பேச்சு:தமிழ்நாடு வனத்துறை
நன்றி! பல மாற்றங்கள் செய்யவும் கூடுதலாக தகவல் கிடைத்தால் சேர்க்கவும்.--செல்வம் தமிழ் 05:46, 12 மே 2009 (UTC) மாற்றம் செய்தாலும் அடைப்புக்குறிக்குள் இருப்பதை நீக்கவேண்டாம்.--செல்வம் தமிழ் 05:50, 12 மே 2009 (UTC)
- செல்வம் தமிழ், வனத்துறை பற்றி எழுதுவதற்கு நன்றி. ஆனால் விலங்கு, தாவரம்/செடியினம் என்பவற்றுக்கு பானா, புளோரா என்று அடப்புக்குறிகளுள் விளக்கம் தேவையா? அவை அனைவரும் அறிந்த சொற்கள் தாமே? இணைப்புகளும் தரப்பட்டுள்ளன. -- சுந்தர் \பேச்சு 05:59, 12 மே 2009 (UTC)
அது பற்றி எனக்குத் தெரியாது அது வனத்துறையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஆங்கில மொழிபெயர்ப்புத் தானே வனத்துறை பற்றிய அறிமுகம் அதற்கு மேற்கோள் இடப்போகின்றேன். விளக்கம் இல்லை அது அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் உள்ளவற்றை கொடுத்திருக்கின்றேன். இது சட்ட செயாலாக்த்தின் பகுதி கட்டுரை. இது பொது கட்டுரை. அதில் உள்ளவற்றை மொழிபெயர்க்கின்றேன் அதில் ஏதாவது பிழை இருந்தால் திருத்தவும். விலங்கியலுக்காகவோ உயிரினப்பிரிவிற்காகவோ எழுதவில்லை அதை தாங்கள் பகுதி கட்டுரையாக எழுதவும்.--செல்வம் தமிழ் 07:20, 12 மே 2009 (UTC) அது எது வேண்டுமென்றாலும் குறிக்கட்டும் இதற்கு மேற்கோள் கொடுத்திருக்கின்றேன். மேற்கோள் கொடுத்தவற்றை மீண்டும் மீண்டும் நீக்குவதேன். எல்லாக் கட்டுரைகளிலும் உள்ளே தானை வருகின்றது. இந்த தலைப்பிலா கட்டுரை எழுதுகின்றேன்.--செல்வம் தமிழ் 09:01, 12 மே 2009 (UTC)
- செல்வம், இக்கட்டுரையின் முழு உள்ளடக்கத்தையும் நீக்கியதன் காரணத்தை இங்கு தெரிவிக்கவும். அவற்றை மீள்வித்திருக்கிறேன். மேலும், கிரிசில்ட் ஜெயன்ட் ஸ்கியுரல் என்பதனை ஆங்கிலத்திலேயே அடைப்புக் குறிகளுக்குள் இடலாமே.--Kanags \பேச்சு 09:40, 12 மே 2009 (UTC)
- செல்வம் சிங்கவால் குரங்கு என்பது ஆங்கிலத்தின் Lion Tailed Macaque என்பதின் நேரடி தமிழாக்கம். இவ்விலங்கிறகு சோலைமந்தி என்று மிகப் பொருத்தமான தமிழ் பெயர் குற்றாலக்குறவஞ்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பெயரில் உள்ள சோலை என்பது இவ்விலங்குகள் வாழம் உயர்ந்த மரங்கள் கொண்ட வனத்தையும், மந்தி என்பது Macaque (கவனிக்க Monkey அல்ல Macaque என்பது குரங்கல்ல) என்றும் பொருள்படும். யாரோ ஒரு ஆங்கில தெரிந்த தமிழர் பரங்கியர் காலத்தில் இதை சிங்கவால் குரங்கு என்று மொழி பெயர்த்துகொடுத்தப் பெயரை நாம் இன்னும் உபயோகத்தில் கொண்டு இருப்பது மிகவும் வருத்தத்தக்கது. அருவி என்ற சொல்லை விட்டு நீர் (water) வீழ்ச்சி (falls) என்ற சொல்லை கையாள்வது போல!!!
பண்டைய தமிழர்கள் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் சூட்டிய பெயர்கள் அவற்றின் சூழியல், அடையாளம் போன்ற பல விடயங்களை தன்னகத்தே கொண்டது, ஆதலால் அப்பெயர்கள் வழக்கிழந்து போகாமல் அவற்றை காப்பது நம் கடமை, ஆதலால் தான் நீங்கள் எழுதிய சிங்கவால் குரங்கு என்பதை முற்றிலும் நீக்கினேன். தற்போதும் மீண்டும் அப்பெயர் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது, ஆதலால் அதை நீக்க பரிந்துரைக்கிறேன். --கார்த்திக் 17:22, 12 மே 2009 (UTC)
சிங்க வால் குரங்கு என்பதற்கு வழிமாற்று கொடுக்கலாம், ஆனால் அதை இங்கு குறிக்காமல் சோலைமந்தி என்பதை மட்டும் குறிக்கலாம். --குறும்பன் 18:46, 12 மே 2009 (UTC)
இந்த கட்டுரைக்கு அரசு கொள்கை குறிப்பிலிருந்து அப்படியே எடுத்திருக்கின்றேன் மேற்கொள்கள் உள்ளது மாற்ற வேண்டாம். மேற்கோள்கள் தமிழிலேயே உள்ளது.--செல்வம் தமிழ் 21:50, 12 மே 2009 (UTC)
- மேற்கோள்கள் தமிழில் உள்ளனவா? அவை ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழில் இருந்தாலும் சரியான தமிழ் பெயர் கொண்டு சுட்டுவது தவறல்ல. மேலும் இந்த இணையத்திலிருப்பது கொள்கை பக்கமல்ல. அரசு இணையம் இன்னும் தொடக்க கட்டத்தில் தான் உள்ளது, வரும் நாட்களில் மேம்படுத்துவார்கள் என்று நம்பலாம். இது மொழிபெயர்க்கப்பட்ட பொது கட்டுரையாக இருந்த போதிலும் சரியான தமிழ் சொல் தெரிந்தால் அதை பயன்படுத்துவதில் தவறில்லை. --குறும்பன் 02:07, 13 மே 2009 (UTC)
நிர்வாகிகளுக்கு வேண்ஃடுகோள்
தொகுவிக்கிப்பீடியாவில் எளிய நடையில் அனைவருக்கும் புரிகின்ற வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். கட்டுரையாளரின் உணர்விற்கும் மதிப்பளிக்கவேண்டும். இது அனைத்து தரப்பினரும், குறைந்த படிப்பு மெத்த படித்தவர் என்று அனைவரும் 3 வகுப்பு படித்து விட்டு பாதியில் படிப்பை நிறுத்தியவர் என்று அனைத்து தரப்பினரும் இணையத் தளத்தை பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்தில் தானே இந்த விதியை குறியிருக்கின்றீர்கள். வெறும் தமிழ் மட்டுமே எழுத படிக்கவேத் தெரியும் வேறுத் தொடர்பு மொழியேத் தெரியாதவர்களுக்கு என்று பொதுவாக விதிக்கப்பட்டது தானே இந்த விதி.
