டோபர் 2006 (UTC)
- kanags, லெப்டிணன்ட் போன்ற பதவிப் பெயர்களை நாம் கட்டுரைத் தலைப்பில் தருவதில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்திலேயே இரண்டு சங்கர்கள் இருப்பதால் கொஞ்சம் குழப்பம் தான். அவர்களுடைய முழுப்பெயர்களை (தந்தை பெயரை கொண்டு) வைத்து கட்டுரைகள் தலைப்பை மாற்றுவது ஒரு தீர்வாக இருக்கலாம்--ரவி 09:23, 3 அக்டோபர் 2006 (UTC)
ஆம் அவர்களது உண்மையான பெயர்களை வைத்து கட்டுரைகளை மாற்றுவதே நன்று மேலும் பல குழப்பங்களுக்கு வழி வகுக்காது.மேலும் அவ்வாறே மாற்றியும் அமைக்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 23:33, 3 அக்டோபர் 2006 (UTC)
தேடலில் பயன்படக் கூடியவை இயக்கப் பெயர்களே. அங்கயற்கண்ணி, சங்கர் போன்ற பெயர்களாலேயே குறித்த நபர்கள் அடையாளங் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான முக்கியத்துவமும் பெருமாப்லும் குறித்த பெயர்களுடன் தொடர்புபட்டதே. ஆகையால் இயக்கப் பெயர்களில் தலைப்பிருப்பதே தேடலுக்கு இலகுவானது. பழையபடி பெயர்களை மாற்றப் பரிந்துரைக்கிறேன். --கோபி 15:51, 4 அக்டோபர் 2006 (UTC)
நண்பர் கோபி அவ்வாறு நான் இயக்கப்பெயர்களை தலைப்பாக வழங்கும் பொழுது பல பிரச்சனைகள் பொதுவாக சங்கர் என இருவர் உள்ளனர்.அப்போது இயக்கப்பெயரை வைத்தால் பிரச்சனை.மேலும் அவர்களது பதவிகள் மூலம் பெயர்களை வைக்கக் கூடாதெனவும் கூறியுள்ளார் நண்பர் ரவி.இது கலந்து ஆலோசிக்க வேண்டிய விடயமாம்.--சக்திவேல் நிரோஜன் 15:54, 4 அக்டோபர் 2006 (UTC)
- ரவி சொல்வது சரிதான். ஆனால் சங்கர் போன்ற சந்தர்ப்பங்களில் பதவிப்பெயர்களை இணைத்துப் பெயர் வைப்பதே தீர்வாக எனக்குப் படுகிறது. ஆனால் குறித்த நபர்களின் இயற்பெயர்கள் அவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தரவில்லை என்பதால் அவர்களது மாற்றுப் பெயர்களே கட்டுரைத் தலைப்புக்களுக்குப் பொருத்தமானவை. கிட்டு போன்றவர்களின் இயற்பெயர்கள் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோபி 15:59, 4 அக்டோபர் 2006 (UTC)
சரி அவ்வாறே செய்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 16:21, 4 அக்டோபர் 2006 (UTC)
இது விதயத்தில் எனக்கு இறுக்க நிலை ஏதும் கிடையாது. தேடல் வசதி குறித்து கோபி கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. இது விதயத்தில் நிரோவும் பிற இலங்கைப் பங்களிப்பாளர்களுக்கும் உடன்பாடான தலைப்பில் கட்டுரை இருப்பது நன்று. நடுவில் புகுந்து கொஞ்சம் குழப்பியதற்கு வருந்துகிறேன், நிரோ--ரவி 19:27, 4 அக்டோபர் 2006 (UTC)
ஒரு அலோசனை: ஒரே இயக்க பெயர் இருவருக்கு வரும் இடத்தில் இயற்பெயர்களை () தரலாம். --Natkeeran 20:54, 4 அக்டோபர் 2006 (UTC)
அவ்வாறு தருவது கடினமில்லை ஆனால் ஒரு எடுத்துக்காட்டாக சிதம்பரம் எனும் இயக்கப்பெயர் கொண்ட ஒரு பெயர் ஆனால் அவ்வாறு எழுதும் பொழுது அங்கு சிதம்பரம் எனும் வேறு பெயர்களும் இருக்கின்றது.அதனால் நான் கப்டன் சிதம்பரம் என்று வழங்கியிருக்கின்றேன்.மேலும் அவ்வாறு வழங்குவதனால் தேடுபவர்கள் இலகுவில் பெறுவர் என்பதற்காக பொதுவாக இவர்களது இயற்பெயர்களை தேடுபவர்க்ள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என கோபி கூறியதைக் கேட்டேன்.