பேச்சு:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள் என்பது பட்டியலாக வருவதால் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் எனும் தலைப்பில் தனிக்கட்டுரையாக்கலாம். தமிழ்நாட்டில் 500 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் அதைத் தனிக்கட்டுரையாக்குவதே சரியானது. இக்கட்டுரையில் பட்டியலிட்டால் மிக நீளமாக இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கட்டுரையில் கல்லூரி நிர்வாகம் (அரசு, அரசு உதவி, சுயநிதி)குறித்த பொதுவான கருத்துக்களைக் குறிப்பிடலாம். பொறியியல் கல்லூரிகளிலுள்ள பாடப்பிரிவுகள் குறித்த தகவல், சேர்க்கை, மாற்றம் போன்ற பொதுவான தகவல்களை மட்டும் சேர்க்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:07, 2 நவம்பர் 2010 (UTC)Reply

இணைப்புப் பல்கலைக்கழகத் தலைப்பு தேவை தொகு

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை எனும் ஐந்து பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இக்கட்டுரையில் ஐந்து பல்கலைக்கழகங்களின் பெயரில் தலைப்பும் அதன் கீழ் மாவட்டங்களை உள் தலைப்புகளாகவும் கொண்டு கல்லூரிகளின் பட்டியல் அமைக்கப்பட்டால் கட்டுரை சிறப்பாக அமையும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:15, 25 மே 2011 (UTC)Reply

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு" தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

Return to "தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்" page.