மந்தி= பெண் குரங்கு, மெத்தனமாக இரு, செரிமானம், மெத்தனமாக இரு என்று சாதாரண அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எதை இந்த சொல் குறிக்கின்றது என்று தெரிந்த பின் தான் ஒருவர் பயன்படுத்த வேண்டுமா?
ஆங்கிலத்தில் lion tailed macaue என்பதை உயிரினப் பூங்காவில் சிங்க வால் குரங்கு என்று எழுதி வைத்துள்ளனர். அதற்குத் தனி தலைப்பாக கட்டுரை எழுதி வைத்துள்ளார்கள். அதில் நான் தலையிட விரும்பவில்லை அது அந்த பயனர் கருத்து, கொள்கையுடன் எழுதியிருக்கின்றார். நான் பொது கட்டுரை அனைவருக்கும் எளியத் தமிழில் எழுத வேண்டும் என்பது என் கொள்கை. இப்படி இடையில் இடையில் நீங்கள் இடைஞ்சல் செய்தால் எப்படி கட்டுரை எழுத முடியும். தட்டச்சு செய்த கட்டுரைத் தரவுகள் சேமிக்காமலே அழிந்து போகின்றன.
மொழிக் குறித்த இணைய மேற்கோளையும் காட்டிவிட்டேன். தமிழ் அனைவருக்கும் புரிகின்ற வகையில் மொழி அன்றைய காலகட்டத்திலிருந்து மாற்றமடைந்து தான் வருகின்றது. இன்னும் எளிமையுடன் மாற்றமடையத்தான் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை தடை செய்யமுடியாது. அதற்கு நாம் வைத்து கொண்டிருக்கின்ற பெயர்களே உதாரணம். நாம் மட்டும் நவீனமாக கார்த்திக் பாலா, இன்னும்பிறப் வடமொழிப் பெயர்களை வைத்துக்கொண்டிருக்கின்றோமே. பண்டைய காலத்தில் இந்த பெயர்தான் இருந்ததா?
ஒத்த கருத்துடைய கொள்கைகளை விக்கியில் நிலை நாட்ட வேண்டும். தேடு பொறியில் எந்தப் பெயரில் ஒரு வாசிப்பாளர் தேடுவார். பொதுவாக அறியப் படும் ஒன்றிலா? அல்லது நீங்கள் மிகவும் பழையத் தமிழில் வைத்த ஒன்றிலா? அப்படி கொள்கை இருந்தாலும் ஒரு சில விடயங்களில் முதலில் அந்த சொல்லை மக்கள் அறிய வைக்க வேண்டும் மக்களுக்கு அந்த சொல்லே தெரியாத பொழுது இந்த கட்டுரையை எப்படித் தேடி வருவர்.
சில தமிழ் தொலைக்காட்சிகளில் தமிழ் புதிய சொற்களை அறிமுகம் செய்கின்றனர். அதன்படி புதிய வார்த்தைகளை புகுத்துகின்றேன் தேவையான இடங்களில் பழைய சொல்லையும் உள்ளிடுவேன் அடைப்புக் குறிக்குள் அல்லது புதிய சொல்லை அடைப்புக் குறிக்குள்- அந்த சொல் மாக்கள் பயன் பாட்டிற்கு வருவதற்காக. அதுவும் நான் எழுதுகின்ற கட்டுரைகளில் மட்டும் தான் மற்றவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் திருத்துவதில்லை.
நான் இது மாதிரி உங்கள் கட்டுரைகளில் தேடிச் சென்று மாற்றி இடைஞ்சல் தரலாமா? குறைந்த பட்சம் அதிக முரண்பாடுகளாக இருக்கும் வார்த்தைகள் மாற்றலாம். யாரும் புதிய கட்டுரை எழுதுவது இல்லையா? இந்த கட்டுரைத் தலைப்பு வெகு நாட்களாக சும்மாத் தான் கிடந்தது. நான் இது மாதிரி இடைஞ்சல் யாருக்காவது கொடுக்கின்றேனா? கட்டுரை வரலாறில் நான் எந்த நேரத்தில் எழுதுகின்றேன் என்றத் தகவல் இருக்கும்.
வழிமாற்று செய்ய உரிமை இல்லையா? இதெல்லாம் விக்கியின் கொள்கைகள் தானே? ஏதாவது ஒன்றை அளவுகோளாக வையுங்கள். ஆளாளுக்கு கொள்கைகளை சொன்னால் எனக்கும் ஒரு கொள்கை இருக்கும். எல்லாமே சேர்ந்து மோதிக் கொண்டுதான் இருக்கும். இங்கு வாசிப்பாளர் யாராவது கருத்து தெரிவிக்கின்றார்களா? நாமே மாறி மாறி கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றோம்.
என் கொள்கைப் படி அனைவரின் கட்டுரையையும், சகட்டு மேனிக்கு, விளக்கம் உரைநடைப் பகுதியில் தந்து பின் விளக்கம் பெறாமல் திருத்தினால் என்னை பற்றி என்ன நின்ப்பீர்கள். அதற்காக இரண்டு வார்த்தைக்கு ஒரு கருத்து தெரிவித்து கொண்டிருக்க கூடாது. கருத்தை மின்னஞ்சல் போல பாவிக்கின்றீர்கள் நான் அடுத்து என்ன சொல்லப் போகின்றேன். அது கட்டுரை எழுதி முடித்தபின் எப்பொழுதாவது பாருங்கள். என்க்குத் தட்டச்சு வேகமாக வராது.