ஏலும் அவ்வாறு கோபி கூறியதைப் போலவே இரு பெயர்கள் வரும் போது அவர்களது பதவி நிலையை முன்னே இடுவதனால் பிரச்சனைகள் எதுவும் விளையா எனக் கூறியிருந்தார் ரவியும்.அவ்வாறே நானும் செய்கின்றேன்.இருப்பினும் நீங்கள் கூறுவது போலவும் மாற்றி அமைத்தேன் ஆனால் நண்பர் கோபியின் கூற்றுப் போலவே அவர்களின் இயற்பெயர்களால் தேடும் பயணர்கள் மிகக் குறைவாக இருக்கும் என்ற கருத்தினாலேயே இவ்வாறு மாற்றி அமைத்தேன்.மேலும் உங்களுக்கு ஆட்சேபனையிருந்தா கூறுங்கள் மாற்றியமைக்கலாம்.--சக்திவேல் நிரோஜன் 21:02, 4 அக்டோபர் 2006 (UTC)
உங்கள் கருத்து சரியே, தெளிவுபடித்தியதற்கு நன்றி. --Natkeeran 21:05, 4 அக்டோபர் 2006 (UTC)
எண்ணிக்கை
தொகுஎண்ணிக்கைக்குத் தனியான கட்டுரை இருப்பதற்குரிய குறிப்பிடு தகைமை எதுவும் கிடையவே கிடையாது.--பாஹிம் (பேச்சு) 11:20, 7 திசம்பர் 2018 (UTC)
- @Fahimrazick: மேலே பலர் கட்டுரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எவரும் இக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை குறித்து கேள்வி எழுப்பவில்லை. கட்டுரையின் தலைப்பை வேறு ஒரு தகுந்த தலைப்புக்கு மாற்றுவதில் எனக்கு உடன்பாடு. மாவீரர்கள் பற்றிய தனிக்கட்டுரை இல்லாததால், அதற்கேற்ப கட்டுரையை மாற்றி எழுதலாம். நன்றி.--Kanags (பேச்சு) 12:39, 7 திசம்பர் 2018 (UTC)
- இவ்வாறு வெறுமனே எண்ணிக்கைகளைக் குறிப்பிடும் ஓர் அர்த்தமற்ற கட்டுரை எதற்காக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 17:34, 7 திசம்பர் 2018 (UTC)
- விக்கிப்பீடியா ஒரு தகவல் களஞ்சியம் என்பதை மறவாதீர்கள். தலைப்புத் தவறென்றால் அதனை மாற்றுவதற்கு உடன்பாடு. புதிய தலைப்புக்கேற்பக் கட்டுரையையும் மாற்றி இன்னும் கூடிய தகவல்களுடன் எழுதலாம். மாவீரர் (விடுதலைப் புலிகள்) எனக் கட்டுரைத் தலைப்பை மாற்றுவதற்குப் பரிந்துரைக்கிறேன். அதற்கேற்ப இன்னும் விரிவாகக் கட்டுரை எழுதலாம்.--Kanags (பேச்சு) 21:52, 7 திசம்பர் 2018 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 00:28, 8 திசம்பர் 2018 (UTC)
இத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்கும் ஆதாரமில்லை. சும்மா ஒவ்வோர் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையவற்றை எப்படி நம்புவது?--பாஹிம் (பேச்சு) 01:34, 8 திசம்பர் 2018 (UTC)
- பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அப்போது மேற்கோள்கள் கொடுக்கும் கட்டாயம் இருக்கவில்லை. அதற்காகக் கட்டுரையாளர் தாமாகவே "சும்மா" எழுதிருப்பார் என நம்புகிறீர்களா? பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் மேற்கோள்கள் எதுவுமில்லாமலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்காக இவ்வாறான வரலாற்றுக் கட்டுரைகளை ஒரு பயனர் கேட்டார் என்பதற்காக அழிக்க முடியாது. அதற்காகத்தான் மேற்கோள் தேவை என வார்ப்புரு இடப்படுகிறது. கட்டுரை மேம்படுத்தப்படும். நன்றி.--Kanags (பேச்சு) 02:39, 8 திசம்பர் 2018 (UTC)
இவை வரலாறுகளல்ல, வெறுமனே பொய்த் தகவல்கள். நம்பகமான ஆதாரம் எதுவும் கிடையவே கிடையாது.--பாஹிம் (பேச்சு) 04:09, 8 திசம்பர் 2018 (UTC)