பேச்சு:தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்

அகா.... அருமையான எனக்கு பிடித்த கட்டுரை, மேலும் தகவல்களை எதிர் பாக்கிறேன்.... காரணம் நான் தமிழ் நாடு வரும் பொது இதன் படி ருசியா சாப்பிடலாம்.. இதில் ஊர்களின் பெருமையையும் கூறினால் நல்லாக இருக்கும்.. அதாவது சுருக்கமா. நன்றி --சிவம் 15:56, 8 அக்டோபர் 2012 (UTC)

தவறான தகவல்? தொகு

இக்கட்டுரையில் காய்கறி எனும் பெயரில் போடி - நூக்கில்ஸ் எனும் தகவல் நான் கேள்விப்பட்டதே இல்லை. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:01, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆமாம் சுப்பிரமணி நானும் கேள்விபட்டது இல்லை. இப்போதான் தேடி பாக்கும் பொது அப்படி ஒரு மரக்கறி இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அதன் தமிழ் பெயர் எனக்குத் தெரியவில்லை.--சிவம் 08:17, 9 அக்டோபர் 2012 (UTC)

சிவம், நான் குறிப்பிட்டது மரக்கறி நூக்கில்ஸ் அல்ல. நூக்கல் என்று அழைக்கப்படும் மரக்கறிதான் நீங்கள் குறிப்பிடும் மரக்கறி. ஆனால், போடி நகருக்கு நூக்கில்ஸ் சிறப்பு மரக்கறி உணவு என்று குறிப்பிட்டிருப்பது சரியான தகவலில்லை. ஏற்புடையதுமல்ல. போடியில் இலவம் பஞ்சு, ஏலக்காய் போன்றவைதான் சிறப்பு. போடியில் ஏலக்காய் விளையவில்லை எனினும், போடிமெட்டு மற்றும் கேரள மலைப்பகுதிகளில் விளையும் ஏலக்காய் ஏலவணிகத்திற்காகப் போடிக்குக் கொண்டு வரப்பட்டு, வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் போடியில் ஏலக்காய் தொடர்பான தொழில்கள் அதிகமுண்டு. இதைப் போல் இலவம் பஞ்சு உற்பத்தியும் ஓரளவு அதிகமுண்டு. நான் வளர்தொழில் இதழில் செய்தியாளராகப் பணியாற்றிய போது இவ்விரண்டைப் பற்றியும் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நூக்கல்/நூக்கில்ஸ் போடிக்குச் சிறப்பு என்பதற்கு ஆதாரமான தகவல் ஏதாவது இருந்தால் அதையும் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும். இல்லையெனில் அதை நீக்கம் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:21, 9 அக்டோபர் 2012 (UTC)Reply


ஆமாம் சுப்ரமணி. இந்த கட்டுரையை நான் வரையவில்லை, ஆனால் அதில் இருந்த பல கருத்துக்கள் எனக்குப் பிடித்திருந்தன அதனால் இங்கு பேசினேன்.--சிவம் 09:41, 9 அக்டோபர் 2012 (UTC)

Return to "தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்" page.