கட்டுரைதான் முதன்மை கருத்து இரண்டாம் பட்சம். உடனே என்க்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை. இங்கு அனைவருக்கும் அவரவர் அனுபவத்தின் பேரில் கருத்துக்கள் இருக்கும் ஒரே மாதிரி கருத்துக்கள், ஒரிழையும் பிசகாத எண்ணம் கொண்டவர்கள் யாருமில்லை. குறைந்தபட்ச செயல் திட்டத்தின் மூலம் கருத்துக்களை அனைவரின் கருத்துக்களையும் ஒன்றிணைக்கலாம் அதுதான் விக்கியின் விதிகளாக கூறப்பட்டுள்ளது.
நீங்கள் இடைஞ்சல் தந்து எத்தனை தட்டச்சு செய்தவைகள் அழிந்து போயிருக்கின்றன. எல்லாவற்றையும் என் வேர்டில் தட்டச்சு செய்தபின் தான் இதில் சேமிக்கவேண்டும் என்பது எனக்கு இரட்டை வேலை. போர் புரிவது போல் படை எடுக்கின்றீர்கள். இந்தக் க்ட்டுரை பொதுக் கட்டுரையா? இல்லையா? தமிழக அரசின் துறை சார்ந்த கட்டுரை ஏற்கனவே இது மாதிரி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். இப்பொழுது மட்டும் படையெடுக்க வேண்டிய அவசியமேன். அதையும் நிர்வாகிகள் தான் செய்கின்றனர். மேற்கோளும் காட்டிய கட்டுரையை திருத்தினால் எதை ஆதாரமாக கொடுக்கமுடியும். இதை விக்கியில் விதியாக சேர்த்தபின் தான் (பொதுக் கருத்துக்குபின்) என்னிடம் கோரமுடியும். ஏதாதவது கேட்டால் ஆங்கிலத்தை, அங்குள்ள விதியை மேற்கோள் காட்டுகின்றீர்கள். தமிழில் எல்லாருக்கும் புரிகின்ற வகையில் மாற்றுங்கள்.
கிரந்தம் என்று சொல்லுகின்றீர்களே அதுவே யாருக்கும் தெரியாது. வடமொழி எழுத்துக்கள் என்றுதான் இங்குள்ளவர்கள் பயன்படுத்துவார்கள். ஆரம்பத்தில் கிரந்தம் கிரந்தம் என்று கூறிக்கொண்டிருந்தீர்கள் நானும் இங்குள்ளவர்களிடம் கேட்டேன் அப்படி என்றால் என்ன என்று கேட்கின்றனர். என்க்கும் தெரியாது அகராதியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மக்களுக்கு இது என்ன என்று தெரியாத பொழுது நமது கொள்கையை மட்டும் எப்படி புகுத்தமுடியும் அது எப்படி உடனே நிறைவேறும்.
அப்படி இல்லையென்றால் ஆங்கிலத்தில் உள்ளது போல் எளியத் தமிழ் அல்லது பழங்காலத் தமிழ் என்று கட்டுரைத் தளம் உள்ளதா? நான் எளியத் தமிழை எடுத்துக் கொள்கின்றேன். நான் பொதுக் கட்டுரை மட்டுமே தொடுகின்றேன் காரணம் அதிக சர்ச்சைகள் எழுவதால்? கை வலிக்கின்றது எத்தனை முறை கருத்து கூறுவது. இனி உங்கள் கட்டுரைகள் சென்றுதான் பார்க்கவேண்டும் அதற்கு நேரமில்லை. சென்றால் மீண்டும் மீண்டும் சர்ச்சைகள்தான்.
தயவு செய்து சர்ச்சைகளுக்கு சிறிது காலம் முற்றுப் புள்ளி வையுங்கள். நீக்கியதால் தான் நான் எழுதுகின்றேன். நிர்வாகிகள் தான் தலையிட வேண்டும் புதுப் பயனர்கள் போல, எப்பொழுதாவது வருகின்ற பயனர் போலக் கருத்து சொன்னால் எப்படி? நீக்குவதற்கு சற்றுத் தயங்க வேண்டும் அதே தான் நாம் எழுதும் கட்டுரைக்கும் வரும். இதனால் கட்டுரையாளர்கள் எரிச்சலடைவர் நான் பிறருக்கு செய்தாலும் இதே எண்ணம் தான் வரும். நான் செய்வதில்லை. கருத்து சொல்லிவிட்டு அகன்று விடுவேன்.
