பதநீர்
பதநீர் என்பது தென்னை, பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும். இது இனிப்புச் சுவையுடைய அல்ககோல் அற்ற பானமாகும். பதனீரிலிருந்து கள்ளு, கருப்பட்டி, வினாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல மதுவத்தினால் நொதித்தலடைந்து கள்ளாக மாறும். இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.
நீரா
தொகுதென்னை மரங்களின் மலராத பாளைகளில் அரிவாளால் கீறி சாறு வடித்து இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் நீரா தயாரிக்கப்படுகிறது.[1]தென்னை மரத்தில் இருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.[2][3]
பதனீரின் உள்ளடக்கம்
தொகுபதனீர் அதிகளவு மாப்பொருள் அடங்கிய நடுநிலையான காரகடித்தன்மை கொண்ட பானமாகும்.[4] இதன் உள்ளடக்கம் வருமாறு:[5]
சாரம் | செறிவு (g/100 mL) |
---|---|
சுக்குரோசு | 12.3 - 17.4 |
பொட்டாசியம் | 0.11 - 0.41 |
புரதம் | 0.23 - 0.32 |
அஸ்கோபிக்கமிலம் | 0.016 - 0.030 |
மொத்த திண்மக் கூறுகள் | 15.2 - 19.7 |
-
சாலை ஓரத்தில் பனை ஓலையில் பதநீர் விற்பனை செய்யப்படுகிறது
மேலும் படிக்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தென்னையில் இருந்து 'நீரா' உற்பத்தி தென்னை விவசாயிகள் சங்கம் வரவேற்பு". Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Honble Chief Minister chaired a review meeting on manufacturing and releasing a health drink Neera". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ நீரா பானத்தின் பலன்கள் என்ன?
- ↑ "Neera Board in Karnataka supports marketing". FoodIndustryIndia.com. May 21, 2007. Archived from the original on ஜூலை 11, 2011. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 6, 2011.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Preserved Coconut Sap". பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு. April 2005. Archived from the original on 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2011-02-06.