தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்

தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத் தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு, பழங்கள், காய்கறிகள் ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ்பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.

மரபு சமையல் வகைகள்

தொகு

இனிப்பு

தொகு
  • ஆற்காடு மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.
  • திருவண்ணாமலை பாயாசம் ,போலி, சுய்யான் உருண்டை ( உள்ளே பருப்பு , திணை மாவு வெள்ளம் கலந்த உருண்டையை வைத்து மேலே அரிசி மாவை கரைத்து தயாரிக்கப்பட்ட மாவில் தோய்த்து பொரிப்பது - ஒரு பண்டைய உணவு) .
  • காரைக்கால்குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைப்பாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வட இந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.
  • தூத்துக்குடி மக்ரூன்: தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • பாலவநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
  • வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பது
  • திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி : பனம்பாலில் சுக்கு சேர்த்து காய்ச்சி அச்சில் வார்த்த கருப்பட்டி
  • பட்டுக்கோட்டைநெய் அசோகா அல்வா: பாசிப்பருப்பு நெய் ஏலக்காய் ஜீனி சேர்த்து தயாரிக்கப்படும் சத்தான சுவையான இனிப்பு.

நொறுக்குத் தீனி

தொகு
  • அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • திருவண்ணாமலை எள்ளடை - அரிசிமாவு எள் கலந்து தயாரிக்கப்பதும் ஒரு பதார்த்தம் .
  • ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
  • காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி

பானம்

தொகு
  • திருவண்ணாமலை பாயாசம்: பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு பானம்.
  • கும்பகோணம் டிகிரி காபி : காப்பி பில்டரில் டிகாக்சன் வடிகட்டி திடமான பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்
  • மதுரை ஜிகிர்தண்டா : ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். சைனா கிராஸ் `ரோஸ் ஸிரப்', நன்னாரி சிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் பானம்
  • பட்டுக்கோட்டை மசாலா பால் :சுத்தமான பசும்பால் ,முந்திரிபருப்பு ,பாதாம் பருப்பு,மஞ்சள் தூள் .சுக்கு,ஏலக்காய் ,முதலியவை கலந்து தயாரிக்கப்படும்

சுவையான சூடான பானம்.

சாப்பாடு

தொகு

பிரசாதம்

தொகு

சமைக்காத உணவு

தொகு

பழங்கள்

தொகு

காய்கறி

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்பு

தொகு