அவரே யோசித்து பிறகு ஒருநாள் மாற்றுவார் மாற்றவில்லையென்றால் பாதகமில்லை. நான் அப்படி எவ்வளவோ மாற்றியிருக்கின்றேன் பிறர் பயனர் ஒத்துக்கொள்ளாத விடயங்களையும் நான் ஒத்து கொண்டிருக்கின்றேன் அது வெளியில் தெரியாது சர்ச்சையில் கலந்து கொள்ளாமலே செய்வேன். சிலவற்றை தவிர்த்தும் இருக்கின்றேன் அதில் சரியான ஆதாரமில்லாத கருத்தாக இருந்தால், நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாக இருந்தால். என் ஆரம்ப கட்டுரையும் தற்பொழுதுள்ள கட்டுரையைப் பார்த்தாலே வித்தியாசம் தெரியும்.--செல்வம் தமிழ் 05:21, 13 மே 2009 (UTC)
- செல்வம்: உங்கள் கட்டுரையை குறிவைத்து தாக்க வேண்டும் என்பது என் எண்ணம் அன்று! த வி என்னுடைய பங்களிப்புகள் அனைத்தும் சூழியல், வனம், விலங்குகள் மற்றும் சுற்றுப்புறம் சார்ந்ததே!(காண்க: விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகள்[[1]] இக்கட்டுரையும் என் ஆர்வ வட்டத்தில் வருவதால்தான் இக்கட்டுரையில் சில திருத்தங்கள் செய்தேன். தங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். த வி என்பது உலக தமிழர்களின் சொத்து ஒரு கட்டுரையை நாம் எழுதிய பின் அது பொது சொத்து ஆகிவிடுகிறது. நாம் எழுதிய கட்டுரைமேல் சொந்த பற்று வேண்டாத ஒன்று. நாம் அனைவரும் உலகில் உள்ள அனைத்து விடயங்களையும் தமிழில் தர முயலுவோர்கள். த வி யை இதற்கு ஒரு தளமாக பயன்படுத்துகிறேன். மேலும் இங்கு எழுதப்படும் கட்டுரைகளின் மீது நடக்கும் விவாதம் இக்கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த மட்டுமே எனக்கோ அல்லது வேறு நிருவாகிகளுக்கோ உங்கள் மீது தனிப்பட்ட முறையில் பகை ஒன்றும் இல்லையே. இன்னும் சொல்லப்போனால் உங்களின் பங்களிப்பைக் கண்டு நான் மிகவும் மிகைப்படைந்திருக்கிறேன்!!! உங்களின் எழுத்து முறை, கட்டுரைகள் வளரும் வேகம், வார்புருக்களில் தெரியும் விடா முயற்சி, ஒரு நாளில் த விக்கு நீங்கள் ஒதுக்கும் நேரம் என உங்களின் அனைத்து த வி செயல்களும் ஆச்சரியமும் மற்ற பயணர்களுக்கு ஊக்கமும் ஊட்டுபவை. இங்கு யாரும் தங்களைக் குறைக்கூறி பயண் ஏதும் பெருவதில்லை! தற்போதய த வி என்பது ஒரு சில குறைந்த எண்ணிக்கையிலான அதிக பங்களிக்கும் பயனர்களை பெற்றுள்ளது, அதிலும் பெரும்பாலோனர் நிருவாகிகள், அதனால் தான் உங்களுக்கு நிருவாகிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களை தாக்குவதாக தெரிகிறது; அப்படியேதுமில்லை. இங்கு யார் எந்த கருத்தைக் கூறினாலும் அது கட்டுரையின் தரத்தை உயர்த்த் மட்டுமே!!! தங்களுக்கு விருப்பம் எனில் தங்களை நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசியிலோ அழைத்தோ உரையாட நான் தயாராக இருக்கிறேன்.--கார்த்திக் 06:02, 13 மே 2009 (UTC)
நீர் நில வாழ்வன
தொகுநீர்நில வாழ்வன என்பது தவறான சொல் உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் இதை Amphibians என்று அழைக்கப்படுகிறது. Amphi=இரு bia = (Life)வாழ்க்கை எனப் பொருள்படும், அதாவது உயிரியல் பார்வையில் இருவகையான உடல்களைக் கொண்டு வாழும் உயிர்கள் எனப்படும். வாழ்வின் ஒரு பகுதி ஒரு வகையான உடல் அமைப்பைக் கொண்டும் மற்றொரு பகுதி வேறு ஒரு வகையான உடல் அமைப்பைக் கொண்டும் வாழ்வதாகும் (எ.கா: தவளையின் முதல் பருவம் தளைப்பிரட்டை. இப்பருவத்தில் மீனைப் போன்ற உடல் அமைப்பு உள்ளது. இரண்டாம் பருவம் வளர்ச்சி அடைந்த தவளையின் உருவம்). வெறும் நீரில் நிலத்திலும் வாழ்வது என்ற பொருள் மட்டுமே இருக்குமெனில் நீர் யானை, ஆமை, முதலை போன்ற விலங்குகளும் இதில் அடங்கும், ஆனால் இப்பிரிவின் கீழ் தவளைகள் (Frogs), தேரைகள் (Toads) மற்றும் குருட்டு புளுக்கள் (Caecilians) மட்டும் அடங்கும். இத்தவறு நம் தமிழ் நாட்டு பாடபுத்தகங்களில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தியோடர் பாசுகரனின் "இன்னும் பிறக்காத தலைபுறைக்காக" என்ற நூலிலும் முகமது அலியின் இயற்க்கை செய்திகளும் சிந்தனைகளும் என்ற நூலிலும் இவ்விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஈழத்திலும் ஈருடக வாழ்விகள் என்றோ அல்லது அதற்கு இணையான சொல் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆதாலால் நீர்நில வாழ்வன என்பதை ஈருடக வாழ்விகள் என்று மாற்றப்பரிந்துரைக்கிறேன்.--கார்த்திக் 11:11, 13 மே 2009 (UTC)
தமிழ் நாடு வனத்துறை அளிக்கும் விடயத்தை அப்படியே பதிய வேண்டும் என்று காட்டாயம் இல்லை செல்வம். வனத்துறைக்கு துறை வல்லுனர்கள் விடயங்களைக் கொடுப்பதில்லை, ஏதோ கோப்புகள் வேண்டும் என்று அவர்கள் யாரிடமாவது கொடுத்துக் செய்து கொள்வது. தமிழ் நாடு ENVIS உள்ள பாசிகள் சம்மந்தமான கோப்புகளில் உள்ள தவறுகளை நான் அவர்களிடம் சுட்டிக்காட்டிய பொழுது, அது யாரு செய்து கொடுத்தது ஆதாலால் அது பற்றிய விவரங்கள எங்களுக்கு தெரியது, அரசு ஆணைப்படி நாங்கள் இனையத்தில் பதிவேற்ற வேண்டும் ஆதலால் பதிவேற்றியுள்ளோம் என்று பதில் கூறினார்கள். நம்மில் இருக்கும் தவறுகளை நாம் திருத்திக் கொள்ள முனையவேண்டும் அரசு இயந்திரங்களில் அது நடக்க பல வருடங்கள் ஆகும். ஆதாலால் அதை தவறான விடயத்தை இங்கே கொடுக்க வேண்டாம் அல்லது யாரேனும் அத்துறை சார்ந்தவர் பிழைகளை திருத்தினால் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவேண்டாம்--கார்த்திக் 11:21, 13 மே 2009 (UTC)
