பேச்சு:தமிழ் வலைப்பதிவு
இக்கட்டுரை விக்கிப்பீடியா தரத்திற்கு ஏற்றதல்ல என்று கருதுகின்றேன். --ஜெ.மயூரேசன் 07:56, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
இதே போல் ஒரு பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் உள்ளது. அதனால் இது விக்கிப்பீடியா தரத்திற்கு உகந்ததே.ஆங்கில வலைப்பதிவுகளின் பட்டியல்--Wwwsenthilathiban 08:07, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- ஆங்கில விக்கி விதிகளின் படி பட்டியலில் இடம்பெறும் ஒவ்வொரு வலைப்பதிவுக்கும், தனித்தனியே விக்கியில் கட்டுரை இருக்கவேண்டும் (அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தைப் பாருங்கள்). அதாவது, பகுப்பு செய்யும் வேலையை, பட்டியல் கட்டுரையும் செய்யலாம். ஆனால் இந்தக் கட்டுரை வெளியிணைப்புகளையே தருகிறது. எனவே இக்கட்டுரை த. விக்கிக்கு ஏற்றதல்ல.--சோடாபாட்டில் 08:09, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- அதிலும் முக்கியமாக ஒருவரின் சொந்த வலைப்பதிவுகளை அவரே சேர்த்தர் கூடாது. conflict of interest/promotion ஆகிய விதிகள் அங்கே கடுமையாக உள்ளன. இங்கும் அதைப் பின்பற்றுவதே நலம்.--சோடாபாட்டில் 08:11, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
இது ஒரு தொடக்கமே! ஒரே நாளில் அனைத்து வலைப்பதிவுகளையும் இந்தப் பக்கத்தில் இணைப்பது என்பது இயலாத காரியம். இனி வரும் காலங்களில் இந்தப் பககத்தில் பல வலைபபதிவுகள் இணைக்கப்பட்டு வளர்ச்சி பெறும் என நினைக்கிறேன். --Wwwsenthilathiban 08:15, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- செந்தில், குறைவான வலைப்பதிவுகள் உள்ள்ன என்பதல்ல குறை. பட்டியல் கட்டுரை என்றால், பட்டியலிடும் விஷயங்கள் அனைத்துக்கும் தனித்தனியே கட்டுரைகள் இருக்க வேண்டும். மொத்தம் இரண்டாயிரத்து சொச்சம் தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. அவை அனைத்தையும் இதில் இணைக்க இயலாது. இக்கட்டுரை விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதல்ல.--சோடாபாட்டில் 09:19, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- விக்கியில் உரையினூடே வெளி இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும். தவிர, பட்டியல்கள் கட்டுரைகளின் பட்டியல்களாகவே இருக்க வேண்டும். இப்பக்கத்தை நீக்குவது தான் சரியாகும். பார்க்க: en:Wikipedia:NOT#DIR, en:Wikipedia:LIST#Information, விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று-- சுந்தர் \பேச்சு 09:46, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
சரி. இதில் வெளி இணைப்பு அல்லாமல் வெறும் பெயர்களை மட்டும் கொடுக்கலாமா! அப்போது விக்கிப்பீடியாவின் விதிகளுக்கு இந்தக் கட்டுரை கட்டுப்படும் தானே. இணைப்பு முக்கியமல்ல, இத்தனை வலைப்பதிவுகள் தமிழிலும் உள்ளன் என்பதை காட்டவே இந்தக் கட்டுரை தொடங்கப்பட்டது. வெறும் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்ட கட்டுரை அல்ல இது. --Wwwsenthilathiban 14:40, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
- செந்தில், உள் இணைப்புகள் (தனி விக்கி கட்டுரைகள்) இல்லாமல் தனிப் பட்டியலும் கூடாது. இக்கட்டுரையில் இருக்கக் கூடியன - தமிழில் முதலில் எப்பொழுது வலைப்பதிவு தொடங்கப்பட்டது, வலையுலக வரலாறு, திரட்டிகள், பட்டறை பற்றிய செய்திகள், தரவுகள் (பதிவுகளின் எண்ணிக்கை, இந்திய மொழிகளில் தமிழ் வலைப்பதிவுகளின் நிலை போன்றவை), ஊடகங்களில் வலைப்பதிவுகள் பற்றிய பத்திகள் போன்றவை. --சோடாபாட்டில் 14:50, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
இப்பகத்தை தமிழ் வலைப்பதிவு க்கு வழிமாற்றினால் என்ன?? --ஜெ.மயூரேசன் 10:53, 1 செப்டெம்பர் 2010 (UTC)
- வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:07, 1 செப்டெம்பர் 2010 (UTC)