அடைப்புக் குறிக்குள் வழிமாற்றுத்தான் இது விக்கியில் ஏற்கனவே உள்ளது தான். இது சாமான்யர்களின் புரிதலுக்காகவும் இந்த வழிமாற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரையிலும் உள்ளது. இதில் நீங்கள் இவ்வளவு அக்கறையும், விளக்கமும் தேவையேயில்லை. உங்கள் கட்டுரையில் வாசிப்பவர் வந்தால் எல்லாம் புரிந்துவிடும். சோலை மந்தி அதிகம் பயன் படுத்தாதச் சொல் நான் இதுவரை கேள்வி பட்டதில்லை. அவ்வளவுதான், நாம் பிறருக்காகத்தான் கட்டுரை எழுதுகின்றோம் அதுவும் பெரும்பான்மையினருக்காக, வனத்துறையும் ஆதாரமும் காட்டியுள்ளேன். அது தவறா? சரியா? என்பதை தனியொருவர் முடிவு செய்யமுடியாது. இதற்கு மேல் உள்ள அரசு ஆதாரங்களை வைத்துதான் முடிவு செய்யமுடியும். இப்பொழுது அதில் வழிமாற்று கொடுத்துள்ளேன் அது நேராக உங்கள் வலைப்பக்கம்தான் வரும் அதனால் மீண்டும் சர்ச்சை எழுப்ப வேண்டாம். இதோடு விட்டுவிடுவோம். உங்கள் தலைப்பு பெயரும் உள்ளது. இது நடுநிலையை காட்டுகின்றது. --செல்வம் தமிழ் 12:37, 14 மே 2009 (UTC)
- இதில் உங்கள் தலைப்பு அவர் தலைப்பு என்று எதுவும் இல்லை, செல்வம். எல்லாம் விக்கி கட்டுரைகள், அவ்வளவுதான். "சோலைமந்தி (சிங்கவால் குரங்கு)" என்று தந்தால் யார் பார்த்தாலும் அடைப்புக்குறிகளுக்குள் தந்துள்ளதால் ஈடான பெயர் என்று விளங்கும். இருக்கும் இணைப்பின் வழி சென்று பார்த்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று தெளிவாகும். இரண்டுக்கும் தனித்தனியாக இணைப்பு இருந்தால்தான் வெவ்வேறு விலங்குகள் என எண்ணும் வாய்ப்புண்டு. கார்த்தியின் தொகுப்பில் இவ்வாறு தவறு செய்திருந்தால் தயங்காமல் திருத்துங்கள். அவர் கட்டுரை என் கட்டுரை உங்கள் கட்டுரை என எதுவுமில்லை. -- சுந்தர் \பேச்சு 12:42, 14 மே 2009 (UTC)
குறும்பன் இதுவும் சரியான தமிழ்ச் சொல்தான் தவறான தமிழ் சொல் அல்ல. அகராதியில் உள்ளது. அது பழைய சொல் இது புதிய சொல் எல்லோரும் பயன் படுத்துகின்ற வழக்கு சொல் அவருடைய கட்டுரையிலும் உள்ளது. குரங்குக்கு பெயர் வைப்பது இப்பொழுது பெரிய சர்ச்சையாகி விடும் போலிருக்கின்றது.--செல்வம் தமிழ் 12:49, 14 மே 2009 (UTC)
- செல்வம், உள்ளடக்கத்தை மாற்றுவது என்பதைச் சர்ச்சையாக எண்ண வேண்டாம். இது நீங்கள் எழுதும் கட்டுரைகளை மட்டும் குறி வைத்து செய்யப்படுவதல்ல. பொதுவாக எவர் எழுதும் கட்டுரையானாலும் தொகுப்புச் சுருக்கதில் காரணத்தைக் குறிப்பிட்டுவிட்டு திருத்தங்களை நேரடியாக எவர் வேண்டுமானாலும் செய்வர். சிலர் தவறாகக் கொள்ள வாய்ப்பிருந்தாலோ விளக்கம் தேவைப்பட்டாலோ பேச்சுப் பக்கத்தில் செய்தி விடுவார்கள். காட்டாக மௌடம் கட்டுரையை நான் துவக்கி எழுதிக்கொண்டிருக்கும்போதே செல்வா முதல் வரியையே திருத்தி எழுதியுள்ளார். (இங்கு பாருங்கள்.) இதில் ஏதோ எனது நடையைக் குறைகூறுவதற்காகவோ எனக்கு இடைஞ்சல் செய்வதற்காகவோ செய்யப்பட்டதல்ல. உங்களைப்போலவே அவரது நோக்கமும் எனது நோக்கமும் மற்ற அனைவரது நோக்கமும் தமிழில் நல்ல கலைக்களஞ்சியத்தை எழுதுவது என்பது மட்டும் தான். அதனால் இவற்றைச் சர்ச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டாம், பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 12:59, 14 மே 2009 (UTC)
- செல்வம், மற்ற மாற்றங்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நிலநீர் வாழிகள் என்பதை மட்டும் ஈரூடக வாழிகள் என்று மாற்ற வேண்டுமென்று கருதுகிறேன். ஏனெனில் முதலை போன்ற விலங்குகளையும் தவறாக amphibians எனக் கருத நேரிடும். இந்த வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:29, 31 மே 2009 (UTC)
- தவிர தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைச்சொல்லகராதியிலும் ஈரூடக வாழிகள் என்பதை ஒரு மாற்றுப் பயன்பாடாகத் தந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 12:55, 31 மே 2009 (UTC)
- செல்வம், மற்ற மாற்றங்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நிலநீர் வாழிகள் என்பதை மட்டும் ஈரூடக வாழிகள் என்று மாற்ற வேண்டுமென்று கருதுகிறேன். ஏனெனில் முதலை போன்ற விலங்குகளையும் தவறாக amphibians எனக் கருத நேரிடும். இந்த வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:29, 31 மே 2009 (UTC)
பயனர் மற்றும் செல்வா குறும்பன் ஏனைய நிர்வாகிகளுக்கும்
தொகுஆங்கிலம் தெரியாதவர் அதை தெரிந்து கொள்வதற்குத்தான் தமிழில் எழுதுவது, நமக்குத்தான் ஆங்கில கட்டுரை பக்கத்திலேயே உள்ளதே. அப்படியே இருந்தாலும் ஆங்கிலம் தமிழ் வார்த்தையில் இருப்பது நல்லது தானே. பெரும்பாலும் நான் எழுதும் கட்டூரைகளில் இதையே பின்பற்றுகின்றேன். தமிழ் க்ட்டூரையில் இந்தியில் பாரத் என்று எழுதியிருந்தாலும் தமிழில் எழுதுவதில்லையா? மெத்த படித்தவர்கள் யாரும் தமிழ் பக்கம் யாரும் வருவதில்லை. (பொது மக்களில்).
சுந்தர் நீங்கள் மாற்றியது என்று தெரியாது நீங்கள் மாற்றியிருந்தால் பக்கத்திலேயே அந்த பெயர்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கலாமே. அரசு அறிவித்த பெயர்கள் தானே. அதற்கு மேற்கோள் காட்டிவிட்டு சென்றபின். நீங்கள் மாற்றினால் நீங்கள் தான் மேற்கோள்காட்டவேண்டும். (2008-2009) சட்டசபையில் வைத்து பல வல்லநர்கள் சரிபார்த்தபின் தானே வைக்கின்றனர் இல்லையென்றால் அது எதிர்க் கட்சியினரால் விமர்சிக்கப்படும் ஆடசி கவிழ்ப்பு கூட நடைபெற்லாம் பத்திரிகைகளாலும் விமர்சிக்கப்படும். இதில் பல படித்தவர்கள் சேர்ந்து தாயாரிப்பதால் இது தவறு என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியாது.
- செல்வம் நான் எதையும் நீக்கவில்லை. சிங்கவால் குரங்கு என்பதை மேலே தந்தபடி அடைப்புக்குறிகளுள் தந்துள்ளேன். பக்க வரலாறைப் பாருங்கள். தமிழ் எழுத்தில் Forest Department என்று நீங்கள் தந்திருந்ததைச் சொல்லுகிறீர்களா? அதை நீக்கியது கனகு. ஆங்கில எழுத்தில் தருவது தேடுபொறிகளுக்காக. தமிழ் தெரிந்தவர்களுக்குத்தான் வனத்துறை என்ற உடனே புரிந்து விட்டிருக்குமல்லவா? அவர்கள் 'ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்' என்று படிக்க வேண்டியதில்லையே? -- சுந்தர் \பேச்சு 14:15, 14 மே 2009 (UTC)
இதை தவறு என்று தெரிந்தால் இதை தயாரித்தவர் பணியிழந்துவிடுவார்.
நீங்களும் எங்கோ இருந்து தான் இவற்றுக்கான ஆதாரத்தை எடுக்கின்றீர்கள். சரியா? இயற்கையிலேயே உங்களுக்கு வந்தது கிடையாது. ஆனால் அது தான் சரி என்று கூறுகின்றீர்கள். ஒரு மேற்கோளை விட இன்னொரு மேற்கோள் சரியென்றால் அதைவிட பெரிய மேற்கோளை கொடுக்க வேண்டும். கீழ் நீதிமன்றம் என்றால் அடுத்து மாவட்டம், மாவட்டம் என்றால் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்றால் உச்சம். இப்படி ஏதாவது மாநில அரசை விட கூடுதலாக வைத்திருக்கின்றீர்களா?
அது மாநில அரசு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஒரு இணையத்தின் தமிழ் அதுவும் ஒரு சில விஷயங்களை மட்டும் தெளிவு படுத்துகின்றோம். அதையும் மேற்கோள் காட்டுகின்றேன். தமிழக அரசு கொள்கை கட்டுரை மிக நன்றாகத் தான் உள்ளது. எளியத் தமிழில் அனைவருக்கும் புரியும் படியாகத்தான் உள்ளது. அரசு ஆவணமே தவறு என்றால் நான் என்ன செய்ய முடியும். அரசு தவறு என்பது என்னிடம் தெரிவிப்பதால் என்ன பயன். எல்லாமே தவறு என்றால் நான் யாரை அளவு கோளாக நினைப்பது. நாளை ஏதாவது சர்ச்சை என்றாலும் அந்த கொள்கை குறிப்பை கை காட்டலாம். அப்படி என்றால் நீங்கள் சொல்வது மட்டுமே சரி மற்றது தவறு என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம். இதற்கு மேல் இருக்கவேண்டும். நீங்கள் கொடுப்பது இதை தயாரித்தவருக்கும் தெரிந்திருக்கும்.
மேற்கோளுக்கு என்ன விதிமுறை. மேற்கோள் இட்ட கட்டுரையை மாற்றலாமா? மாற்றிவிட்டு மீண்டும் மேற்கோள் இடாமால் செல்லலாமா? அப்படியென்றால் நான் வேலை பார்ப்பவர் ஆகி விடுகின்றேன். நீங்கள் முதலாளி ஆகிவிடுவின்றீர் நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றாலும அதைத்தான் உணர்த்தும். எந்த எந்த மேற்கோள்கள் சரி, எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை வரையறுக்கவும். பண்டையத் தமிழில் தான் கட்டுரை எழுத வேண்டுமா? எளியத் தமிழில் எழுதக் கூடாதா? என்ற வரையறையை விளக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். பண்டையத் தமிழ் தெரியாது தற்காலத் தமிழ்தான் தெரியும் இதெல்லாம் தெரிந்தால் நான் தட்டச்சு செய்யும் நேரம் மிச்சமாகும். நானும் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசித்துவிட்டு ஏதாவது திருத்தங்கள் செய்து கொண்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன். விளக்கவும். அடிக்கடி இப்படி நேர்ந்தால் நான் என்ன செய்வது? அகராதியல் உள்ளது எல்லாம் தவறா? அப்படி என்றால் யார் சொல்லுவது சரி?--செல்வம் தமிழ் 13:40, 14 மே 2009 (UTC)
- நீங்கள் எந்த மேற்கோளைக் குறிப்பிடுகிறீர்களென்று சொல்லுங்கள்? எது நீக்கப்பட்டது? ஈரூடக வாழிகள் என்பதா? காட்டுயிர்களைப் பற்றித் தமிழில் எழுதுபவர்கள் வெகு சிலரே. அவர்களுள் நன்கு அறியப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக எழுதி வருபவர்கள், ஆய்விதழ்கள், புத்தகங்கள், என வெளியிட்டுள்ளவர்கள் தியடோர் பாசுக்கரனும் முகம்மது அலியும். அவர்களது நூல்களில் தந்துள்ளதை மேற்கோளாகக் கார்த்தி மேலே காட்டியிருந்தார். (மேலும் தேவைப்பட்டால் உங்களை தொலைபேசியில் அழைத்து விளக்கம் தரவும் ஏற்புடன் இருந்தார்.)
- அரசு என்பது ஆட்சியில் முதன்மையானது. தமிழ் மொழி மற்றும் அறிவுசார் கருத்துகளுக்கு ஆய்விதழ்கள் துறை வல்லுனர்களின் நூல்கள் ஆகியன அரசின் இணைய தளத்தைக் காட்டிலும் சற்று வலுவான சான்றுகள். தவிர, விக்கிப்பீடியா என்பது பன்னாட்டுத் திட்டம். இதில் தமிழக அரசாணை என்பதை மேலும் ஒரு ஆவணமாக மட்டுமே கொள்ள முடியும். -- சுந்தர் \பேச்சு 14:15, 14 மே 2009 (UTC)
- செல்வம், இங்கு யாருடைய மேற்கோள்கள் பெரியது என்ற போட்டிகள் இல்லை. பங்களிப்பாளர்கள் அனைவரில் உங்களுக்கு சட்டம் சார்ந்த புரிதல் அதிகம் மேலும் உங்களை விட எவரும் ஆயுள் காப்பீட்டை பற்றிய கட்டுரையை மிக புரிதலுடன் எழுத இயலாது; ஏனெனில் உங்களுக்கு மேற்கூறிய விடயங்களுக்கும் அதிக தொடர்பு உண்டு அதை போல் வன உயிரிகளை ஆராய்ச்சி செய்வது தான் எனது தொழில் ஆதலால்தான் எனக்கு பிழை எனப்பட்டதை நிவர்த்தி செய்ய பரிந்துரைத்தேன் அவ்வளவுதான். இது தொடர்பாக மேலும் உரையாட நான் தயாராக இல்லை. எப்பொழுதும் வேண்டுமெனிலும் என்னுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உங்களின் தொலைபேசி எண்ணை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம் (மின்னஞ்சல்:diatomist@gmail.com)--கார்த்திக் 18:10, 14 மே 2009 (UTC)
ஆலமரத்தடிக்கு உரையாடலை நகர்த்தலாமா?
தொகுஇந்தப் பக்கத்தில் நீளும் உரையாடல்களுக்கு காரணமான மூன்று கருப்பொருள்களில் ஆலமரத்தடியில் கருத்துகளை இட்டுள்ளேன். உரையாடலை அங்கு தொடர்வோமா? ஒரு கட்டுரை / பங்களிப்பாளர் குறித்து அல்லாமல் பொதுவாக உரையாடுவது இன்னும் சுமுகமான உரையாடலுக்கு வழி வகுக்கும். நன்றி--ரவி 16:43, 14 மே 2009 (UTC)
சுந்தர் ஆரம்பத்தில் சிங்கவால் குரங்கு என்பதையே நீக்கிவிட்டார், மூன்று முறை நான் மீண்டும் மீண்டும் உள்ளிட்டும், இத்தனைக்கும் அடைப்புகுறிக்குள். அதை நீக்கியிருக்கிறீர்கள் அதற்குப் பிறகுதான் உள்ளிட்டீர்கள். நன்றாகப் பாருங்கள். ஆங்கிலத்தை பார்த்து நீங்கள் மாற்றவில்லை. ஆங்கிலத்தில் சோலைமந்தி என்றா போட்டிருக்கின்றது. வனத்துறையும் இதையும் ஒப்பிடும் பொழுது இது தவறான மொழி பெயர்ப்புத் தானே. அப்பொழுதும் சோலைமந்தியை நான் மாற்றவில்லை பதிலுக்கு வழிமாற்றுத்தான் செய்தேன் அப்பொழுதும் மாற்றினீர்கள் அடைப்புக் குறிக்குள் கொடுத்தேன் அப்பொழுதும் மாற்றுகிறீர்கள். விலங்கியல் பூங்காவில் அந்தப் பெயர் இருக்கின்றது என்கின்றேன் அதெல்லாம் தவறு தவறு நானே ஆக்ஸ்போர்டு என்றால் நான் என்ன செய்ய முடியும். இது வரை எத்தனை ஆதராங்களை குற்றம் சொல்லியிருக்கின்றீர்கள். ஆதாரங்களையே குற்றம் சொன்னவர்கள் நீங்கள் தான்.
சோலைமந்தி அது ஏதோ ஊர் பெயர் மாதிரி இருக்கின்றது. அதற்கு வழிமாற்று கொடுத்திருக்கின்றேன் விட்டுவடுங்கள் என்கின்றேன். நீங்கள் மக்கள் இரண்டு பெயர் இருக்கின்றது என்று நினைப்பார்கள் என்று கூறுகிறீர்கள் என் பார்வையில் மக்கள் இதைமட்டும் தான் 3 ம் வகுப்பு நான்காம் வகுப்பு வரை அல்லது தமிழ் மட்டும் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அறிவார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் பொழுது எனக்கு ஒரு நம்பிக்கை இருக்க்கூடாதா? நீங்கள் கொடுத்த பெயரை நான் நீக்கினேனா? மேற்கோள் கொடுக்காதபொழுதும். உங்களிடம் யாரோ தனிப்பட்ட முறையில் வனத்துறையில் தவறு என்க் கூறியதை மேற்கோள் எப்படி இடமுடியுமா? இது தேவையே இல்லை தமிழக அரசுத் துறை தமிழக அரசு இலட்சிணையை போட்டு விட்டு உங்கள் கொள்கை விளக்க்குறிப்பை எப்படி வெளியிட முடியும். வேண்டுமென்றாலெ நீங்கள் தலைப்பை மாற்றச் சொல்ல்லாம் தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் அடங்கியவை என்று. அப்படியில்லாமல் அந்த ஆவணமே தவறு எல்லாமே தவறு என்பது எப்படி நியாயம்? எல்லோரையும் விட என்க்குத் தான் தெரியும் நான் வேறு எங்காவது படித்தவற்றைத் தான் அரசும் கொள்கை குறிப்பில் போடவேண்டும் என்று கூறுவது போல்தான். ஒரு மேற்கோளை மாற்றினால் நீங்கள்தான் அதற்கு மேலான மேற்கோளை உள்ளிட வேண்டும், அப்படி உள்ளிடவில்லை என்றால் அதை மாற்ற எனக்கு உரிமையுண்டு என்று விக்கியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அரசு புத்தகம் தவறு, அரசு ஆவணம் தவறு, நீதிபதி தவறு, தீர்ப்பு தவறு, சட்டம் தவறு, சட்டம் விளக்கம் தவறு இது சற்று கூடுதலாக தெரியவில்லை? நீங்களும் யாராவது எழுதியதிலிருந்து தானே படித்திருப்பீர்கள் இயற்கையிலேயே உங்களுக்கு மட்டும் கடவுள், இயற்கை இந்த ஆற்றல் கொடுத்திருக்கின்றதா? அந்த புத்தகத்தை எழுதியவரும் எங்கோ பார்த்துதானே எழுதியிருப்பார் அவரும் இங்குள்ளவர்கள் எழுதியவர்களின் புத்தகங்களைப் பார்த்துதானே எழுதியிருப்பார். வனத்துறைக்கு வனத்துறை அமைச்சர் கையொப்பத்துடன் கொடுத்த ஆதாரங்களைத்தான் மேற்கொள் காட்ட முடியும். அதை தாயரித்தவர்கள் வனத்துறை, விலங்கியல் துறை , இ.ஆ.ப அலுவலர்கள், முனைவர்கள் இவர்கள் அமர்ந்து பலமுறை யோசித்து, உருவாக்கிய, மசோதா தானே சட்டசபையில் தாக்கல் செய்கின்றார்கள் அப்படி நிறைவேற்றியத் தீர்மானம் தவறு என்றால் நான் என்ன செய்ய முடியும்.
நீங்கள் இதை தவறு என்று எதிர்கட்சி தலைவருக்கு புகார் அனுப்புங்கள் இது பெரிய அளவில் வெடிக்கின்றாதா? இல்லையா என்று பார்க்கலாம்? தமிழக அமைச்சகத்துக்கு சரியாக எழுதகூடத் தெரியவில்லை என்ற விமர்சனம் வரும். குறைந்த பட்சம் நான் எழுதிய குறிப்பை வைத்து அதை அடைப்புக் குறிக்குள் வைத்துவிட்டு உங்கள் விள்க்கங்களை குறிப்பிட்டிருக்கலாம்.
நீங்களே யார் வேண்டுமானும் தவற்றை சுட்டி காட்டலாம் கூறியிருக்கின்றீர்கள். தவறு இருக்கின்றது நான் சுட்டிக் காட்டுவதில்லை. (தவறை சுட்டிக் காட்டும்பொழுதே நீங்கள் எதை விரும்புகறீர் என்று தெரிந்து விடும்) தினமும் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கும். உங்களை மாதிரி ஏட்டிக்கு போட்டி என்னால் செய்யமுடியாது.
இதுவே தவறு தான். இதே நிலைதான் அங்கேயும் கடைப்பிடிப்பீர்கள். நீங்கள் எல்லாமே தவறு, எல்லாருமே தவறு என்று வாதிடுபவரிடம் எந்த நியாயத்தையும் எதிர் பார்க்க முடியாது. திடீரென்று முடிவெடுக்கவில்லை நீங்கள் எதைஎதையெல்லாம் மாற்ற சொல்லியிருக்கின்றீர்கள். மக்கள் பயன் பாட்டில் இருக்கும் சட்ட சொல்லையே மாற்ற சொல்லுகின்றீர்கள். நாம் தான் ஒதுங்கி கொள்ள வேண்டும். நீங்களே ஒரு அகராதி ஆகிவிட்டபிறகு நான் என்ன சொல்லமுடியும். காலம்தான் பதில் சொல்லமுடியும். ஒருநாள் சொல்லும்.--செல்வம் தமிழ் 02:06, 15 மே 2009 (UTC)
- செல்வம், நான் மாற்றம் செய்தது உங்களுக்கு வருத்தமளித்திருந்தால் வருந்துகிறேன். எனினும் அது உங்களைப் புண்படுத்தும் நோக்கத்திலோ, அகந்தையாலோ செய்தது அல்ல. பழைய தமிழ் புதிய தமிழ் என்று பார்க்காமல் சரியான பயன்பாடு என்ற அளவில் செய்தேன். இருந்தாலும் அது உங்கள் பணிக்குத் தடையாக இருக்குமானால் நான் இதில் தலையிட விரும்பவில்லை. மேலும் அடுத்த சில நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். சிங்கவால் குரங்கு என்பதை அடைப்புக்குறிகளுக்குள் தந்துள்ளதை நான் நீக்கவில்லை, அதிலிருந்த இணைப்பு ஒரே கட்டுரைக்கு அடுத்தடுத்து உள்ளதால் வேண்டாமென்று நீக்கினேன். நீங்கள் விரும்பினால் பழையபடி மாற்றிக் கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:37, 15 மே 2009 (UTC)
மிகப்பெரிய தவற்றிலிருந்து மக்களை காப்பாற்றிவிட்டேன். இப்பொழுது திருப்தியா. அரசு கொள்கை விளக்கம் அதைப்பற்றி கவலைப்படவேண்டியது அரசு. நாம் ஏன் கவலைப்படவேண்டும். அந்த கட்டுரை அரசு கொள்கை விளக்கத்தைபற்றி. எனக்கொன்றும் விளங்கவில்லை. இதெல்லாம் எங்கு கொண்டுபோய்விடுமோ. இந்த இரண்டு சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. இது தெரியாமல் அரசு ஏன் குறிப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது சந்தேகம் அரசின் மேல்தான். நான் ஒருங்கிணைப்பாளனாகவே இருக்க விரும்புகின்றேன். கண்டுபிடிப்பாளனாக இருப்பதை விட இதுவே மேல். நான் இந்த கட்டுரையை மறந்து வெகு நாட்களாகின்றது.--செல்வம் தமிழ் 14:11, 31 மே 2009 (UTC)